ஜெயம் ரவி ஹன்சிகா ஜோடியாக நடித்த ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றி பற்றிய மகிழ்ச்சியை படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், படத்தை வாங்கி வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், நடிகர் ஜெயம் ரவி, படத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஹன்சிகா ஆப்சென்ட் !
நிகழ்ச்சியை துவக்கி வைத்து வரவேற்றார் பத்திரிகைத் தொடர்பாளரும் புலி படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார்
சிவக்குமார் பேசும்போது ” ஒன்பதுல குரு படத்தின் தயாரிப்புக்குப் பிறகு நாய்கள் ஜாக்கிரதை படத்தை நான் வாங்கி வெளியிட்டேன். அந்தப் படம் நான் எதிர்ப்பார்க்காத வெற்றியை எனக்கு பெற்று தந்தது. ரோமியோ ஜூலியட் படத்தைப் பற்றி 3 மாசத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தை எப்படியாவது நாமதான் ரிலீஸ் செய்யனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதன்படியே தயாரிப்பாளர் நந்தகோபால் சாரிடம் பேசி படத்தை ரிலீஸ் செய்தேன்.
இப்போ படத்தோட ரிசல்ட் அனைவருக்கும் தெரியும். மனசுக்கு நிம்மதியா சந்தோஷமா இருக்கு. ரோமியோ ஜூலியட் படத்தை படத்தை வாங்கி ரிலீஸ் செய்ததை எனக்கு கிடைத்த கௌரவமாக நான் கருதுகிறேன். ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்தால் அவரை வைத்து படம் தயாரிக்கவும் நான் தயார் ” என்றார்.
“முதலில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஆரம்பித்த லக்ஷ்மணன், தொடர்ந்து ” எத்தனையோ இயக்குநர்கள் ஜெயம் ரவி சார் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள், ஆனால் அறிமுக இயக்குநரான என்னை அழைத்து எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ரவி சார் மற்றும் அவருடைய அப்பா எடிட்டர் மோகன் சார் இருவருக்கும் என் நன்றி.
நான் வணங்கும் கடவுளுக்கு அடுத்தபடியா இவர்கள் இருவரையும் நான் பார்க்கிறேன்” என்று நெகிழ்ந்தார்
தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் தனது பேச்சில் ” ரோமியோ ஜூலியட் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை எடுத்து முடித்தபிறகு அதனை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய காத்திருந்த எனக்கு பல கஷ்டங்கள் வந்தது.
ஆனால் தற்போது இந்த வெற்றியை பார்த்தபிறகு அந்த கஷ்டங்கள் எனக்கு மறைந்துவிட்டது.
ரோமியோ ஜூலியட படத்திற்காக உழைத்த இயக்குநர் லக்ஷ்மண் மற்றும் ஜெயம் ரவி, ஹன்சிகா, இசையமைப்பாளர் இமான் அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
“நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு” என்று யதார்த்தமாக ஆரம்பித்தார் ஜெயம் ரவி.
தொடர்ந்து ” இந்த வருஷம் எப்படியும் மக்கள் பாராட்டும்படி ஒரு ஹிட் கொடுக்கனும்னு நினைச்சேன் அது ரோமியோ ஜூலியட் மூலம் நினைவாகியிருக்கு. இந்த படம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படக் காரணமான இசையமைப்பாளர் இமானுக்கு என் நன்றி. படத்தை வாங்கி வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் ‘இவரு எந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறாரோ அந்த படம் கண்டிப்பா ஹிட்’டுன்னு பேரு எடுத்துட்டாரு ரொம்ப லக்கி மேன்.
படத்தில் ஹன்சிகா என்னைவிட மிக அற்புதமாக நடித்திருந்தார். ரசிகர்கள் அனைவரும் ஹன்சிகாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நானும் மனதாரப் பாராட்டிக் கொண்டாடுகிறேன் . அப்போதான் அடுத்த படத்தில் சேர்ந்து நடிக்கக் கால்ஷீட் கொடுப்பார்.
இப்படி ஒரு காதல் கதையை எனக்கு கொடுத்த இயக்குநர் லக்ஷ்மனுக்கு என் நன்றி. படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால் இந்த படத்தை விரும்பி தயாரித்தார். இப்போ இந்த படம் வெற்றி அடைந்திருக்குன்னா அதற்கு நந்தகோபால் இந்த படத்தின் மீது வைத்திருந்த காதல்தான் முக்கிய காரணம். படம் ரிலீசுக்கு முன்பே எங்களுக்கு படத்தின் வெற்றிக்கான அதிர்வு தெரிஞ்சுது” என்றார் .
அடுத்து தனியொருவன் என்ற படம் , நாய்கள் ஜாக்கிரதை பட இயக்குனர் இயக்கும் படம் , வெகு நாட்களாக வெளிவராமல் இருக்கும் பூலோகம் உட்பட அடுத்த ஐந்தாறு படங்களுக்கு லிஸ்ட் கொடுக்கிறார் ஜெயம் ரவி . (ஜூலியட் கையில் எத்தனை படம் ?)
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462