தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

IMG_1828

நடனம், நடிப்பு இயக்கம் என்று சினிமாவின் அடுத்தடுத்த படிகளில் அழுத்தமாக ஏறும் பிரபுதேவா அடுத்தபடியாக….. அதாவது அடுத்த, படியாக தயாரிப்பாளர் ஆகிறார் . 

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ் (Prabhu Deva Studios) என பெயர் வைத்துள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே மூன்று படங்களை தயாரிக்கிறார் .

IMG_1776

முதல் படம் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் படம் .  பிரியதர்ஷனின் உதவியாளராக தனது சினிமா கேரியரைத் துவங்கிய இயக்குனர் ஏ.எல். விஜய் தனது திங்க் பிக் நிறுவனம் மூலம் இந்தப் படத்தில் இணைகிறார் .

விஜய் சார்பில் அவரது மனைவி அமலா பால், 

IMG_1797

இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் இன்னொரு  தயாரிப்பாளராக செயல்படுகிறார். ஆக குருநாதர் பிரியதர்ஷன் இயக்கும் படத்தை அவரது சிஷ்யர் ஏ எல் விஜய் இயக்குகிறார் .

இரண்டாவதாக , ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக் கூட்டணியான ஜெயம் ரவியும் இயக்குனர் லட்சுமணனும் இணையும் படம் .

IMG_1782

இதன் எடிட்டர் இப்போது நைட்ஷோ படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகி இருக்கும் ஆண்டனி .

மூன்றாவது படம் இயக்குனர் ஏ எல் விஜய்யின் உதவியாளர் விக்டர் இயக்க, நைட்ஷோ படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வருண்  நடிக்கிறார் . இவர் மறைந்த அமரர் எம் ஜி ஆரின் தீவிரத் தொண்டராக நடிகராக இருந்து அமைச்சரான ஐசரி வேலனின் பேரன் . ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவருமான  ஐசரி கணேஷின் சகோதரியின் மகன்.

IMG_1805இந்தப் படத்துக்கு  வினோதன் என்று பெயர் வைத்துள்ளனர் . ஒரு உடல் மற்றும் மனநலக் குறைபாடு உள்ள இளைஞனின் வாழ்வில் அதனால் எப்படி எல்லாம் முன்னேற்றம் கெடுகிறது என்பதை சொல்லும் படமாம் இது.

இரண்டு மூன்றாவது படங்களுக்கு இசை இமான் . “எடுத்த எடுப்பிலேயே எனக்கு இரண்டு படங்கள் கொடுத்து இருக்கும் பிரபுதேவாவுக்கு நன்றி ” என்றார் இமான் .

பிரபுதேவா பேசும்போது ” வித்தியாசமான சிறப்பான கதைகளையும் வெற்றிக் கூட்டணிகளையும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையைத் தரும் கூட்டணிகளையும் தேர்ந்தேடுத்துளேன் . எனக்கு ஜெயம் ரவியை ரொம்பப் பிடிக்கும் . அவர் எனது உடன்பிறவா சகோதரர். 

நடிக்கப் போனால் ஷூட்டிங் சமயத்தில்தான்  டென்ஷன் வரும் . டைரக்ஷன் செய்யப் போனால் ஷூட்டிங் எல்லாம் முடிந்து எடிட்டிங்குக்கு உட்காரும்போதுதான் டென்ஷன் வரும். ஆனால் படம் தயாரிக்கும் என்று அறிவிப்பு கொடுக்கும்போதே டென்ஷன் வருது. ஆனாலும் செய்யறதா முடிவு பண்ணிட்டேன்.

IMG_1821

சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. முதலில் தமிழில் ஆரம்பிக்கிறோம் . ஏன்னா இதுதான் நமக்கு தெரிஞ்ச இடம் . மெல்ல மெல்ல தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, ப்ராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று  தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும்.

நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து  வெவ்வேறு இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக  ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’செயல்படும்” என்றார் பிரபுதேவா . 

சும்மா ஆடுங்க .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →