”ஜல்லிக்கட்டு தடையில் வெளிநாட்டு சதி ” – மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர்

IMG_4129

விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் 1லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரமாண்டமான விழா ,

சென்னை தாம்பரம் அருகே உள்ள 400 அடி வெளி வட்ட சாலையில் நடந்தது.  விழாவுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி சேர்மன் சாய்பிரகாஷ் தலைமை தாங்கினார்.

IMG_3960

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர், நடிகர் விவேக், நடிகர் ஜெகன், எம்.எல்.ஏ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா தொடங்கும் முன்பு நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

நடிகர் எஸ் வி.சேகர் பேசும் போது, ”மரம் நடும் விழாவில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் கூடியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மரம் மாதிரி நிக்குறியேன்னு யாராவது சொன்னால் வருத்தப்படாதீர்கள்.

IMG_4055

மரம் போல நிற்பது கஷ்டம். இன்னிக்கு சென்னை கார்ப்ரேஷன் வைக்கும் மரங்களை வாயால் ஊதினாலே விழுந்து விடும். அவ்ளோ மோசமாக இருக்கிறது.

இங்கே சட்டமன்ற உறுப்பினர் ராஜா இருக்கிறார். அவரிடம் ஒரு வேண்டுகோள். சமீபத்திய புயலில் சென்னையில் மரம் விழுந்து பலியானவர்களுக்கு குறைந்தபட்ச நஷ்ட ஈடாவது பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுங்கள்.

IMG_4118

அப்புறம் மிக முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. நமது பாரம்பரிய வீர விளையாட்டு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய விழா.

அதுல என்ன எதிர்ப்பு இருக்குன்னு பார்த்தால் அதுல மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி இருக்கு. நமது நாட்டு மாடுகள் இருக்கக் கூடாது என்று வெளிநாட்டு சூழ்ச்சி தான் ஜல்லிக்கட்டு தடை செய்யும் முயற்சி.

ஒன்றாக நமது ஒற்றுமையை காண்பிக்கும் போது கட்டாயம் நல்லது நடக்கும்” என்றார் .

IMG_4066

நடிகர் விவேக் தன் பேச்சில்  ” 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு படத்தில் நடித்தேன். அப்போது ஜல்லிக்கட்டு பற்றி பெரிய அனுபவம் இல்லை.

அப்போது மாடுகள் பற்றி நான் சொன்னதை இன்று பேஸ் புக்கிலும், வாட்ஸ் அப்புகளில் போட்டு விவேக்  ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து சொல்லி இருக்கிறார் என்று பரப்புகிறார்கள். அது உண்மையில்லை.

IMG_3981

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நமது பாரம்பரிய நிகழ்வு. அதைவிட மிக முக்கியமான பிரச்சினை மாடுகளை தங்கள் வீட்டில் உள்ள பிள்ளை போல வளர்க்கும் விவசாயிகள்,

தண்ணீர் இல்லாமல் செத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சினிமா ஹீரோக்கள் பலர் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் இந்திய மக்களின் ஒரே சூப்பர் ஸ்டார் மறைந்த ஐயா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தான்.

IMG_3978

ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிறைய மரங்கள் நடுங்கள் என்றார். அவரின் வார்த்தை பிடித்து தொடர்ந்து மரங்களை நட்டு வருகிறேன்.

இன்று சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடுகிற மரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் இந்த சாலையையே பசுமையாக்கி கல்லூரியின் பெருமையை சொல்லும்.

IMG_4025

மரம் நட்டா மட்டும் போதாது அதை வளர்த்து மிகப்பெரிய விருட்சமாக காட்ட வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்

முன்னதாக கல்லூரி சேர்மன் சாய் பிரகாஷ் பேசும் போது, “நடிகர் விவேக் செயல்படுத்தி வரும் கிரீன் கலாம் திட்டத்தில் நாங்களும் இணைந்து இருக்கிறோம்.

IMG_3996

இன்று விவேகானந்தர் பிறந்த தினம். ஏதாவது உபயோகமாக செய்யவேண்டும் என்று நினைத்தேன். என் தந்தை நிறைய சொல்லி சென்றிருக்கிறார்.

அவரைப் போல நானும் என் மகனுக்கு சொல்வதற்கு வசதியாக மரங்களை நட முடிவு செய்தேன். இன்று என் மகனின் முதல் பிறந்த தினம். இப்போது நடப்படும் மரங்கள் வளர்ந்ததும் அதை அவனிடம் காட்டுவேன்.

இன்று மிக முக்கியமாக பேசப்படும் விஷயம் ஜல்லிக்கட்டு. தெரிந்தோ தெரியாமலோ நமது முதல்வர் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று தைரியமாக சொல்லி இருக்கிறார்.

IMG_4033

எனக்கு தெரிந்து தமிழக முதல்வர் தைரியமாக சொன்ன ஒரு அறிவிப்பு இதுவாகத்தான் இருக்கும்” என்றார்

ஆயிரக்கணக்கான சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவ,, மாணவிகள் கலந்து கொண்டு மரங்களை நட்ட இந்த விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் விவேக், எஸ்.வி.சேகர், ஜெகன் ஆகியோருக்கு,

  கல்லூரி சேர்மன் சாய் பிரகாஷ் பட்டாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *