சிங்களப் படம் : ஒப நாதுவா ஒப ஏக்க @ விமர்சனம்

oba nathuva oba aekka

படத்தின் பெயருக்கு ‘உன்னோடும் நீயில்லாமலும்’ என்று பொருள் .

விஷச் செடி
கலை வஞ்சகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருத்தி நகை அடகுக் கடை வைத்து இருக்கும் ஒரு சிங்களனை மனது கொண்ட நிலையில் அவன் ஒரு காலத்தில் சிங்கள ராணுவத்தில் இருந்தவன் என்பதையும் அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப் பெண்களை கற்பழித்து கொன்ற சிங்கள ராணுவத்துக்கும் துணை போனவன் என்பதை அறிந்து அவனோடு மனம் ஒன்று வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வதுதான் படத்தின் கதை .

படத்தில் மூன்று விசயங்களை அரை மனதோடு பாராட்ட முடிகிறது.

ஒரு காட்சியில் அந்த சிங்களன் செல்வியிடம் “சிங்கள ராணுவ வீரர்கள் கொன்றது எல்லாம் தீவிரவாதிகளைத்தான் ” என்று சொல்லும்போது ” “பச்சைப் பொய். உங்க ராணுவத்தால் கொல்லப்பட்ட என் தம்பிகள் அப்பாவி பள்ளி மாணவர்கள்தான். அது மாதிரி நீ எத்தனை பேரை கொன்ன? நீ எத்தனை தமிழ்ப் பெண்களை கற்பழிச்ச ? எங்க கிட்ட இருந்து எவ்வளவு தங்கத்தை கொள்ளை அடிச்சுக்கிட்டு வந்த ? “என்று ‘உறுமு’கிறாள் . (ஆனா “இதுக்கு மேல பேசினா வாயை உடைச்சுடுவேன்” என்று அவன் சொல்லிவிட்டு வெளியேறுவதாக அநியாயமாகத்தான் அந்தக் காட்சியை முடிக்கிறார் இயக்குனர் )

செல்வியை நடனம் சினிமா போன்றவற்றில் ஆர்வம் உள்ள ரசனையான பெண்ணாக காட்டும் இயக்குனர் அதே நேரம் அந்த சிங்களனை எப்போதும் டிவியில் WWF வெறிச் சண்டையை பார்த்து ரசிக்கிற நபராக காட்டுகிறார் . இதன் மூலம் சிங்கள ராணுவத்தான்கள் மட்டுமல்ல இலங்கையில் மற்ற தொழில்கள் செய்கிற சிங்களன்கள் கூட அடிப்படையில் ரத்த வெறி பிடித்தவர்கள் என்பதை உணர்த்துகிறார் . (தமிழர்கள் அளவு தன் சிங்கள இனத்து ஆட்கள் சினிமாவை நேசிப்பது இல்லை என்ற இயக்குனரின் கோபம் கூட இப்படி வெளிப்பட்டு இருக்கலாம் )

செல்வி சாப்பிடாமல் மனம் நொறுங்கி கிடக்கும்போது,  தான் ராணுவத்தில் இருந்த பொது தமிழ்ப் பெண்ணை கற்பழித்த சக சிங்கள ராணுவ வீரர்களை காப்பாற்றியதற்காக மனைவி செல்வியின் காலில் விழுகிறான் . (ஆனால் அதை மனப்பூர்வாமான மன்னிப்புக் காட்சியாக முடிக்க இயக்குனருக்கு ஆண்மை இல்லை . காலைப் பிடித்தவன் அப்படியே கால்களை வருடி … இடுப்புக்கு வந்து .. அவளை கட்டிலில் தூக்கிப் போட்டு .. அவள் கழுத்தில் முகம் புதைத்து .. இப்படி போய்தான் முடிகிறது அந்தக் காட்சி . இந்த மன நிலைக்கு அவள் வந்த பின்னும் வேறொரு காட்சியில் அவன் உறவுக்கு தொடும்போது அவள் அமைதியாக இருக்கிறாள் என்பதை பாஸ்ட் கட்டிங் உத்தியில் சொல்லி செல்வி கேரக்டரையே அசிங்கப்படுத்துகிறார் இயக்குனர் )

பாராட்ட வேண்டும் என்றால் இதற்கு மேல் பாராட்ட ஒன்றும் இல்லை.

வஞ்சகம்
வாழைப்பழத்தில் விஷ ஊசி

ஆனால் படத்தில் அடிக்கடி பெய்கிற மழை எல்லாம் நச்சுத் துளிகளோ என்று எண்ணும் அளவுக்கு…..பல பல பல வஞ்சகக் காட்சிகள்

செல்வி மீது காதல் வருவதற்கு காரணம் அவளது செக்சியான உதடுகளும் கண்களும்தான் என்று அவனே கூறுகிறான். ஓர் இனத்தின் பெண்களையே பாலியல் சீரழிவுக்கு ஆளாக்கிய இன்னொரு இனத்தின் பிரதிநிதியாக படத்தின் கதாநாயக கதாபாத்திரமும் இருக்கிறது . படத்தின் இயக்குனரும் இருக்கிறாள் . அப்படி இருக்கையில் அதே பாதிக்கப்பட்ட இனத்துப் பெண் மீதான ஒரு கதையை சொல்லும்போது , காதல் வருவதற்கு அவன் சொல்லும் காரணத்தின் பின்னே இருப்பது பாலியல் வக்கிரம்தானே தவிர காதல் இல்லை .

செல்வியின் நேர்மையை, கண்ணியத்தை, பரிதாப நிலையை, தன்மானத்தை பார்த்து காதல் வந்தது என்று சொல்லாமல் செக்சியான உதட்டைப் பார்த்து காதல் வந்தது என்று படத்தின் ஹீரோவே சொல்வது, தமிழ் பெண் என்றால் சிங்களவன் இனியும் போகப் பொருளாக பார்க்கலாம் என்ற லைசன்சையே தருகிறது

அந்த ஊரில் வாழும் ஒரு வயதான தமிழ்ப் பெண்ணே இவனது  வீட்டில் வேலைக்காரியாக இருப்பதோடு, செல்வியை அவனைக் காதலிக்க வைக்க உதவுகிறார் என்பது 1980  90களில்  நியாயமான சித்தரிப்பாக இருக்கலாம் . என்னதான் மலை நாட்டுப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு பிறகு 2௦12 இல் எடுக்கப்பட்டு இருக்கும் ஒரு படத்தில் இப்படிக் காட்டுவது இலங்கை தமிழர்களை கேவலமாக –உணர்வற்ற பிண்டங்களாக- சித்தரிக்கும் செயலாகவே படுகிறது. அதுபோல் செல்வி தஞ்சம் புகுந்து இருக்கும் அந்த, தமிழ் குடும்பத்துப் பெண்கள் செல்வியை “உயர் சாதிக்காரி என்ற செருக்குள்ளவள் , யாழ்ப்பாணத்துக்காரி என்ற இறுமாப்பு உள்ளவள் ” என்றெல்லாம் 2009 சம்பவங்களுக்கு பின்னரும் கூறுவதாக காட்டுவது சரியா?

தவிர அந்தக் குடும்பம் செல்வியை, காசுக்காக ஒரு வயதான ஆளுக்குத் திருமணம் செய்து கொடுக்க முயல்வதாக காட்டுவதன் மூலம் “ஆக , எப்படி இருந்தாலும் இலங்கையில் தமிழ்ப் பெண்கள் தமிழர்களாலேயே தவறாகத்தான் பயன்படுத்தப் படுகிறார்கள் அவர்களை சிங்களர்கள் பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன தப்பு ?” என்ற தொனியை வஞ்சகமாக ஏற்படுத்துகிறார் இயக்குனர் .

ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் உடலுறவு மென்மையாக நிகழ்கிறதா ? இல்லை ஆவேசமாக நிகழ்கிறதா என்பது அவரவர் ரசனை மற்றும் தேவையைப் பொறுத்த விஷயம். ஆனால் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட ஒரு இனத்துப் பெண்ணுக்கும் வன்கொடுமை செய்த இனத்தைச் சேர்ந்த ஒரு ஆணுக்குமான திருமண வாழ்க்கை பற்றிய ஒரு படத்தில்…. அந்த பாலியல் வன்கொடுமை விசயமே படத்தின் பிரதான கதைப்போக்காக இருக்கும் சூழலில்…… படத்தில் அந்த ஆண், பெண்ணின் மேல் படர்ந்து அவள் துடிக்க துடிக்க வெறி பிடித்து இயங்குகிற மாதிரியான ஒரு உடலுறவுக் காட்சியை , நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு டைரக்டர் வைக்க மாட்டான். இது படைப்பு சுதந்திரம் இல்லை .

கற்பழித்தாலும் சரி .. கல்யாணம் செய்து கொண்டு மனைவியாக வைத்துக் கொண்டு உறவு கொண்டாலும் சரி…. இலங்கைத் தமிழ்ப்,பெண் என்பவள் சிங்கள ஆண்களின் மிருகத்தனமான காமே வெறிக்கு என்றே படைக்கப்பட்டவர்கள் என்ற சிங்கள காட்டுமிராண்டித்தனமான பாலியல் வக்கிர மனோ நிலையின் அடிமடியில், இந்த இயக்குனர், ஒரு வேசியைப் போல் சொறிந்து கொடுக்கும் கேவல புத்தியையே அந்தக் காட்டுகிறது.

படத்தில் விஜய் நடித்த படம் பார்ப்பது “காசுக்கு தண்டம்” என்று கிண்டல் செய்யப்படுவதன் பின்னணியில் விஜய்யின் மனைவி ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி என்ற விஷயம் பிரதானமாக இருக்கிறது என்பதை புறக்கணிக்க முடியாது .

இதோடு போச்சா?

வஞ்சகம்
முதுகில் இறங்கும் அயோக்கியக் கத்தி

ஈழத்தில் நல்ல சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழ்ச் செல்வனின் நேரடி கண் காணிப்பில் திரைத்துறையில் ஈடுபட ஆசைப்படுவோருக்கு என்றே ஒரு அமைப்பு இருந்ததும் அங்கே உலகப் புகழ் பெற்ற ஈரானிய கொரியப் படங்களை போட்டுக் காட்டி சினிமா ரசனையை வளர்க்கும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தது என்பதுவும் இயக்குனர் மகேந்திரன் போன்றவர்கள் அங்கே சென்றபோது பிரபாகரன் உள்ளிட்ட அவர்களின் சினிமா அறிவை வியந்து விட்டு வந்ததும் பலரும் அறிந்த உண்மை .

அப்படி இருக்க, கதைப்படி சுமார் இருபது வயதுவரை யாழ்ப்பாணத்தில் இருந்தாலும், ”விஜய்யின் முகத்தை பெரிய திரையில் பார்த்ததே இல்லை. யாழ்ப்பாணத்தில் எல்லாம் போர் சம்மந்தப்பட்ட படங்களைத்தான் காட்டுவார்கள் ” என்று செல்வியை வைத்தே படத்தில் சொல்ல வைத்திருப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

அதுபோல சர்ச்சுக்கு போகும் செல்வியிடம் அவளது கணவன் “நீ கும்பிடுற கடவுள் எல்லாம் உன்னைக் காப்பாத்தாது ” என்று சொல்வதாக, 2002 இல் வந்த படத்திலேயே வசனம் இருப்பதையும் இப்போது சிங்களர்கள் தமிழ் முஸ்லீம்களை ஒரு வழி செய்தபின் அடுத்து தமிழ் கிறிஸ்தவர்களையும் விட மாட்டார்கள் என்பது தெரிகிறது .

இது எல்லாவற்றையும் விட ….

இலங்கை ராணுவத்தில் இருந்த ஒரு சில … என்னது ? ஒரு சில ….. சிங்களர்கள் ஒரு தமிழ் பெண்ணை கூட்டுக் கற்பழிப்பு செய்து விட்டார்களாம். அந்த ‘அநியாயத்தை’ செய்த அந்த சிங்கள இராணுவத்தான்களை தண்டிக்க துடியாய் துடித்ததாம் இலங்கை ராணுவம். குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தால் கற்பழித்த இராணுவத்தான்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்திருக்குமாம். ஆனால் சம்பவம் தொடர்பான நேரத்தில் கற்பழித்த குற்றவாளிகள் தன்னுடன் இருந்ததாக படத்தின் ஹீரோ ஒரு பொய்யை சொன்ன ஒரே காரணத்தால் அவர்கள் தப்பித்தார்களாம். கற்பழித்த ராணுவ வீரன் வேறு இவனை வந்து சந்தித்து ” எனக்கு வாழ்க்கை கொடுத்த வள்ளலே ! நீ மட்டும் அன்று ஒரு பொய்யை சொல்லி என்னை காப்பாற்றி இருக்கா விட்டால் என்னை நமது ராணுவம் செய்த தப்புக்காக கொன்றே போட்டு இருக்கும் ” என்று நடுநடுங்கிப் பேசுகிறான் .

இந்தக் காட்சியின் மூலம் , ஒரு இன வெறி பிடித்த அரசாங்கத்தின் மிருகத்தனமான ராணுவம் ஒரு இனத்துப் பெண்களை திட்டமிட்டு பாலியல் ரீதியாக சிதைத்த கொடுமையை அநியாயமாக மறைத்து…….சிங்கள ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்த தனது இராணுவ வீரர்களை கடுமையாக தண்டிக்கும் அளவு நேர்மையானது……… என்று பச்சைப் பொய்யை சொல்லும் இந்தப் படத்தின் இயக்குனர் பிரசன்ன விதனாகேவை திட்டுவதற்கு .. உலகின் எல்லா மொழிகளில் இருந்து ஒன்று கூட்டினாலும் போதுமான கெட்ட வார்ததைகள் இருக்க முடியாது. தூ!

இன்னும் இருக்கிறது …

வஞ்சகம்
மனசாட்சி இல்லாதவனின் சாட்சி

தன் இனத்தை திட்டமிட்டு அழித்து தன் இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவத்தில் பணி புரிந்ததோடு அப்படி கற்பழித்த ராணுவ வீரர்களை காப்பாற்றிய கணவனை செல்வி வெறுப்பதில் ஒரு கம்பீரமான நியாயம் இருக்கிறது . அவனை துப்பாகியால் சுட்டு விடத் துடித்தாலும் மனைவி என்ற நிலையில் அதை செய்ய முடியாமல் தவிப்பதிலும் யதார்த்தம் இருக்கிறது . அவள் தற்கொலை செய்து கொள்வதிலும் கூட ஒரு எதிர்கொள்ள முடியாத வாழ்க்கையின் சுமை குறித்த சலிப்பு இருக்கிறது .

ஆனால் எதற்கு அந்த அயோக்கியனிடம் ” ஒரு நாள் ரசித்தேன் . ஒரு நாள் வெறுத்தேன் உன்னை உயிரோடு கொன்று புதைத்தேன் . மன்னிப்பாயா? மன்னிப்பாயா ?” என்ற பாடலை பாடி மாய்ந்து மாய்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் ? அதற்கு அவனோடு வாழ்ந்தே இருக்கலாமே ? இந்த இடத்தில் வெளிப்படும் திரைக்கதையின் கயமை மன்னிக்க முடியாத ஒன்று .

கடைசியாக மனைவி செத்துப் போன பிறகு அவன் என்ன செய்கிறான் தெரியுமா? ரோட்டில் ஜோடியாகப் போவரை பார்த்தபடியும் தனியாகவும் அதே பகுதியில் நடந்து கொண்டு இருக்கிறான். அதை பார்த்தால்…. படுபாவி, அடுத்து ஒரு செல்விக்கான தேடுதலை தொடங்கி விட்டானோ என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் இந்த படத்தை ஒரு சிங்களன் பார்த்தால்… தப்பித் தவறி பரிதாபப்பட்டுக் கூட, எந்த ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் வாழ்க்கை கொடுக்கக் கூடாது. கொடுத்தால் நம்மையே சுட வந்தாலும் வருவாள் . எனவே தமிழ்ப் பெண் என்றால் பாலியல் பலாத்காரம் மட்டும் செய்ய வேண்டும் என்ற உணர்வையே ஏற்படுத்தும் இந்தப் படம் .

ஒப நாதுவா ஒப ஏக்க ... விஷச் செடி .

About Senthilkumaran Su

பெயர் சு.செந்தில் குமரன் புனைப் பெயர் ராஜ திருமகன் கல்வித் தகுதி B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89) மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 ) விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Senthilkumaran Su →