ப்ரியா ஆனந்த்– ஒரு exclusive express

priya anand
priyaanand
மனம் விட்டு பேசலாமா?

பிரியா ஆனந்துடன் ஒரு  பிரத்யேக உரையாடல்

பிரியா ஆனந்த் என்ற பேரிலேயே பின்புலமாக  இருக்கும் ஆனந்த் பற்றி …
என் அப்பா.
அவரோட அப்பா தெலுங்கு , அம்மா மாராத்தி  .
தமிழ்ப் பெண்ணான தனது மனைவியோடு , அதாவது என் அம்மாவோடு அமெரிக்காவில் இருக்கார் அப்பா.

கைவசம் உள்ள படங்கள் …?

வை ராஜா வை , இரும்புக் குதிரைகள், ஒரு ஊருல ரெண்டு ராஜா .
இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்

டான்ஸ் பண்றது .. பைட் பண்றது .. நடிக்கும்போது எது சந்தோஷமா இருக்கும் ?

கேமரா முன்னாடி நின்னுட்டாலே புடிக்க ஆரம்பிச்சுடும்.
இது அதுன்னு பிரிச்சு சொல்லத் தெரில

முக்கிய பொழுதுபோக்கு ?

சினிமா பாக்குறதுதான்.
எல்லா படங்களையும் அது ரிலீஸ் ஆகற அன்னிக்கே தியேட்டர்ல பாக்கணும் .
அதான் எனக்கு முக்கிய  பொழுதுபோக்கு

priya anand
மனம் ‘திறந்து’ பேசலாமா?

இதுவரை எத்தனை லவ் புரபோசல் வந்திருக்கு ?

ஃபேஸ்புக்லயும், டுவிட்டர்லையும் வர்றதை எல்லாம் கணக்கு பண்ணினா அது பெரிய லிஸ்ட்.
நேர்ல பலபேர் ”உங்க மாதிரி அழகான பொண்ண பார்த்ததே இல்லை .
எங்கம்மாவுக்கு உங்கள மாதிரிதான் மருமகள் வரணும்’…
அது இதுன்னு னு என்னென்னவோ சொல்வாங்க .
சாரி சொல்லிட்டு என் வேலையைப் பார்த்துட்டு போய்டுவேன்

கோலம் போடத் தெரியுமா ?

பெரிசு பெருசா சூப்பரா போடுவேன் .
இந்த பதிலை நீங்க எதிர்பார்க்கலதானே? (சிரிக்கிறார்)

உங்களை கட்டாயமா சண்டை போட வைக்க என்ன பண்ணனும்?

இன்னொருத்தர் அவங்க வேலையே ஒழுங்கா செய்யாததால என் வேலை கெட்டுப் போனா……

ஆய்…. ஊய்….

சண்டை சர்வ நிச்சயம்

என்ன சொல்லி மன்னிப்பு கேட்டா சமாதானம் ஆவீங்க ?

சும்மா சாரின்னு சொல்லிட்டுப் போறதுன்னு கடமைக்கு மன்னிப்பு கேட்கக் கூடாது .

என் கோபம் நியாயம் என்பதை அவங்க உண்மையா உணர்ந்ததும் அவங்க பண்ணின தப்புக்கு அவங்க வருத்தப்படுறதும் அவங்க வார்த்தைகள்ல தெரியனும் .

அடுத்த நிமிஷம் முழுசா சமாதானம் ஆயிடுவேன்.

அடிக்கடி விளையாடும் விளையாட்டு ?

விளையாட்டா ? அப்படீன்னா?

நமக்கு அந்த ஏரியா ஒப்பன் ஆகவே இல்லப்பா.

priya anand
மனம் குவிந்து பேசலாமா?

பிரியா ரொம்பக் கோபக்காரப் பொண்ணுன்னு சொல்றாங்களே…

அப்படியா ? இல்லியே  ?

நான் எப்பவுமே சிரிச்சுகிட்டு  சந்தோஷமா இருக்குற பிரண்ட்லியான பொண்ணு .

அதுக்காக கோபப் படவேண்டிய இடத்துல கோபப் படாம இருந்தா அப்புறம் சுய மரியாதை என்னாகும் ?

அப்படிப் போடும்மா  அருவாள …

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →