ரஜினி முருகன் படத்தை அடுத்து சிவ கார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க , பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் , அனிருத் .இசையில்
சுந்தர் சி மற்றும் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படம் ரெமோ .
படத்தில் ஹீரோ பெண் நர்ஸ், வயதான தாத்தா என மூன்று கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
(ரெங்கநாயகி — மோகன் குமார் என்ற இரண்டு பெயர்களின் முதல் எழுத்துக் கூட்டுதான் ரெமோ ன்னு சொல்லிட மாட்டீங்களே …?)
படத்தை 24 AM STUDIOS என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவத்தின் மூலம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் , தயாரிப்பாளர் ஆர் டி ராஜா .
தவிர இதை அடுத்து சிவ கார்த்திகேயன் நடிக்க, ‘தனி ஒருவன் புகழ்’ இயக்குனர் மோகன் ராஜா தயாரிக்கும் படத்தை தயாரிக்கும் ராஜா ,
தான் தயாரிக்கும் மூன்றாவது படத்துக்கு தானே கதை வசனம் எழுதுகிறார் . அதில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார்
இந்த நிலையில் தனது 24 AM STUDIOS நிறுவனத்தின் அறிமுக விழாவையும் ரெமோ படத்தின் டைட்டில் பாடல் ஆடியோ அறிமுக விழாவையும் பிரம்மாண்டமான நடத்தினர் தயாரிப்பாளர் ராஜா .
பிரமாண்ட லேசர் காட்சிகள் மூலம் சினிமாஸ்கோப் பாணியில் 24 AM STUDIOS நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட அறிமுகம் பிரம்மாண்டமாக இருந்தது .
படக் குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக ஏ வி எம் சரவணனும் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிறுவனத்தைத் துவக்கி வைத்தார்கள்
ரெமோ படத்தின் மோஷன் போஸ்டரும் அறிமுகம் செய்யாப்பட்டது . மோஷன் போஸ்டர் அட்டகாசமாக இருக்கிறது .
படத்தில் பெண் வேடத்தில் நடிக்கும் சிவ கார்த்திகேயனின் தோற்றம் சிறப்பாக இருந்தது
நிகழ்ழ்ச்சியில் எல்லோரையும் வரவேற்றுப் பேசிய கவிஞர் அறிவுமதி “தயாரிப்பாளரான தம்பி ராஜா,படம் தயாரிப்பதற்கு மட்டுமல்ல . கதை அறிவு , படத்தை இயக்கும் திறமை எல்லாம் கொண்டவர் ” என்றார்
நடிகர் சதீஷ், “சிவகார்த்திகேயன் விஜய் டி.வி.யில ஒர்க் பண்ணும்போது, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குறும்படங்கள்ல நடிச்சிகிட்டு இருந்தோம். ‘எப்படியாவது சினிமாவுல காமெடியாகிடணும்’னு சொல்வார் சிவா. ‘
காமெடியனைவிட நீ ஹீரோவா நடிச்சா சூப்பரா இருக்கும் மச்சி’னு நான் தான் சொன்னேன். ஏன்னா, அவர் ஹீரோவா நடிச்சா நான் காமடியனா ஆயிடலாம். அவர் காமெடியனா நடிச்சா, நான் எங்க போறது?
நான் சொன்ன மாதிரியே இன்னைக்கு மிகப்பெரிய ஹீரோவா வளர்ந்துட்டார் சிவா” என்றார்
கீர்த்தி சுரேஷ், “இந்தப் படத்துல நான் இரண்டாவது ஹீரோயின் தான். காரணம், முதல் ஹீரோயினும் சிவாதான் . ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ஸ்பாட் போனதும்,
‘சிவா தான் உன்னைவிட அழகா இருக்கார்’னு கிண்டல் பண்ணுவாங்க. .
இதுவரைக்கும் நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட்டது கிடையாது. முதல்முறையா சிவாவைப் பார்த்து பொறாமைப்பட்டேன்.
சிவாவை இதுவரை எண்டர்டெயினரா மட்டும் பார்த்துருப்பீங்க. இந்தப் படத்துல பர்ஃபாமராவும் பார்ப்பீங்க” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் பி சி ஸ்ரீராமை மூத்தவர் சீனியர் என்று பேச , ஸ்ரீராம் பேசும்போது ” இந்த யூனிட்டிலேயே ரொம்ப சின்னவன் எளியவன் நான்தான் .
அப்படி ன்னைத்துகி கொண்டுதான் வேலை செய்கிறேன் ” என்றார்
இயக்குனர் ஷங்கர் தன் பேச்சில் “இந்த நிகழ்ச்சியைப் பார்த்த போது 2.0 வுக்கு எப்படி ஆடியோ லாஞ்ச பண்ணனும்னு பிளான் பண்ணிட்டேன் . அதுக்காக நன்றி .
சிவகார்த்திகேயனுக்கு பெரிய ரசிகர் சப்போர்ட் இருக்கு . அவர் இன்னும் வளர வாழ்த்துகள் . அனைவருக்கும் வாழ்த்துகள் ” என்றார்
சிவ கார்த்திகேயன் பேசும்போது
” ஆரம்பத்தில் பெண் வேஷம் போட்டு நடிக்க பயந்தேன் . அப்புறம் தைரியமா இறங்கினேன் . நிறைய சிரமங்கள் . அதை மீறி படம் நல்லா வந்திருச்சி .
ஸ்ரீராம் சார் கேமரா வழியா பெண் வேஷத்தில் என்னை திரையில் பார்ததபோது நானே என்னை சைட் அடிக்க ஆரம்பிச்சு . அப்புறம் “ஏய் சீ .. அது நீதாண்டா ” என்று தெளிவுக்கு வந்தேன் .
இன்னும் மூன்று மாதங்களில் படம் திரைக்கு வருகிறது ” என்றார்
click the link below to view remo motion poster