கட்டாயக் கல்யாணத்தில் இருந்து தப்பிக்க விரும்பும் பெண்களுக்கு உதவும் வக்கீல் விஜய் சேதுபதி . அப்படி அவர் ஒரு பெண்ணுக்கு உதவப் போக, அதனால் ஒரு பலமுள்ள நபரின் பகைக்கு ஆளாகிறார் .
அதனால் தங்கையின் கல்யாணத்தில் பிரச்னை வருகிறது .
சம்மந்தப்பட்ட நபர் விஜய் சேதுபதியிடம் ” நீ மினிஸ்டர் பெண்ணை கடத்திக் கொண்டு வந்தால் , கல்யாண பிரச்னையை தீர்த்து வைக்கிறேன் என்கிறார் .
வேறு வழி இல்லாமல் அமைச்சர் பெண்ணை கடத்தப் போனால் அந்தப் பெண் விஜய் சேதுபதி மீது இம்ப்ரஸ் ஆகிறது . அப்புறம் என்ன ஆச்சு ?
என்ன ஆகும் ? உங்களுக்கு தெரியாதா? இதுதான் இந்த றெக்கை.
‘ என்ன இது கதையை கூட ஒழுங்கா சொல்லலியே என்று தோன்றுகிறதா ?’
அவங்க மட்டும் ஒழுங்கான கதையை எடுக்க மாட்டாங்க . நாம மட்டும் சொல்லணுமா?
செதுபதி, தர்மதுரை , ஆண்டவன் கட்டளை என்று நடிப்பிலும் அசத்திக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு , ஒரு பூசணிக்கா தோட்டத்தில் உள்ள அத்தனை பூசணிக்காய்களை உடைத்தாலும் தீராத திருஷ்டி இந்தப் படம்.
டுவிஸ்ட் என்ற பெயரில் அபத்தமான கதைப் போக்கு , அர்த்தமில்லாத வசனங்கள் , தெளிவு இல்லாத இயக்கம் என்று …
மேற்கொண்டு எழுதினால் …
வேண்டாம் விட்டு விடுவோம் .
யாரு வீட்டுக் காசோ . போட்டவருக்குதான் வலி தெரியும் .
பிரபல நடிகர்கள் கதை திரைக்கதையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் . தயாரிப்பளர்களும் ரசிகனின் ரசனையை நாடி பிடித்துப் பணம் போட வேண்டும் .
மொத்தத்தில் றெக்க … வெக்க! சக்க! மொக்க !