மகேந்திரநாத் கொண்டாலா தயாரிப்பில் வரலக்ஷ்மி சரத்குமார் , மைம் கோபி , கணேஷ் வெங்கட் ராமன், ஷஷாங்க் நடிப்பில் அனில் கேட்ஸ் இயக்கிய தெலுங்குப் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம் .
மனநல மருத்துவமனையில் இருந்து தப்பும் ஒரு நபர் ( மைம் கோபி) அந்த மருத்துவமனை நர்ஸ் , மற்றும் வார்டு பாயைக் கொலை செய்து விட்டு யாரையோ தேடி அலைகிறான் .
கணவனைப் பிரிந்து , சிறுமியான மகளுடன் இளம் தாய் ஒருத்தி ( வரலக்ஷ்மி ) தோழி வீட்டில் அடைக்கலம் புகுகிறார். சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தோழியை வந்து மிரட்டி இருக்கும் மன நோயாளி , அவளிடம் இளம் தாயின் புகைப்படத்தைக் காட்டி , அந்த இளம் தாயிடம் இருக்கும் குழந்தை தன்னுடையது என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறான் .
இது புரியாமல் அந்த இளம் தாய் , மன நோயாளிக்கு சொந்தமான வீட்டுக்கே வாடகைக்கு வருகிறாள்.
கணவனை அவள் பிரியக் காரணம், அவனுக்கும் அவன் முதலாளி மகளுக்கும் இருந்த தொடர்பு.
கணவனிடம் இருந்து அவள் விவாகரத்துக் கேட்க , அவன் குழந்தை தனக்கு வேண்டும் என்று சொல்ல, அவள் மறுக்க, அந்தக் குழந்தையே உன்னுடையது இல்லை ; அது திருடப்பட்டது” என்கிறான் கணவன் .
ஆக, மனநோயாளி தன் குழந்தையை இளம் தாயிடம் இருந்து மீட்க முயல, வளர்த்த பாசத்தால் அவள் மறுக்க, அவன் அவளை கொலை செய்ய முயல , நடந்தது என்ன என்பதே படம்.
இயல்பாக உருவான கதை திரைக்கதை இல்லை. இழுத்துக் கட்டி அழுத்தி திணித்து உருவாக்கப்பட்ட படம்.
வரலக்ஷ்மி , மைம் கோபி சிறப்பாக நடித்துள்ளனர் .
வரலக்ஷ்மியின் தோழியாக வரும் தெலுங்கு நடிகை அசத்துகிறார் .
அமெச்சூரான படம்