இயக்குனரும் நடிகருமான ராஜேஷ் கண்ணனின் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ புருஷோத்தம ராகவன் மற்றும் ராஜா ராகவன் ஆகியோருக்கு சொந்தமான லார்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரே நேரத்தில் ஏழு படங்களை தயாரிக்கிறது . ஜனவரி மழையில், லந்து, கடவுள் இருக்கான் குமாரு, கொள்ளக் கூட்ட பாஸ், வட்டச் செயலாளர் வண்டு முருகன், நீ புடுங்கற ஆணி எல்லாம் தேவை இல்லாத ஆணிதான், கோக் .. என்று ஏழு படங்கள். இதில் ராஜேஷ் கண்ணனே இரண்டு படங்களை இயக்குகிறார். ஒரு படத்தில் நடிக்கிறார். ஜனவரி மழையில், லந்து ஆகிய முதல் இரண்டு படங்கள் தயாராகி விட்டன. மூன்றாவது படமான கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பில் இருக்கிறது.
ஜனவரி மழையில் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்க,
லந்துவின் டிரைலர் செம செம ….
அந்த டிரைலரில் ”லந்துன்னா என்னண்ணனே” என்று ஒருவன் கேட்க , இப்படி தொடர்கிறது உரையாடல்.
“அண்ணே.. என்னண்ணே இப்படி பேசுற ?”
“ஏன் … சொன்னா என்ன?”
“இல்ல.. அதுக்காக கெட்ட வார்த்தை எல்லாம் …”
” தேடியாப்புடலடா அவன்… கைல கிடைச்சா வெட்டணும்டா அவன ‘ன்னு சொன்னேன் “ என்கிறான் அந்த முதலாமவன் .
அட்டகாசம் ராஜேஷ் கண்ணன் !

அதிக பட்சம் மாசத்துக்கு ஒரு முறை எங்க படம் வெளியாகும் . எப்படியும் வருடத்துக்கு பத்து படம் தயாரிக்கணும். அதுக்கான வார்ம் அப் மாதிரிதான்தான் இந்த ஏழு படங்களையும் தயாரிக்கிறோம் ” என்றார் .
லந்து டிரைலர் ஒண்ணே போதும் .. இவரு சொல்றத செய்யிற ஆள் என்பதற்கு !

