
படத்தின் பெயரே ‘ர’ தான். இது தொல்காப்பியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் . பண்டைத் தமிழில் இதற்கு கொண்டு செல்லுதல் என்று பொருள் .
இப்படியாக தமிழில் இருந்து தெலுங்கு என்ற மொழி உருவானபோது அங்கே ரா என்பது வா என்று ஆனது (ரா .. ரண்டி !)

ஒரு இளைஞனின் வாழ்வில் ஏற்பட்ட காதல் , அதில் நிகழ்ந்த துயர சம்பவங்கள், அவனது தவிப்புகள், அவன் மனதில் ஏற்பட்ட காயங்கள் , அதோடு திடுக்கிடும் சம்பவங்களுடன் கூடிய பிரம்மாண்டமான பேரழிவு நிகழ்வு, ஆவி உலகம் , அமானுஷ்யம், என்று கதை போகும் இந்தப் படத்தின் கதாநாயகி அதிதி செல்லப்பா, தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் ருத்ரமாதேவி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். (ஏ அம்மாயி…! அக்கட தேசம் போய் நம்ம தெலுகு பெர்லோ சென்னைலோ ரா அன்ட்டே ஒக ஃ பிலிமு ரெடியாக உந்தின்னு தப்பா சொல்லக் கூடாது ஆமாம் )

அஷ்ரப் தனது நடிப்பு ஆசையை சொல்ல , பிரபு யுவராஜும் தன் டைரக்ஷன் ஆசையை சொல்ல , இருவரும் தயாரிப்பாளர் அமீனை பிடித்து படம் எடுத்து விட்டார்கள்.
“அதுக்காக விமானம் ஒட்டிகிட்டே கதை பேசுவோம்னு நினைக்காதீங்க. அந்த தப்பு எல்லாம் பண்ண மாட்டோம் ” என்கிறார் இயக்குனர் பிரபு யுவராஜ் .

படத்தின் பாடல்கள் மற்றும் நாயகன் தயாரிப்பாளரின் தாய் மற்றும் தந்தை வெளியிட பத்திரிக்கை தொடர்பாளர் நிகில் முருகன் பெற்றுக் கொண்டார்
.
திரையிட்ட காட்சிகளை பார்க்கும்போது ஷாட்கள், வண்ணம் , ஸ்பெஷல் எஃ பக்ட், பின்னணி இசை இவற்றில் ஒரு தனித்தன்மையும் வித்தியாசமும் தெரிகிறது. இது ஏதோ சும்மா அட்ரஸ் மாறி கோடம்பாக்கத்துக்குள் நுழைந்த கூட்டம் அல்ல என்பது புரிந்தது .

“நிச்சயமாக இதுவரை கிடைக்காத ஒரு திரை அனுபவம் இந்தப் படத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ” என்கிறார் இயக்குனர் பிரபு யுவராஜ் .