
கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் சக்கைப் போடு போட்ட படம் குவீன்.
அதிலும் கங்கனா ரணாவத்தின் நடிப்பு அதில் பெரிதாக பாராட்டப்பட்டது.
குவீன் படத்தை பார்த்த சமந்தா இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார் .
இதற்கிடையே சென்னையில் ஒரு குரூப் ரைட்ஸ் வாங்காமலே சமந்தாவை கதாநாயகியாகப் போட்டு இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்ய,
சமந்தாவும் சந்தோஷமாக சம்மதித்தார்
ஆனால் இந்தப் படத்தை, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன்.
விஷயம் அறிந்த அந்த டூப் குரூப் சட்டென்று சைலண்டானது.

இது தெரியாமல் குவீன் படத்தை சித்தார்த் சமந்தா இருவரும் சேர்ந்து தென்னிந்திய மொழிகளில் தயாரிக்க முடிவு செய்ய,
ஆந்திர திரையுலக தேசத்தில் காரசாரமாக இந்த செய்தி வெளியே பரவியது.
உடனே தியாகராஜன் சென்னையிலும் ஹைதராபாத்திலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து குவீன் படத்தின் தமிழ் தெலுங்கு மலையாள , கன்னட ரீமேக் உரிமைகள் தன்னிடம் முறைப்படி இருப்பதை அறிவிக்க ,
சோர்ந்து போன சமந்தா குவீன் படத்தை தயாரிக்கும் எண்ணத்தை கைவிட்டார் .
அதோடு சமத்தா விட்டிருக்கலாம் சமந்தா .
ஆனால் இப்போது எல்லாரிடமும் ”குவீன் படம் வட இந்தியக் கலாச்சாரத்துக்கு மட்டுமே பொருத்தமான படம் .
தென்னிந்தியாவில் எந்த மொழியில் எடுத்தாலும் அது ஓடாது” என்று எக்ஸ்பர்ட் கமென்ட் கூறிக் கொண்டிருக்கிறார்.
”பைசா செலவு இல்லாமல் காசு வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கவும் அப்புறம் காசு கொடுத்தாவது ரைட்ஸ் வாங்கி படத்தை தயாரித்தும் நடிக்கவும் பறந்தபோது சமந்தாவுக்கு வராத ஞானோதயம் இப்போ வந்தது எப்படி ? சீச்சி இந்தப் பழம் புளிக்கும் கதைதானே?’ என்கிறது தியாகராஜன் தரப்பு .
அதானே !
Comments are closed.