பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க ,
அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில்…
பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் சாஹாசம் படத்தில்….
அமெரிக்காவில் பிறந்து மும்பை சினிமாவில் முண்டிக் கொண்டிருக்கும் நர்கீஸ் ஃபக்ரி என்ற ஐட்டம் சாங் நடிகை பிளஸ் அஜால் குஜால் கதாநாயகி நடிப்பது பற்றி நமக்குத் தெரியும்.
ரன்பீர் கபூர் ஜோடியாக ராக் ஸ்டார் என்ற இந்திப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, அப்புறம் மெட்ராஸ் கபே படத்தில் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக நடித்து, அதன்பிறகு ஷாஹித் கபூர் நடித்த பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆரம்பித்த இந்த நர்கீஸ் ஃபக்ரி…..
சல்மான் கான் நடித்து ரம்ஜான் அன்று வெளிவந்துள்ள கிக் படத்தில் ஒரு ஐட்டம் சாங்குக்கு போட்ட குத்தாட்டத்தைப் பார்க்கவே இளசுகள் தியேட்டரை மொய்க்கிறகதையும் நாமறிந்த ஒன்றுதான்.
ஆனால் அப்படி சல்மான் கானின் கிக் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி ஆட்டம் போடக் காரணமே தியாகராஜன்தான் என்பதுதான், அடடே பிளஸ் அச்சச்சோ உண்மை .
குவீன் இந்திப் படத்தின் உரிமையை வாங்க மும்பை போன தியாகராஜனுக்கு அங்கே சல்மான் கானின் மேக்கப் மேன் அறிமுகம்.
அவரிடம் பேச்சோடு பேச்சாக தனது மகன் பிரஷாந்த் நடிக்கும் சாஹசம் படத்துக்கு நர்கீஸ் பக்ரியைக் கொண்டு வந்து ஆட வைக்கப் போவதை தியாகராஜன் சொல்லி இருக்கிறார் .
விஷயம் அறிந்த சல்மான்கான் தனது கிக் படத்துக்காக நர்கீஸ் ஃபக்ரியை ஆட வைக்க இருப்பதை சொல்ல,
முறைப்படி சாஹாசம் படத்துக்காக நர்கீஸ் பக்ரி ஆட வேண்டிய தேதியை சல்மான் கானுக்காக விட்டுக் கொடுத்து இருக்கிறது சாஹசம் படக் குழு
அதன் படியே கிக் படத்தில் நர்கீஸ் பக்ரி ஆடிய பாட்டு இப்போது அந்தப் படத்துக்கே பிளஸ் ஆகிவிட்டது.
ஒரு பக்கம் சாஹசம் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி ஆட வேண்டியது தள்ளிப் போனாலும்
இப்போது கிக் படத்தின் வெற்றிக்கே காரணமான அந்த செவ்வாழைப் பொண்ணு, சாஹசம் படத்தில் ஆடுவது நம்ம படத்துக்கும் நல்லதுதான் என்று சந்தோஷப் படுகிறார்கள் தியாகராஜனும் பிரஷாந்தும்.
அதே நேரம் கிக் படத்தின் பாடலை விட சாஹசம் படத்தில் இடம் பெறும் பாடல் நன்றாக அமைய வேண்டும் என்ற பிடிவாதத்தில், நர்கீஸ் பக்ரியை போட்டு உருட்டி புரட்டி உளுந்தவடை போட்டுக் கொண்டிருக்கிறர்கள் .