எம் ஸ்டுடியோஸ் , ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் சார்பில் மணிகண்ணன், கனிஷ்க் தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, ரிஷி ரித்விக் , அனந்திகா, டேனி போப் , சவுந்தர்ராஜா நடிப்பில் முத்தையா வசனத்தில் எஸ் பி கார்த்திக் இயக்கி இருக்கும் படம்.
கொடூரமான தாதாக்கள் மற்றும் ரவுடிகள் (ரிஷி ரித்விக் , டேனி போப் ) …. அவர்களின் குற்றங்களுக்கு தண்டிக முயலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ( விக்ரம் பிரபு)… அவருக்கு அமையும் ஒரு பக்குவமான காதலி ( ஸ்ரீ திவ்யா)… என்ற நிலையில் இன்ஸ்பெக்டரைப் பழிவாங்க அந்தக் காதலியை ரவுடிகள் கொல்ல , தாதாக்களை இன்ஸ்பெக்டர் பழிவாங்கும் கதை

சிவராஜ்குமார் நடித்து 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த டகரு ( ராம் என்று பொருள்) படத்தின் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் ரீமேக் .
அன்றைய நிலையில் கன்னடத்தில் மேக்கிங் மற்றும் சிவராஜ்குமார் புகழ் ஆகியவற்றால் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம்.
ஆனால் தமிழுக்கு இது நாலாம் வகுப்பு கணக்கு புத்தகம் மாதிரி . எம் எஸ் சி மேத்ஸ் கோல்ட் மெடலிஸ்ட்டிடம் நாலாம் வகுப்பு கணக்குப் புத்தகம் என்ன பிரம்மிப்பை ஏற்படுத்த முடியும்?
முத்தையாவின் பஞ்ச் டயலாக்குகள் தீபாவளி பொம்மைத் துப்பாக்கியில் நிஜ புல்லட்தைத் திணிக்கிற மாதிரி இருக்கு .

விக்ரம் பிரபுவின் முகமும் காக்கிச் சட்டையின் ஒரு பகுதியாக இருக்கு.
சைக்கோ வில்லத்தனம் என்ற பெயரில் வில்லன்கள் எல்லோரும் மோப்பம் பிடிக்கிற மாதிரி முக பாவனை காட்டுகிறார்கள்.
ஸ்ரீவித்யாவின் அந்தக் காதல் பிளாஷ்பேக் அதில் அவரின் நடிப்பு , சாம் சி எஸ் இசையில் அந்தப் பாடல் என்று அந்த ஏரியா மட்டும் பாலைவனச் சோலை