ரஜினிக்கு நன்றி சொன்ன ‘ரஜினி முருகன்’

DCIM (78)

இயக்குனர் என் .லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்க, சிவ கார்த்திகேயன் நடிப்பில் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்.ராம் இயக்கும் படம் ரஜினிமுருகன்  . கதாநாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் , ரஜினியுடன் பொல்லாதவன் படத்தில் நடித்த மேனகாவின் மகள். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிற — தமிழில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்த நடிகை இவர்  . உடன் நடிகர் சூரி

DCIM (96)

தவிர படத்தில் ராஜ்கிரண் அவரது மகனாக பேராசிரியர் ஞான சம்மந்தம் (இவரது  மகனாக சிவா கார்த்திகேயன்) மற்றும்  மனோபாலா என்று பல நடிகர்கள் .

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் டீசரையும் பாடல்களையும் திரையிட்டார்கள்.

RED_0200

டி. இமானின் இசையில் யுகபாரதி வரிகளில் “என்னம்மா இப்படி பண்றீங்களேமா .. ” என்ற காமெடி புகழ் வாக்கியத்தையே பல்லவியின் முதல் வரியாகிக் கொண்டு வந்திருக்கும் பாடல் கலகலக்க வைக்கிறது .

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பாணியில் படம் அமைந்து இருப்பதை  டீசர் சொன்னது .

DCIM (82)

பேராசிரியர் ஞான சம்மந்தம் பேசும்போது “படம் ரொம்ப யாதார்த்தமா இயல்பா நகைச்சுவையா வந்திருக்கு. ராஜ்கிரண் , சிவ கார்த்திகேயன் இவர்களுடன் நடித்தது சந்தோசம் ” என்றார் .

ராஜ்கிரண் பேசும்போது

DCIM (161)

” நான் நடிக்கிற படம்னா அது மக்களுக்கு ஏதாவது நல்ல கருத்து சொல்ல வேண்டும்னு நினைப்பேன் . இந்தப் படத்துல குடும்பத்தை எந்தக் காலத்திலும் விட்டுடக் கூடாதுன்னு ஒரு நல்ல விஷயம் இருக்கு . அதுக்காக ஒத்துகிட்டேன் ” என்றார் . படத்தில் ஏழு நிமிடம்  நீடிக்கும் ஒரு வசனத்தை ஒரே ஷாட்டில் நடித்து இருக்கிறாராம் ராஜ் கிரண் .

இயக்குனர் பொன் ராம் பேசும்போது ” படத்துல இப்படி ஒரு கருத்து இருக்கு என்பது ராஜ்கிரண் சார் கிட்ட கதை சொல்லி முடிச்ச அப்புறம்தான் எனக்கே தெரியும் “என்று சொல்லி சிரிக்க வைத்தார்

DCIM (101)

“வருத்தப் படாத வாலிபர் சங்கம்  படத்தில் சத்யராஜ் . இந்தப் படத்தில் ராஜ்கிரண் . அந்தப் படத்தில் நான் வேலை செய்யாமல் ஊரு சுற்றுவேன் . இந்தப் படத்தில் வேலைக்கு போக வேண்டும் என்று நினைப்பேன் . இப்படி இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் ” என்று பிளாக் காமெடி சொன்ன சிவ கார்த்திகேயன்,

தொடர்ந்து “லிங்குசாமி சாருக்கு உள்ள பொருளாதாரப் பிரச்னைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்துல ஒரு இடத்துல “எல்லாரும் கிளம்புங்க . இனி எல்லா பிரச்னையையும் ரஜினி முருகன் பாத்துக்குவான் ” அப்படின்னு ஒரு வசனம் வரும் . உங்க பிரச்னைகளுக்கும் இது பொருந்தும் சார் ” என்றார் .

DCIM (102)

கீர்த்தி சுரேஷ் பேசும்போது ” எனக்கு ராஜ்கிரண் சாரை ரொம்ப பிடிக்கும் . அவர் கூட நடிக்க வாய்ப்புக் கிடைச்சது ரொம்ப சந்தோசம். சிவா நிறைய ஹெல்ப் பண்ணினார் . ஷூட்டிங் ரொம்ப ஜாலியா இருந்தது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார் .

“சினிமாவில் இருக்கும் சில உத்தம வில்லன்களால் எனக்கு சிக்கல் வந்தது ” என்று பொடி வைத்துப் பேச ஆரம்பித்த லிங்குசாமி “ரஜினி முருகன் என்ற பெயரை வைக்க ரஜினி சாரிடம் அனுமதி கேட்டபோது , நான் சொல்லி முடிப்பதற்குள் ‘தாராளமா வச்சுக்கோங்க ‘ என்றார் . அவருக்கு நன்றி .

DCIM (193)

என் மீது நம்பிக்கை வைத்து சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல் பலரும் இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறீர்கள் . தொடர்ந்து இந்தப் படத்தை முடித்துக் கொடுங்கள். உங்களுக்கு தேவையானதை நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்றார் .

இந்த ரஜினி முருகன் காமெடியாக நகர்ந்து கடைசியில் செண்டிமெண்ட் ஏற்றுமாம். டீசர் வெளியீட்டு விழாவும் அப்படிதான் இருந்தது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →