‘சாய்ந்தாடு’ படத்தின் அரபிக் குதிரை மனிஷா

manisha 4
தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக  இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள் எவ்வாறு மக்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசமாகச் சுரண்டுகிறார்கள், பாவப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடுகிரார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த ‘சாய்ந்தாடு’ படத்தில், இந்திய – மலேசிய கூட்டுத் தயாரிப்பான மனீஷா கௌர் என்ற அழகி நடித்து, அராபிய வகைப் பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியிருக்கிறார். அவரின் நடனத்தையும், உடல் வனப்பையும் கண்டு இப்பவே தமிழ்சினிமா இயக்குனர்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு வருகிறார்கள். தமிழ்சினிமாவை பற்றியும், ரசிகர்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த பஞ்சாபி பெண்ணிடம் பேசிய போது-
உங்களைப் பற்றி…?
நான் பஞ்சாபி மலேயப்  பெண். நடனம் எனது ஃபேஷன்.
manisha
‘சாய்ந்தாடு’ படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது…?
‘சாய்ந்தாடு’ படத்தில் ஒரு அராபிக் டைப் கிளப் பாடலுக்கு மலேசியாவில் டான்ஸ் ஆடவும், மலேசியா போர்ஷனில் நடிக்கவும் டைரக்டர் கஸாலி ஆள் தேடுவதாகக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டேன். ஆடிஷனில் என் நடனத் திறமை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதுபோக, ‘அரபுக்குதிரை நீதானோ..’ என்ற பெப் பாடல் மிக அற்புதமாக இருந்தது.
சினிமாவுக்காகக் காத்திருந்த எனக்கு ‘சாய்ந்தாடு’ படமும், ‘அரபுக் குதிரை..’ பாடலும் மிக அருமையான சந்தர்ப்பம் என்றே கருதுகிறேன். மேலும், ‘அரபுக்குதிரை’ பாட்டுக்கு நான் போட்டிருக்கிற குத்தாட்டத்துக்கு கூடிய சீக்கிரம் தமிழ்நாடே என்னோட சேர்ந்து ஆடினாலும் ஆச்சர்யமில்ல..
இதுவரை எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? 
தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். ‘சாய்ந்தாடு’ படம்  முழுவதுமாக முடிந்து விட்டது. கூடிய விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப் படம் வெளிவந்தபின் தமிழில் குத்தாட்டத்துக்கு எனக்கென்று தனியிடம் இருக்கும். இப்பவே  குத்தாட்டம் போட கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். முதலில் சாய்ந்தாடு வரட்டும். ஏனென்றால் அதில் நான் வெறும் குத்தாட்டம் மட்டும் போடவில்லை. படத்தின் முக்கியமான சில காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.
manisha 3
இனிவரும் படங்களிலும் குத்தாட்டம் போடுவதுதான் எண்ணமா? 
என் உடல்வாகுக்கு ஏற்பதான் எனக்கு ரோல் கொடுப்பார்கள். அதனால் நான் நம்புவது குத்தாட்டத்தைதான்.
தமிழ் படங்கள் பார்ப்பீர்களா? தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம்?
தனிப்பட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. அஜீத், விஜய், சூர்யா, இப்போ… அதர்வா!
உங்க முதல் படமான ‘சாய்ந்தாடு’ பற்றி?
மெடிக்கல் கிரைம் கதை. சில காட்சிகளைக் கண்டேன். சூப்பர். கிராஃபிக்ஸ் நிறைய இருக்கு. ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட்தான்.” என்கிறார் மனிஷா
‘சாய்ந்தாடு’ படத்தில் ஆதர்ஸ் & அனு கிருஷ்ணா நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சுப்பு பஞ்சு,  மனீஷாவோடு ரிமாலா பல்லன் என்ற மலேசிய பெண்மணி, கிரேன் மனோகர், காதல் சுகுமார், பாவா லக்‌ஷ்மணன், அல்வா வாசு, நெல்லைசிவா, கிங்காங் மற்றும் ஆங்கிலேயர்கள் & ஆப்பிரிக்கர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →