ஆனால் இப்போதே இருபது கோடி ரூபாய் நஷ்டம் என்று சொல்கிறார்கள் .
அய்யய்யோ அது எப்படிங்க ? என்று கேட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் கணக்கு இதுதான் .
‘படத்தின் பட்ஜெட் நாற்பது கோடி. படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியை நீக்கி விட்டால் யூ சர்டிபிகேட் தரலாம் இல்லை என்றால் யூ ஏ தான் தரமுடியும் என்று சென்சார் போர்டு சொல்ல , அதை நீக்கினால் படத்தின் அழுத்தம் பாதிக்கப்படும் என்று முடிவு கட்டிய விஷாலும் ஹரியும் அந்தக் காட்சி இருக்கட்டும் என்று கூறி விட்டார்கள் .
அதனால் வரிவிலக்கு கிடைக்காது என்று ஆகிவிட்ட நிலையில் படம் இருபது கோடி ரூபாய்க்கு மட்டுமே பேசப்பட்டு இருக்கிறது . அதுவும் டிஸ்ட்ரி பியூஷன் முறைப்படி !
இதன்படி படம் ஓடினால் மட்டுமே இந்த இருபது கோடி ரூபாயும் வரும் .
ஆக எப்படிப் பார்த்தாலும் இன்றைய நிலைப்படியே பூஜை படத்தின் நஷ்டம் இருபது கோடி’ என்று சொல்லிவிட்டு “கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் ” என்கிறார்கள் .
இந்த நிமிஷம் வரை கத்தி படத்துக்கு ரிசர்வேஷன் ஆரம்பிக்காமல் இருப்பது பூஜை படக்குழுவை சப்புக் கொட்ட வைக்கிறது . சோலோவாக இறங்கினால் சுருட்டிவிடலாம் என்பது அவர்களது ஆசைக் கனவு .
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்