இது தவிர டுவிட்டரில் அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களைப் பற்றி லாஜிக்கோ உண்மையோ இல்லாதான் எதையாவது,
கண் மூடித்தனமாகவும் கான்ட்ரவர்சியாகவும் சொல்லி, சீப் பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் விளம்பரப் பிரியர் இவர் என்பது,
ஊரறிந்த … இல்லையில்லை உலகறிந்த உண்மை .
இந்த ராம்கோபால் வர்மா இப்போது சந்தன வீரப்பன் பற்றி படம் ஒன்றை கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் .
Veerappan (None Like Him Ever Existed) என்ற பெயரில், வரும் 27 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவம்,
‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற பெயரில் வரும் ஜூன் மூன்றாம் தேதி தமிழ் நாட்டில் வெளியாக இருக்கிறது .
இந்த சமயத்தில் ”வீரப்பன் ராஜ்குமாருக்கு முன்பு ரஜினிகாந்தையே கடத்த முயற்சி செய்தான் ” என்று ஒரு பொய்யான தகவலை பரப்பி,
அதன் மூலம் கேவலமான விளம்பரம் தேடும் வேலையையும் செய்து இருந்தார் ராம் கோபால் வர்மா
இந்த சூழலில் மேற்படி படத்துக்காக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராம் கோபால் வர்மா, வீரப்பனாக நடித்து இருக்கும் இருக்கும் சந்தீப் பரத்வாஜ் ,
செந்தாமரைக் கண்ணன் என்ற போலீஸ் அதிகாரியின் வேடத்தில் நடித்து இருக்கும் சச்சின் ஜே ஜோஷி, வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்து இருக்கும் உஷா ஜாதவ்,
போலீசுக்கு உதவும் பிரியா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் லிசா ரே ஆகியோர் கலந்து கொண்டனர் .
படத்தின் டிரைலரைப் பார்த்தபோது வீரப்பனாக நடித்து இருக்கும் சந்தீப் பரத்வாஜுக்கு வீரப்பன் கெட்டப் கொடுத்து இருக்கிறார்களே தவிர ,
வீரப்பனின் பர்சனாலிட்டியைக் கொண்டு வர வாய்ப்பில்லாத காமெடி பீசாகவே அவர் தெரிந்தார் .
சரி , ராம் கோபால் அடித்து இருக்கும் காமெடி கூத்து போல என்று நினைத்து சிரித்து விட்டுப் போகலாம் என்று பார்த்தல்….
டிரைலரிலேயே வீரப்பன் பற்றிய பல பச்சைப் பொய்களை ஜோடித்து இருக்கிறார் ராம்கோபால் வர்மா . அதில் ஒன்று வீரப்பன் அவனது சொந்த மகளையே கொலை செய்த அரக்கன் என்று ஒரு வசனம் !
எப்படி இருக்கிறது கதை ?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்தப் படததில் வீரப்பன் பற்றிய பல இல்லாத பொல்லாத அவதூறுகளை கொட்டி நிரப்பப் போகிறார்கள் என்பது,
அந்த முன்னோட்டத்திலேயே தெரிந்தது .
தவிர நிகழ்ச்சியில் பேசியவர்கள் எல்லாரும் “வீரப்பனை பற்றி உங்களை விட எங்களுக்கு அதிகம் தெரியும் .
அதை எல்லாம் உங்களுக்கும் சொல்லவே இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம் ” என்று வாய்ஜாலம் பேசியபோதே,
படத்துக்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம் என்பது புரிந்தது .
ராம்கோபால் வர்மா பேசும்போது ” வீரப்பனை வேட்டையாடிய ஆப்பரேஷன் குக்கூனில் இருந்த பல போலீசார்தான் எனது சோர்ஸ்கள்.
வீரப்பனைப் பற்றி எனக்கு அந்த சோர்ஸ்கள் சொன்னதன் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறேன்” என்றவர்,
தொடர்ந்து “. அவன் மிக மோசமானவனாக இருந்திருக்கிறான். மிகப் பெரிய கிரிமினல் . தவிர வீரப்பன் ஒரு பெரிய விளம்பரப் பிரியன் கூட ..” என்று கூறி முடிக்க
ராம் கோபால் வர்மாவை நோக்கி கேள்விகள் பறக்க ஆரம்பித்தன .
“வீரப்பன் ரஜினிகாந்தை கடத்த முயன்றதாக சொல்லி இருக்கிறீர்களே …” என்ற கேள்விக்கு “அது உண்மைதான் ” என்றார் .
யார் சொன்னார்கள் என்ற கேள்விக்கு
“எனக்கு தகவல்களைக் கொடுத்த சோர்ஸ்கள் சொன்னார்கள் ” என்றார்
”வீரப்பன் அவன் மகளையே கொன்றான் என்று வசனம் வருகிறதே . அது உண்மை இல்லையே …?” என்ற கேள்விக்கு “அது உண்மைதான் வீரப்பன் தன் மகளையே கொலை செய்து இருக்கிறான் ” என்றார் ,
”அடப் பாவிகளா! என்னைப் பத்தி இப்படி ஒரு பச்சைப் பொய்யா ? “
யார் சொன்னார்கள் என்ற கேள்விக்கு
“எனக்கு தகவல்களைக் கொடுத்த சோர்ஸ் சொன்னார்கள் ” என்றார், மீண்டும் கொஞ்சமும் கூசாமல்
“வீரப்பன் நினைத்து இருந்தால் ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் அழைத்து பேட்டி கொடுத்து இருக்க முடியும் . அவன் சில பேரை மட்டுமே சந்தித்தான் .
அப்படி இருக்க அவனை விளம்பரப் பீரின் என்பது என்ன நியாயம் ?” என்ற கேள்விக்கு மீண்டும்
“என் சோர்ஸ்கள் சொன்னார்கள்” என்றார் கிளிப்பிள்ளை மாதிரி
உங்களுக்கு தகவல்கள் சொன்ன பிரியா என்ற பெண் போலீசுக்கு (இந்த பிரியாவை வைத்துதான் படத்தில் லிசா ரே யின் கேரக்டரை அமைத்து உள்ளார் ராம் கோபால் வர்மா ) , பணம் கொடுப்பதாக சொல்லி,
நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று அந்த பிரியாவை சொல்கிறாரே ” என்ற கேள்விக்கு ,
“இல்லை அவர் போய் சொல்கிறார் ” என்றார் ராம் கோபால் வர்மா, ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் !
லிசா ரே !பிரியாவா நடிச்ச உனக்காவது ஏமாத்தாம சம்பளம் கொடுத்தாரா ?
இந்த நிலையில் நான் ராம் கோபால் வர்மாவிடம் ” வீரப்பன் பிடிபட்ட விவகாரத்தில் அதிரடிப்படை தரப்பு சொன்ன விசயங்களை வைத்து மட்டும் நீங்கள் படம் எடுத்து இருக்கிறீர்கள் .
அதுதான் உண்மை என்பது என்ன நிச்சயம் ?” என்றேன் .
“அவர்கள் சொன்னதை மட்டும் வைத்து எடுத்ததாக நான் எங்கே சொன்னேன் ?” என்றார்
“சில நிமிடங்களுக்கு முன்பு நீங்கள்தானே சொன்னீர்கள் ?” என்று நான் கேட்க ,
சற்றே திடுக்கிட்டு பின்னர் மெதுவாக “இல்லை இல்லை …அதிரடிப்படையினர் சொன்னது மட்டுமல்ல , அந்த பகுதி மக்கள், வீரப்பனின் உறவுகள்,
வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்கள் , எல்லோரும் சொன்னார்கள் ” என்றார் யோசித்து யோசித்து !
“வீரப்பனை கிரிமினல் என்று சொல்கிறீர்கள் .. ஆனால் அவன் கிரிமினல் ஆனதற்கு கர்நாடக வனத்துறையினர் அங்கு உள்ள தமிழ்ப் பெண்களிடம் , செய்த பாலியல் வன்கொடுமைகள்தான் காரணம்.
அது படத்தில் சொல்லப்படுகிறதா ?” என்றேன் .
“இருக்கு . ஆனால் அதற்காக வீரப்பன் சட்டத்தை கையில் எடுத்து கொலை செய்தது சரி இல்லை அல்லவா ?” என்றார் .
சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு , ராம் கோபால் வர்மாவின் ஊர்ப் பெண்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாலியல் வன்கொடுமை செய்தால் ,
எந்த ஆதரவும் இல்லாத நிலையில் , அந்தப் பெண்களை அவர்களிடமே ஒப்படைத்து விட்டு,
ராம் கோபால் வர்மா வேண்டுமானால் சட்டப் படிப்பு படிக்க அப்ளிகேஷன் போடலாம் . எல்லோராலும் அது முடியாதே .
“சோர்ஸ் சொன்னார்கள் என்று கூறிக் கொண்டு உங்கள் இஷ்டத்துக்கு எதையாவது உண்மை என்று சொல்வது சரியா?” என்றேன் .
“ஹிட்லரைப் பற்றி பல படங்கள் வந்துள்ளன . அவை ஒவ்வொன்றுக்கும் தொடர்பே இருக்காது . அது போலத்தான் இதுவும் ” என்றார் .
ஹிட்லர் பற்றி பல படங்கள் எடுக்கலாம் . ஆனால் இன்றும் ஹிட்லர் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பொய்களைச் சொல்லி ஜெர்மனியில் படம் எடுத்தால்,
இன்றும் என்ன ஆகும் என்பது ராம்கோபால் வர்மாவுக்கு தெரியாது போலிருக்கிறது.
” நிஜமாகவே வாழ்ந்த மனிதனைப் பற்றி இப்படி ஒரு தரப்பாகவும் உண்மைக்கும் புறம்பாகவும் படம் எடுப்பது தப்பு .
வீரப்பன் பற்றி நீங்கள் உங்கள் காதால் என்ன கேட்டீர்கள் என்பதை விட உண்மைகளே முக்கியமானவை ” என்றேன் .
“எனக்கு சொல்லப்பட்ட விசயங்களின் அடிப்படையில் எடுத்து இருக்கிறேன் ” என்றார் மீண்டும் .
விசயம் இதுதான் .
வீரப்பனைப் பற்றி படம் எடுக்கும் உரிமையை வீரப்பனின் மனைவி முத்து லட்சுமியிடம் இருந்து முப்பது லட்ச ரூபாய் ராயல்டிக்கு வாங்கி இருக்கிறார் ராம் கோபால் வர்மா .
ஆனால் வீரப்பனை மோசமாக கேவலமாக கொடூரமாக சித்தரித்தால்தான் மற்ற மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் படம் ஓடும் என்பதால்…..
முத்துலட்சுமியோடு போட்ட அந்த ஒப்பந்தத்தில் சில்லுண்டி வேலைகள் செய்து இருக்கிறார் ராம் கோபால் வர்மா
அதாவது ,படத்தில் சொல்லப்படும எந்த விசயம் குறித்தும்…
‘இது உண்மை இல்லை;…எனக்கு உடன்பாடு இல்லை…. ‘ என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது .
ரிலீசுக்கு முன்பு படத்தை போட்டுக் காண்பிக்கச் சொல்லக் கூடாது என்கிற நிபந்தனையை,
முத்துலட்சுமியின் அறியாமையைப் பயன்படுத்திச் ஒப்பந்தத்தில் சேர்த்து,
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462