நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பற்றி நாயகன் சந்தீப் கிஷன் என்ன சொல்கிறார் ?
“மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான்
என்னுடைய ஆசை. ஒவ்வொரு நாயகர்களுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும். அதை போல் என்னுடைய அடையாளமாக தரமான படங்களே இருக்க வேண்டும்.
இது தான் என்னுடைய ஆசை. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முயற்சித்து வருகிறேன்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க முயற்சித்தேன் ஆனால் சில காரணங்களால் எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.
நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் நான் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குமார் என்ற கதாபாத்திரம்தான் இந்த படத்தில் ஹீரோ.
விக்ராந்த் பாண்டிய நாடு படத்தை விட இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருக்கும் இந்த திரைப்படம் கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கித் தரும். நானும் மெஹ்ரீனும் இணைந்து நடித்துள்ள காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.
மாநகரம் திரைப்படத்தில் இருந்து இதில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் முற்றிலும் வேறுபடும். நான் படத்தை பார்த்துவிட்டேன் படம் சிறப்பாக வந்துள்ளது.
என்னுடைய கதாபாத்திரமும் நிச்சயம் மக்களிடம் எனக்கு மீண்டும் நல்ல பெயர் வாங்கி தரும்.
இந்த படத்திலும் இயக்குநர் சுசீந்திரனின் பாணியில் சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து ஒன்றை சொல்லியுள்ளோம் .
அது கண்டிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும்” என்றார் சந்தீப் கிஷன்.