ரஜினி நடிக்கும் புதிய படமான கபாலி என்ற அதே பெயரில் மைசூரைச் சேர்ந்த கன்னடரான சிவக்குமார் என்பவர் முன்பே தமிழில் ஒரு படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருப்பதையும் காவ்யா என்ற கன்னடப் பெண் அதில் கதாநாயகியாக நடிப்பது பற்றியும…
‘தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் அந்தப் படத்துக்கு, கடந்த ஒரு மாதம் முன்பு சென்னையில் படப்பிடிப்பும் . பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது… சிவா பிக்சர்ஸ் என்கிற பெயரில் கில்டில் இந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டது….. முறைப்படி அவர் அந்தப் பெயரை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி, ரஜினி படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது…. என்று முன்னரே கூறி இருந்தோம் .
இது தொடர்பாகப் பேசிய கபாலி சிவக்குமார் சிவகுமார் , “நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. எங்கள் ரஜினி தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் கன்னட பாசம் உடையவர் . எனக்கு நியாயம் செய்வார் ” என்று கூறி இருந்ததையும் பார்த்தோம் .
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை .
‘கபாலி என்ற பெயரில் தான் எடுத்து இருக்கும் தமிழ்ப்படம் தொண்ணூறு சதவீதம் முடிந்து ஆடியோ ரிலீசும் நடந்து விட்ட நிலையில், ரஜினி படத்துக்கு அந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை கேட்டு கோர்ட்டுக்குப் போகிறாராம் (வருகிறாராம்?), முதலாம் கபாலி படத்தின் தயாரிப்பாளரான சிவகுமார் .
கோர்ட் என்ன சொல்லும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
யார் தரப்பில் தப்பு என்று கில்டு தரப்பில் விசாரித்தால், ”சிவகுமார் கில்டில் அந்தப் பெயரைப் பதிவு செய்து ஆண்டுக் கணக்காக ஷூட்டிங் போய்க்கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக சிவகுமார் அந்தப் பெயரை புதுப்பிக்கத் தவறி விட்டார் . எனவே அவர் உரிமை கொண்டாட முடியாது ”என்று தகவல் வருகிறது .
அதே நேரம் இந்தப் பெயரை ஆறு மாதங்களுக்கு முன்பே தாணு தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பதாக இந்தப் பக்கம் இருந்து தகவல் வருகிறது .
‘பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தி அண்மையில்தான் ஆடியோ ரிலீஸ் நடந்த ஒரு படத்தின் பெயரை ஒன்றரை மாத காலம் மட்டுமே புதுப்பிக்கவில்லை என்ற காரணத்துக்காக மாற்றி விட முடியுமா?’ என்ற சிவகுமார் தரப்பின் கேள்விக்கு, கோர்ட் சொல்லப் போகும் பதிலில் இருக்கிறது பிரச்னையின் அடுத்த கட்டம்.
நிலவரத்தைப் பார்த்தால் கில்டுதான் சிக்கிக் கிழியும் போல இருக்கிறது .
மறுபடியும் அதே ஃபைனல் டச் !
ஆண்டவா ! மோசமான திரைக்கதைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . இந்த பெயர் பஞ்சாயத்துகளில் இருந்து தமிழ் சினிமாவைக் காப்பாற்று .