கல்பாத்தி அகோரத்தின் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார் , ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ். . தன மனைவி இயக்கம் இந்தப் படத்தை பார்த்த தனுஷ் தானே விரும்பி, அதில் நடிக்கிறார் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் வெளியே வராத ஒரு விஷயம் ரொம்பவே ஆச்சர்யமானது .
மகளின் படப்பிடிப்பு மாறும் ஏ ஜி எஸ் நிறுவனம் பற்றி கேட்டு அறிந்த ரஜினி ஒரு நிலையில் ,’தனது அடுத்த படம் ஷங்கரோடு இருக்க வேண்டும் அந்தப் படத்துக்கு மேற்படி ஏ ஜி எஸ் நிறுவனத்தை தயாரிப்பாளராக ஆக்கினால் என்ன?’ என்று நினைத்து இருக்கிறார் . ஷங்கரிடம் சொல்ல அவரும் சம்மதித்து இருக்கிறார் .
ரஜினி ஷங்கர் இருவரும் ஏ ஜி எஸ் நிறுவனத்துக்கு போய் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திடம் பேசினார்களாம் . படத்துக்கான பட்ஜெட் 200 கோடி என்று ஷங்கர் சொன்னாராம்.
மற்ற விசயங்களை எல்லாம் கணக்கு போட்ட ஏ ஜி எஸ் நிறுவனம் மலைத்துப் போய் , “நீங்க போங்க ; நாங்க லெட்டர் போடுறோம்” என்ற ரீதியில் சொல்லி அனுப்பி விட்டார்களாம்.
ரஜினி கால்ஷீட் கொடுக்க தானே விரும்பியும் அதை நிராகரித்த ஏ ஜி எஸ் நிறுவனத்தின் முடிவு அசட்டுத்தனமானதா இல்லை சமத்தானதா என்பதுதான் இப்போ விஷயம் தெரிந்த ஆட்களின் விவாதம்