கதை மீது நம்பிக்கை வைத்த புலி

Puli-mag-02
எஸ் கே டி பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்க, விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் நடிப்பில் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருக்கும்  புலி படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. விரைவில் பாடல் வெளியீடு நடக்க இருக்கிறது. அதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது , படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குழு . puli press meet (5)

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், ” விஜய் சார் என்னையும், ஷிபு அவர்களையும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க சொல்லி அதில் நடிக்க ஒப்புக் கொண்டது. அதேமாதிரி சிம்புதேவன் சார் இந்த மாதிரி ஒரு அற்புதமான கதையை எடுக்க முன்வந்தது…  இவை இரண்டும் எங்களால் நம்ப முடியாத ஒரு சந்தோஷமாகவே இருக்கிறது.
புலி படத்துல இதுவரை இணையாத ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம்  சேர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் என இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் படத்தின் கதைதான்.  இதுவரை விஜய் படத்தில் இல்லாத ஒரு பிரம்மாண்டத்தை நீங்கள் இந்த புலி பார்க்கப்போகிறீர்கள்.
puli press meet (7)
ஸ்ரீதேவி மேடத்தை  இந்த படத்தில்  நடிக்க நாங்கள் அழைத்தபோது அவர் ‘தமிழ் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தப் போவதில்லை’என்றுதான்  கூறினார். அதன்பின் போனி கபூரிடம் பேசி ஸ்ரீதேவியை சந்தித்து சிம்புதேவன் கதையை கூறிய பிறகு ‘இந்த படத்தில் நான் நடிக்கவில்லையென்றால் அது தவறாகிவிடும்’ என்று கூறி,  புலி படத்துடன்  இணைந்தார்.  படத்தின் கதைஅப்படி.
அடுத்ததாக புலி படத்துல ஆர்ட் டைரக்ஷன் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் இதற்கு கலை இயக்குநர் முத்துராஜ்  அவர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மஹதீரா, நான் ஈ படங்களுக்கு கிராஃபிக்ஸ் அனிமேஷன் செய்த கமல் கண்ணன் இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். புலி படத்தின் கிராஃபிக்ஸ் 6 நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது.” என்றார்.
இன்னொரு தயாரிப்பாளரான ஷிபு தமீம் “புலி படத்திற்கான வேலைகள் 2014ம் ஆண்டும் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது, சிம்பு தேவன் படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்று செய்தி வெளியான அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் இணையதளங்களின் ஆதரவு என்னால் நம்ப முடியாதளவுக்கு இருக்கிறது.
இதற்கு காரணம் இளைய தளபதி ,  பி.டி.செல்வகுமார் பத்திரிக்கையாளர்களிடையே வைத்திருக்கும் நல்லுறவு மற்றும் சிம்பு தேவன் பத்திரிக்கை துறையிலிருந்து வந்தது, இவைதான் .
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நாடறிந்த நடிகர் ஆகி விட்டார் . ஆனால் இந்த புலி   படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு செய்யணும்’ என்று விஜய் சார் சொன்னதுமே ஒப்புக் கொண்டார் “என்றார்
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தன் பேச்சில் “துப்பாக்கி படத்துல நான் ஒரு பாட்டுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்தேன் அப்போதே விஜய் சார் என்னை அழைத்து ‘கூடிய விரைவில் ஒரு புதுமையான கதையம்சத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன் அந்த படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு’ என்று கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.
அதன்பின் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து இயக்குநர் சிம்புதேவனிடம் கதையை கேட்க சொன்னார் நானும் கதையை கேட்டதும் சந்தோஷமாக சம்மதித்தேன்.  இப்படி ஒரு சுவாரஸ்யமான கதையில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் புலி திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளது.
puli press meet (11)
தயாரிப்பாளர்களை பற்றி நான் கூறியாக வேண்டும் 2015ம் ஆண்டு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது புலி படம்தான். எனக்கு என்ன சாதனங்கள் வேண்டுமென்றாலும் அதனை உடனே வரவழைத்து கொடுத்தார்கள். 140 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தது எந்தவொரு நாளும் யார் என்ன கேட்கிறார்களோ அது கிடைத்தது, யாருக்கும் இல்லை என்ற பதில் வந்ததேயில்லை.
அந்தளவுக்கு பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் உறுதுணையாக இருந்தார்கள். படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்”என்றார்.
கலை இயக்குனர் முத்துராஜ் பேசும்போது “சிம்புதேவன் படம் பண்றது கஷ்டமான விஷயம். , இப்பகூட  உள்ள வரும்போது ” நீங்க எப்படி செட்டு போடணும்னு சிம்புதேவன் வரைஞ்சு கொடுத்துவாரா?’ன்னு ஒருத்தர்  கேட்டாரு. சிம்புதேவன் ஒரு ஓவியராக இருப்பதால் அப்படி கேட்டிருக்கலாம்.
ஆனால் எனக்கான வேலைகளில் அவர் எப்போதுமே தலையிட்டதே இல்லை, நான் செட்டை வரைந்து எடுத்துக் கொண்டு அவரிடம் காண்பித்தால் அதில் சின்ன சின்ன விஷயங்களை மாற்ற சொல்வாரே தவிர மற்றபடி எதுவுமில்லை. அந்தளவுக்கு எனக்கு  சுதந்திரம் கொடுத்தார்.
puli press meet (6)
பொதுவாக கலை இயக்குநர்களுக்கு சரித்திர கால படங்கள் அமைவது குறைவு, அப்படியே அமைந்தால் அதில் ஒரு வெறியுடன் வேலை செய்வார்கள். ஏனென்றால் மற்ற படங்களில் இருப்பதுபோல இல்லாமல் இதில் அதிகமாக கலை இயக்குநர்களின் பங்கு இருக்கும் அந்த மாதிரிதான் இந்த புலி படமும் எனக்கு அமைந்தது. 
புலி படத்துல நிறைய புது விஷயங்களை செய்திருக்கிறேன், இதற்கு பக்கபலமாக இருந்தது ஒளிப்பதிவாளர் நட்ராஜ் மற்றும் கிராஃபிக்ஸ் கமல் கண்ணன் சார் அவர்களும்தான். இவர்கள் இரண்டு பேருடன் இணைந்து நான் பணியாற்றிய முதல் படம் இது.
படத்தின் பாடல்கள்  எல்லாம் அருமை.  “ஏண்டி ஏண்டி” பாடல் மிகவும் பிடிக்கும், அனைத்து பாடல்களும் அற்புதமாக வந்திருக்கிறது அதற்கு மிகப்பெரிய நன்றியை தேவிஸ்ரீபிரசாத் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 
விஜய் சார் பற்றி சொல்லனும்னா இதுவரை அவர் இப்படி ஒரு கதையம்சத்தில் படம் பண்ணியதில்லை. இந்த படம் அவரது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். எனக்கு படம் திரையில் பார்க்க ஆசையாக இருக்கிறது” என்றார் .
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ” முதல்ல இயக்குநர் என்னை வந்து பார்க்கும்போது இந்த படத்துல யார் யார் நடிக்கிறாங்க அப்படீங்கறத  சொன்னார். . விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் என்று கூறும்போதே ‘என்ன, கதை விடறீங்களா? இவங்க எல்லாரும் எப்படி ஒரே படத்துல சேர்ந்து நடிப்பாங்க?’ன்னு  என்று சந்தேகமாக கேட்டேன்.
puli press meet (12)
ஆனால் இயக்குநர் சிம்புதேவன் ” நான் சொன்ன அத்தனை பேருடைய கால்ஷீட்டும் தயாராக இருக்கு’ன்னு சொன்னாரு. எனக்கு பெரிய ஆச்சர்யம். அப்புறம் சந்தோஷமா வேலை பார்த்தோம்.இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கும். இத்தனை பேரையும் ஒரே படத்தில் இணைத்த சிம்புதேவனுக்கு என் பாராட்டுகள்.விஜய் சார் இந்த படத்துல நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். சிம்புதேவனின் கதைதான் எங்கள் எல்லோரையும் இணைய வைத்திருக்கிறது.”என்றார்.

கிராபிக்ஸ் செய்த கமலக்கண்ணன் பேசும்போது ” புலி படத்துல நான் கிராஃபிக்ஸ் அனிமேஷன் செய்து கொண்டிருக்கிறேன். பி.டி.செல்வகுமார் சொன்ன காலத்திற்குள் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் முடித்து தந்துவிடுவேன்.
puli press meet (13)
2000ம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் குஷி படத்துல வர்ற அனிமேஷன் பாடல் நான் தான் உருவாக்கினேன்.நீண்ட வருடங்களுகு பிறகு நான் பணிபுரியும் தமிழ் படம் புலிதான். அப்போது இருந்த டெக்னாலஜிக்கும் இப்போது இருக்கும் டெக்னாலஜிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
இதுவொரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கு. புலி படத்தில் பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் அனிமேஷன் காட்சிகள் இருக்கிறது .அது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.” என்றார்

 

இறுதியாகப் பேசிய சிம்புதேவன் ”

puli press meet (14)

இந்த புலி படம் நிஜமாகவே எனக்கு ரொம்ப ஸ்பெஷம் படம்.நான் என்னுடைய மிகப்பெரிய நன்றியை விஜய் சாருக்குதான் சொல்லனும், ஏனென்றால் ஆரம்பத்தில் இந்த கதையை நான் அவரிடம் கூறும்போது என் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

puli press meet (10)
என்னுடைய தயாரிப்பாளர்கள் யார் என்று விஜய் சார் அறிமுகப்படுத்தும்போது இருந்த சுறுசுறுப்பு இன்றும்      பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இருவரிடமும் இருக்கிறது. இவர்கள் என்னுடைய டைரக்‌ஷன் டீமில் பணிபுரிபவர்கள் மாதிரி அத்தனை உதவிகளை செய்து கொடுத்தார்கள் அவர்களுக்கு என் நன்றி” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →