கோவையில் டெக்ஸ்டைல் மில் நடத்தும் பணக்கார கூட்டுக் குடும்பத்தின் பிள்ளையான விஷாலோடு, வயதுக்கு வந்த அத்தை மகள் அபிநயா ‘விளையாட’ முயன்று இருவரும் பிடிபட, பெண்ணின் வாழ்க்கை போகும் என்பதால் பழியை, தான் ஏற்கிறார் விஷால் . அதனால் அம்மா ராதிகா மகனை ஒதுக்கி வைக்கிறார் . நகரத்தில் வந்த இடத்தில் சுருதியோடு லவ். அங்கே அன்னம் பைனான்ஸ் என்ற பெயரில் வட்டிக்கு விடும் தாதாவோடு சண்டை . இடையில் போலீஸ் அதிகாரி சத்யராஜை கொலை செய்ய தாதா முயல அவரை காப்பாற்றி அவரது அன்புக்கு பாத்திரமாதல்!
சொந்த ஊரில் குலதெய்வக் கோவில் விவகாரத்தில் பலி தீர்க்க முயலும் அதே வில்லன் பாட்னாவில் உள்ள பெரிய தாத்தாவிடம் தொழில் கற்றவான். உலகம் முழுக்க கூலிப்படை வைத்து இருக்கும் கொடூர நபர் .
அம்மாவைப் பிரிந்து வாழ்ந்த இடத்தில் விஷாலோடு மோதும் அதே வில்லன் ஊரில் குல தெய்வக் கோவில் விழாவில் விஷாலின் மரியாதைக்குரிய சித்தப்பாவை ஆள் வைத்து அடித்து அவமானப்படுத்துகிறான் . இப்படி எல்லா விதத்திலும் முட்டிக் கொள்ளும் விஷால் மற்றும் வில்லன் இருவரும் வேட்டி உருவும் சண்டை வீச்சரிவாள் சண்டை என்று விதம் விதமாய் மோதுகிறார்கள் .
செம அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் எதுவுமே நடக்காதது போல பிரெஷ்ஷாக வந்து சூரி பேசுவதும் , உரிமை உள்ள இடத்தில் கூட அதை கொஞ்சம் மட்டுமே பயன்படுத்தும் சுருதியின் குணாதிசயமும் மட்டுமே படத்தில் குறிப்பிடும்படி இருக்கிறது.
அதுக்காக மட்டும் படம் பார்க்கும் நம்மால எவ்வளவுநேரம்தான் எவ்வளவு தூரம்தான் தாங்க முடியும்?