மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் சார்பில் மனஸ்வினி வழங்க, ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக இருந்த பிரவின் என்பவர் கதை திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கும் படம் போர்க் குதிரை,
1980களின் கால கட்டத்தில் உசிலம்பட்டிக்கு போகும் காளி என்ற இளைஞன்அந்த ஊரில் எந்த மாதிரி அனுபவங்களை சந்திக்கிறான் .. அந்த அனுபவங்களை அவன் எவ்வாறு போர்க் குணம் கொண்டு சந்திக்கிறான் என்பதுதான் இந்த போர்க்குதிரை படத்தின் கதையாம்.
இப்படியாக ”ஓர் அப்பாவி இளைஞனுக்கும் சில அராஜகக்காரர்களுக்கும் இடையே நடக்கும் போரை சொல்லும் அதே நேரம், அந்த காலகட்டத்தில் காதல் எந்த அளவுக்கு உயர்வாக இருந்தது … குடும்பங்களில் அண்ணன் தங்கை அக்கா தம்பி அம்மா அப்பா பாசம் எந்த அளவுக்கு உன்னதமாக இருந்தது என்பதையும் ஒரு அழகான காதல் , நட்பு, வியக்கவைக்கும் யதார்த்தமான சண்டைக் காட்சிகள் இவற்றோடு இந்தப் படம் சொல்லும்” என்கிறார் இயக்குனர் .
படம் சொல்லும் 1980களின் காலகட்டத்துக்கு ஏற்ப, படத்தில் உடைகள் பொருட்கள் பாடல்கள் காட்சி அமைப்புகள் ஆகியவற்றை சிரத்தையோடு சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்களாம்
படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான பிரவீன் குமார் ராம் கோபால் வர்மாவின் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு, வர்மாவின் தயாரிப்பிலேயே தெலுங்கில் ஜெகபதி பாபு விமலாராமன் நடிக்க இளையராஜா இசையில் ‘காயம் 2 ‘என்ற படத்தை இயக்கியவர் . இரண்டாவது படமான இந்த போர்க்குதிரை படத்தை தமிழில்தான் இயக்கவேண்டும் என்று முடிவு செய்து வந்தபோது , கதைக்கேற்ப உசிலம்பட்டி பின்னணியை அமைத்துக் கொடுத்தவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் படத்தின் வசன கர்த்தா மற்றும் இணை இயக்குனருமான திரைப்படக் கல்லூரி மாணவர் கல்யாண ரமேஷ் .
கிளாசிகல் நடனம் கற்று பல குறும்படங்களில் நடித்து இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் சைதன்யா படத்தில் நடித்த போது சண்டைக் காட்சிகளில் பல இடங்களில் நிஜமாக அடிபட்டு காயம் அடைந்தாராம் (காயம் 3?)
பாக்யராஜால் சித்து பிளஸ் டூ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாந்தினி இந்தப் படத்தின் கதாநாயகியாக அப்பாவித்தனமான பிராமணப் பெண் கேரக்டரில் நடித்து இருக்கிறார் . தங்கர் பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் மூலம் தமிழில் அறிமிகமாகியதோடு அண்மையில் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் வில்லனாக நடித்த நாகி நீடு இந்தப் படத்தில் கதாநாயகனின் தந்தையாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
பல்வேறு நாடுகளுக்கும் சென்று மேடை நாடகங்களில் நடித்துள்ள கவிதா சீனிவாசன் இந்தப் படத்தில் எதற்கும் அஞ்சாத தைரியமான ஒரு பெண் கேரக்டரில் நடிக்க, போஜ்பூரி படங்களில் கதாநாயகனான நடித்துக் கொண்டிருக்கும் பங்கஜ் என்பவர் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் .
படத்துல வில்லி கேரக்டர் எதுவும் இல்லையா தர்சகுடு?..
இருந்தா அப்படியே ஒரு போஜ்புரி கதாநாயகியையும்…….