பீனிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோ.பச்சியப்பன் தயாரிக்க, தோழர் பாரதி கிருஷணகுமார் , ருதரன் பராசு, ஷர்னிகா, தோழர் அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் திருமதி ஓவியா, பரியேறும் பெருமாள் கராத்தே வெங்கடேஷ், “பிச்சைக்காரன், மூர்த்தி, பிர்லா போஸ், கவண் பிரியதர்ஷினி , ரஞ்சன், கற்பகவல்லி, தர்ஷன், நடிப்பில் ருத்ரன் எழுதி இயக்கியிருக்கும் படம் ரூபாய் 2000. ஒளிப்பதிவு பிரிமூஸ் தாஸ் .இசை இனியவன் .எடிட்டிங் – லட்சுமணன்,
படத்தில் நடித்திருக்கும பலர் சமூக சிந்தனையாளர்கள் .

சமூக அக்கறையோடுக்கூடிய வழக்காடுமன்றக் காட்சிகள் இந்தப் படத்தில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. அதிகார அத்துமீறலுக்கு எதிரான ஒரு ஏழை விவசாயின் சட்டப் போராட்டம்தான் படத்தின் கதை. .சொந்த சாதியின் மீதான பற்றினைத் துறப்பதே சாதி ஒழிப்புக்கான முதல்படியாகும் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய படமாகவும் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கான தணிக்கை சமீபத்தில் நடந்தது படம் பார்த்த தணிக்கை குழுவினர் 105 கட்டுகள் கொடுத்தார்கள் இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ரிவைஷ்கமிட்டிக்கு போனார்கள் காட்சிகளுக்கான காரணங்களை ஆவணமாக கொடுத்து மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு 24 கட்டுகளுடன் படத்தை வெளியிட அனுமதி பெற்றார்கள் .
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட காட்சிகளில் பண மதிப்பிழப்பு, ஜாதி வெறி, ஆணவக் கொலைகள் இவற்றுக்கு எதிரான கருத்துச் சிதறல்கள் தெறித்தன .

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ருத்ரன், ” படத்தில் திருவள்ளுவர், அம்பேத்கர் இவர்கள் புகைப்படங்கள் இடம் பெற்ற இடங்களை எல்லாம் தூக்கச் சொன்னார்கள். சனாதனம் என்று சொல்லக் கூடாது என்றார்கள். கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்தகுள் கூடாது என்றார்கள் .இவை எல்லாம் கெட்ட வார்த்தைகளா? இத்தனைக்கும் என் படத்தில் ஆபாசக் காட்சிகளோ இரட்டை அர்த்த வசனங்களோ கிடையாது . அவற்றை எல்லாம் விடுகிறார்கள். நல்லது சொன்னால் தடுக்கிறார்கள்”என்றார் .
தோழர் ஓவியா , “இந்த வார்த்தைகள் மூலம் நாம் அடக்குமுறை சாதி ஆதிக்கம் மூட நம்பிக்கை இவற்றுக்கு எதிராகப் பேசுகிறோம் . அதுதான் அவர்களுக்குப் பிரச்னை ” என்றார் தோழர் ஓவியா

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன் ” முருகனுக்கு அடுத்த தமிழ்க் கடவுள் என்றால் அது திருவள்ளுவர்தான் . அவர் பெயரை நீக்கச் சொன்னவரகளை சும்மா விடலாமா? அம்பேத்கர் ஒட்டு மொத்த நாட்டுக்கே சட்டம் வகுத்தவர் . அவர் படத்தை தூக்கசொல்ல இவர்கள் யார் ? படக் குழுவினர் இந்தப் பிரச்னையை சீமான், தொல். திருமாவளவன், வேல் முருகன் இவர்களிடம் கொண்டு செல்லுங்கள் . அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ” என்றார் .