”விக்ரம் ஒரு சாடிஸ்ட் ” – சமந்தா சடார்

IMG_1324

கோலிசோடா படத்தின் வெற்றியை அடுத்து விஜய் மில்டன் இயக்க, விக்ரம் – சமந்தா இருவரும் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள…’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்கள்.

தான் வெளியே சொல்ல விரும்பாத ஒரு படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம். இன்னும் கொஞ்சம் இளைத்த சமந்தா .

சென்னையில் இருந்து வட இந்தியாவுக்கு செல்லும் பயணமே இந்தப் படத்தின் கதை .  டீசர் கமர்ஷியலாக அதிரடியாக,  பத்து முதல் ஒன்றுவரை கவுண்ட் டவுன் எண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது .

IMG_1156

“இந்தியாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு பகுதி பற்றி கிளைமாக்சில் வரும் . அதை நேபாளத்தில் எடுத்தோம். அதனால் சமந்தா நேபாளியாக நடிக்கிறார் என்று செய்தி வந்து விட்டது . அது உண்மையில்லை  . ” என்ற விஜய் மில்டன்….

தொடர்ந்து ” நான் விக்ரம் சாரிடம் இந்தப் படத்தில் ஹாய்யாக-  ஓர் அழகிய இளைஞனாக தோன்றினால் போதும் என்றேன் . ஆனாலும் அவர் ரொம்ப மெனக்கெட்டு நடித்தார். அப்படியானால் ஐ போன்ற படங்களுக்கு எப்படி கஷ்டப்பட்டு இருப்பார் ? அதனால்தான் முன்பே ஒரு முறை அவர் ஒரு நடிப்பு டெர்ரரிஸ்ட் என்று சொன்னேன் ” என்றார் .

“படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் . ஆனால் அதில் மூன்றும் சோலோவாக சமந்தாவுக்குதான் ” என்றார் விக்ரம் .

சமந்தா என்ன சொன்னார் ?

IMG_1174

” படத்தோட டைரக்டர் விஜய் மில்டன் ஒரு சாடிஸ்ட் . அவர் என்னை ரொம்ப கொடுமைப் படுத்தினார் . அடித்தார் . திட்டினார். எனக்கு அவரால் காயம் கூட ஏற்பட்டது . ஆரம்பத்துல அவர்தான் அப்படின்னா , அப்புறம் விக்ரமும் தன் பங்குக்கு தானும் ஒரு சாடிஸ்ட் ஆகவே நடந்துக்கிட்டார் ” என்றார் சிரிக்காமல் .

பரபரப்பு உண்டு பண்றாங்களாமாம்!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →