அதிரடியாய் இறங்கும் ‘ரு’

IMG (58)

ஆனந்த் வீணா தயாரிப்பு நிறுவனம் சார்பில் வீணா ஆனந்த் தயாரிக்க, இர்பான், ரக்ஷிதா, இயக்குனர் பேரரசு, ஆதவன் ஆகியோர் நடிப்பில் சதாசிவம் எழுதி இயக்கி இருக்கும் படம் ரு.

தமிழ் எண்களின் படி ரு என்பது எண் 5 ஐக் குறிக்கும் . படத்தின் கதையிலும் இந்த எண்ணுக்கு தொடர்பு உண்டு .

பெங்களூரை களமாகக் கொண்டு நடக்கும் இந்தப் படத்தின் கதையில் , ஐந்து கொடூரமான காம வெறி பிடித்த மிருகங்கள் ,   ஒரு இளம்பெண்ணை (நாயகனின் தங்கை ?) கொடூரமாகக் கற்பழித்துச் சீரழிக்க, அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறான் நாயகன்.

”என்ன தண்டனை,  கொலையா?’ என்றால் “மரணம் எப்படி தண்டனை ஆக முடியும்? மரணத்தை விடக் கொடுமையான தண்டனை அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அது என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்  ” என்கிறார் இயக்குனர் சதாசிவம் .

IMG (2)

இந்த மரணத்தை விடக் கொடுமையான தண்டனை தரும் காட்சிகளை காசி, குஜராத் , முதுமலைக் காடுகள் போன்ற பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்கள் . (புரியுதுங்கோவ்!)

படத்தின் அந்த தீவிரமான கிளைமாக்ஸ் காட்சியின் போது  ஹீரோவுக்கும் அந்த ஐந்து பேருக்கும் நடக்கும் சண்டை,  சினிமா சண்டையாக இல்லாமல் நிஜம் சண்டையாகவே அமைக்கப்பட்டது என்கிறார் இயக்குனர் (சண்டைக்காட்சி மட்டும்தானே நிஜ சண்டையாக இருந்தது ?சந்தோசம் !)

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள். . ஒரு பாடல் காட்சியில் ஹீரோ நண்பர்களுடன் ஆடிப்பாட , இன்னொரு பாடல் காட்சியில் அந்த ஐந்து கொடூரமான கதாபாத்திரங்களும் , ஜிங்கு ஜிங்கு னு ரவுக்கை போட்டு பாடலில் ஆடிய நாகுவுடன் ஆடிப் பாடினார்கள் . (ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு கண்ணில் தென்படும் நாகு , இன்னும் கொஞ்சம் குண்டாகி இருக்கிறார் . ஆட்ட வேகம் குறைந்து இருக்கிறது . ஆனாலும் என்ன ….!)

IMG (50)

முன்னோட்டம் திகிலும் கொலைகளுமாக இருந்தது .  ஒளிப்பதிவு,  ஒலிப் பயன்பாடு ஆகியவை சிறப்பாக இருந்தன .

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு ” டெல்லி மாணவி நிர்பயாவை கற்பழித்தவன் இப்போது ஜெயிலில் இருந்தபடி கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் ‘பெண்கள் இரவில் வெளியே வந்தாலோ கவர்ச்சியாக உடை அணிந்தாலோ இனியும் அப்படித்தான் செய்வேன்’ என ஆவேசமாக கூறுகிறான் . அவனுக்கு மட்டும் துபாயில் உள்ளது போல சிங்கப்பூரில் உள்ளது போல கடுமையான தண்டனை கொடுத்திருந்தால் இப்படிப் பேசுவானா ?

எனவே இந்தப் படத்தில் சொல்லப்பட இருப்பது போல,  கற்பழிப்புக் குற்றவாளிக்கு மரணத்தை விட எவ்வளவு பெரிய கொடிய தண்டனை கொடுத்தாலும் அது சரியானதே ” என்றார் .

IMG (25)

சிறப்பு விருந்தினராக வந்த வி.ஜி.பி. சந்தோஷம் ” எங்கள் விஜிபி கோல்டன் பீச் வளர்ந்ததில் சினிமாப் படப்பிடிப்புகள் அங்கு அதிகம் நடந்தது காரணம் . நாங்கள் அந்த நன்றியை மறக்க மாட்டோம் ” என்றார் .

சதாசிவத்தின் குருநாதரான இயக்குனர் திருமலை ” ஒரு படத்தின் உரிமை எப்போதும் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்க வேண்டும். மூன்று வருடம் ஐந்து வருடத்துக்கு மேல் எந்த உரிமையையும் அவர்கள் யாருக்கும் தரக் கூடாது ” என்றார் .

Copy of IMG (52)

பெண்களுக்கான கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் இந்த ரு படத்தை தயாரித்திருக்கும் பெண் தயாரிப்பாளர் வீணா ஆனந்தை எல்லோரும் பாராட்டினார்கள் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →