அந்த மைதானத்தை ரொம்ப காலமாகப் பயன்படுத்தி வரும் குடும்பங்களின் பாரம்பரியத்தில் வந்த — கம்யூனிசப் பின்னணி கொண்ட — எம் ஜி ஆர் பாடல்கள் கேட்டு வளர்ந்த இளைஞன் புகழ் (ஜெய்),
மற்றும் அறிவார்ந்த இயக்கத் தோழர் (கவிஞர் பிறைசூடன்) மற்றும் நண்பர்கள் அதை எதிர்க்கிறார்கள் .
புகழின் நண்பன் ஒருவனை பிரித்து, கைக்குள் போட்டு அதை சாதிக்க முயல்கிறார் சேர்மேன் .
இதற்கிடையில் நேர்மையான தைரியமான இளம் பெண் ஒருத்திக்கும்(சுரபி) புகழுக்கும் காதல் .
சுவர் விவகாரம் … அடச்சே மைதான விவகாரம் சீரியசாகும்போது சண்டைகள் , கொலைகள் , அடிதடிகள் ,காதல் கல்யாணம் வரை போவதில் பல வழக்கமான புளித்துப் போன சிக்கல்கள்
எல்லாம் மீறி சுவர் , அட சேச்சே ..,.! மைதானம் மீட்கப் பட்டதா இல்லையா ? என்பதுதான் புகழ் .
என்பதோடு கதையை முடிச்சுக்குவோம் . இதுக்கு மேல விளக்கமாக சொன்னால் இது மெட்ராஸ் படத்தின் உல்டாவா என்று நீங்களே கேட்பீர்கள் .
ஜெய் வழக்கம் போல கேரக்டரில் பொருந்தி இருக்கிறார் . ஆடல் , அடிதடி இரண்டும் நன்றாக செய்து இருக்கிறார். புகழின் அண்ணனாக வரும் கருணாஸ் தவிப்பான நடிப்பில் சபாஷ் வாங்குகிறார் .
சில இடங்களை புகழின் நண்பனாக வரும் ஆர் ஜே பாலாஜியின் கமெண்டுகள் சிரிப்பை வர வைக்கின்றன .
ஆனால் ஒரு படத்துக்கு இவை மட்டும் போதுமா ?
நண்பன் எலெக்ஷனில் நிற்கிறான் என்று காட்சி வந்த உடனே, மொத்த கதையும் புரிந்து விடுவதால் , படம் அங்கேயே கவுந்து போச் !
சரி… ‘சொல்லும் விதத்தில் எதாவது சிறப்பாக ஈர்ப்பாக உணர்வுப் பூர்வமாக சொல்வார்கள்’ என்று பார்த்தால், செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்த கதையாக கடமைக்கு நெளிகிறது படம் .
புகழின் கேரக்டருக்கும் பாண்டிச்சேரி சரக்கு பற்றி அவர் பாடும் பாடலுக்கும் என்ன ஒற்றுமை என்று மைக்ராஸ்கோப் வைத்து ஆராய்ந்தாலும் மைக்ரேன் தலைவலிதான் மிச்சம் !
சுரபி இனி வறண்ட வாய்க்கால்தான் . இனி அவரை யாரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகக் கூட கூப்பிட மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரை, காட்டக் கூடாத கோணங்களில் எல்லாம் காட்டி பிச்சு எறிஞ்சிட்டாங்க.
இதுக்குப் பின்னாடி எதோ சதி இருக்கு சுரபி !
பின்னணி இசை யாரோ ரெண்டு தம்பிக போட்டு இருக்காக . அவங்களுக்கு வீட்ல எதாவது பிரச்னை இருக்கலாம் . அதுக்காக? படம் பாக்கறவங்க பாவம் இல்லையா ? ஏன் தம்பிகளா ஏன் ?
படத்தில் தாஸ் கதாபாத்திரம்தான் முதுகெலும்பு . அவன் ஒரு அயோக்கியன் . ஆனா அவனின் சோகம், பிரச்னை எல்லாம் இந்தக் கதைக்கு எதுக்குங்க ?
அவன் அப்பாவியா ? அயோக்கியனா ? முடிவு பண்ணிட்டு ஷூட்டிங் போய் இருக்க வேண்டாமா ?
ஒரு பொதுப் பிரச்னையை எடுத்து கதை செய்யும்போது, அந்தப் படம் பார்க்கும் ரசிகன், ‘நமக்கு இப்படி ஒரு பிரச்னை வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ?
இது நமக்கும் நேரலாம் என்னும்போது நம்மால் சமாளிக்க முடியும் என்ற வகையில் அந்தப் படத்தில் எதாவது சொல்லுவாங்களா?’ என்றுதான் எதிர்பார்ப்பான் .
படத்துல வர்ற ஜெய் மாதிரி, விதம் விதமான ஆயுதம் வச்சிருக்கும் நூத்தி சொச்சம் பேரையும் வரிசையா கியூவில வரச் சொல்லி , ஒரே ஒரு அரிவாளை வச்சுகிட்டு சரக் சரக்குன்னு சீவி விட்டு,
‘மருந்து(போடறது)’க்கு ஒரு சின்ன காயம் மட்டும் வாங்கித் தப்பித்து, நீதியை நிலைநாட்ட, எல்லோராலும் முடியுமா ?
யதார்த்தமான பிரச்னைக்கு அசட்டுத்தனமாக அக்ஷன் கிளைமாக்ஸ் வைத்து மக்களை ஏய்க்கும் அயோக்கியத்தனத்தை இனிமேலாவது நிறுத்துங்கப்பா !
புகழ் … பூனை போட்டுக் கொண்டு சூடு