
வில்லங்கமான கதாபாத்திரத்தில் விசாலமான தோற்றத்தில் ‘சரபம்’ படத்தில் வந்திருந்த சலோனி லுத்ரா, கதக் நடனத்தில் தேர்வு பெற்றவர்.
மும்பையில் திரைக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூருடன் இவர் இணைந்து நடனம் ஆட, அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரன்வீர் கபூர் இவரிடம் ‘உன் கவனத்தை திரை உலகம் பக்கம் திருப்பு’ என்றாராம் . சலோனி திரும்பிப் பார்த்தது கோடம்பாக்கத்தை.
“பிரபல தயாரிப்பாளரான சி.வி. குமார் தயாரிப்பில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் அருண் குமார் அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டியதை போலவே என்னுடைய நடிப்பு பயணத்துக்கும் உயிரூட்டி விட்டார்”என்று , விவரமாகவே பேசுகிறார் சலோனி லுத்ரா
நடிகர் விக்ரமின் மிகப் பெரிய ரசிகையாம் இந்த சலோனி லுத்ரா. “சரபம் படத்தில் நான் இந்த அளவுக்கு நடித்து இருப்பதற்கும் அந்த கதாபாத்திரத்தின் வெற்றிக்கும் விக்ரம் சாருக்குத்தான் நன்றி சொல்லணும் நான் பார்த்தது குறைந்த அளவே தமிழ் படங்கள் என்றாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது விக்ரம் சாரின் அந்நியன் படம்தான். நொடிக்கு நொடி மாறுகின்ற முகபாவங்களை காட்டும் அந்த நடிப்புதான் எனக்கு உந்துதல்.” என்று விக்ரமுக்கு குறி வைக்கிறார் சலோனி லுத்ரா .
அது மட்டுமல்ல..”சென்னையின் சூழ்நிலையும் , தமிழ் சினிமாவும் பிடித்து விட்டதால் இங்கேயே குடி இருக்கலாம் என முடிவும் செய்துள்ளேன். வரும் வாய்ப்புகள் எல்லாமே ‘ சரபம்’ படத்தின் பாத்திரம் போலவே உள்ளது. எனவே ,மறுத்து விடுகிறேன் . வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்கவே எனக்கு விருப்பம்.’ என்கிறார் சலோனி லுத்ரா .
ஆக, அடுத்த குறி …..
