எஸ் .ஏ. சந்திரசேகரனின்… ‘TITANIC’

RAM_0369

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடினானாம் கிழவன் என்பது ஒரு பழமொழி .ஆனால் பிள்ள இருக்கிற வீட்டில்…. அதுவும் பிள்ளையே ‘கில்லி’யாக இருக்கிற வீட்டில் துள்ளி விளையாட,  ஒரு தில் வேண்டும் . அந்த தில் இருக்கிறது எஸ் ஏ சந்திர சேகரனிடம்.

ஒரு பக்கம் தனது சிஷ்யன் ஷங்கர் மிகப்பெரிய இயக்குனர். இன்னொரு பக்கம் தனது மகன் விஜய் மிகப் பெரிய நடிகர் . யாராக இருந்தாலும் ”இதுக்கு மேல என்ன வேணும்…”  என்று அமைதியாகிவிடுவார்கள் . ஆனால் எஸ் ஏ சந்திரசேகரனின் மனதில் சினிமாவின் மீதான ஆவேச நேசம் போகவில்லை .

தனது பாணியில் சின்னச் சின்ன நடிகர் நடிகர்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தவர் , இப்போது அடுத்த கட்டமாக தானும் நடிகராக களம் இறங்கி விட்டார். அதுவும் கையில் ரோஜாப்பூவோடு காதலி தேடும் நபராக !

மறைந்த கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் படத்தில் ஒரே படத்தில் இரண்டு கதைகளை தந்த மாதிரி, இப்போது எஸ் ஏ சந்திர சேகரன் இயக்கி நடித்து இருக்கும் டூரிங் டாக்கீஸ் படத்திலும் இரண்டு கதைகள். முதல் கதை ஒரு காதல் கதை . அதில் காதலை தேடும் காதலனாக நடித்து இருக்கிறார் .

அப்புறம்… எஸ் ஏ சந்திர சேகரன்  படம் என்றால் சமுதாய பிரச்னை இல்லாமல் இருந்தால் நல்லா இருக்குமா?அவர் நடிக்காத அந்த இரண்டாவது கதை கிராமியப் பின்னணியில் சமுதாயப் பிரச்னை பற்றி சொல்கிறது .

படத்தின் முன்னோட்டத்தில் தொப்பி ட்ரிம் பண்ணிய வெள்ளை தாடி கையில் ரோஜாப் பூ சகிதம் ஸ்டைலாக நடக்கிறார்எஸ் ஏ சி .இளையராஜா இசை மென்மையாக இழைகிறது .

RAM_0335

கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாள் இந்த நிகழ்ச்சி நடக்க , டூரிங் டாக்கீஸ் என்ற ஒரே படத்தில் இரண்டு கதை இருப்பது போல, இந்த நிகழ்ச்சியும் டூரிங் டாக்கீஸ் பாடல் வெளியீட்டு விழா மற்றும் தாணு அணிக்கு பாராட்டு விழா என்று இரட்டை வேடம் பூண்டது .

நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி தாணு ” நான் இந்தப் படத்தை முன்பே பார்த்து விட்டேன் . அதில் எஸ் ஏ சந்திரசேகர் நடித்து இருக்கும் கதை , தமிழில் ஒரு டைட்டானிக் என்று சொல்லலாம் ” என்று போட்டார் ஒரு போடு .

‘நடிகர்’ எஸ் ஏஸ் ஏ சந்திர சேகரை மேடைக்கு அறிமுகப்படுத்திய முருகதாஸ்   ” சந்திரசேகரன் சாரின் நேரம் தவறாமை அனைவரும் அறிந்தது . ‘எந்த இடத்துக்கும் சொன்ன நேரத்துக்கு வரும் பழக்கம் எனக்கு அவரிடம் இருந்துதான் வந்தது ‘  என்று ஷங்கரே சொல்வார் ” என்றார் .

“அவரது பிளானிங் அற்புதமானது ” என்றார் கே வி ஆனந்த் .

நிகழ்ச்சி முடிந்ததும் விழாவுக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கப்படுகிறதா ? என்பதை ஓடி ஓடி கண்காணித்துக் கொண்டிருந்தார் எஸ் ஏ சந்திர சேகரன் , அதே சுறுசுறுப்போடு – தனக்கு மேடையில் கூறப்பட்ட புகழுரைகள் எதுவுமே பொய்யில்லை என்று நிரூபித்தபடி .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →