சாம்ராஜ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, எம் கே சினி ஆர்ட்ஸ் சார்பில் மாதேஸ்வரன் என்பவர் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் சாந்தன் . இந்த மாதேஸ்வரன் நிஜ வாழ்க்கையில் ஒரு கோவில் கட்டும் ஸ்தபதி . (சிலை மட்டும் செய்பவர் சிற்பி . சிலை மட்டுமல்லாது கோவிலின் அனைத்து கட்டுமான வேலைகளையும் செய்பவர் ஸ்தபதி!). படத்தின் கதாநாயகியாக காஷிஹா என்ற கேரளப் பெண் அறிமுகம் ஆகிறார் .
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் தங்கராசு , முத்து ராசு என்ற இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையில் ரத்த பாசத்தின் ஆழத்தை உணர்த்தும் வகையில் நிகழும் சம்பவங்களையும் திருப்புமுனைகளையும், நகைச்சுவை கலந்து கிராமியப் பின்னணியில் சொல்லும் படமாம் இது .
படத்தில் அண்ணன் தங்கராசுவாக ஸ்தபதி மாதேஸ்வரன் நடிக்க , அவரது நண்பராக — விஜய்யின் திருப்பாச்சி படத்துக்குப் பிறகு –முக்கியக் கதாபாத்திரத்தில் காமெடி மற்றும் செண்டிமெண்ட் சேர்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் பெஞ்சமின்.
“மனிதனின் உயர்ந்த குணங்களான அன்பு , எளிமை , கருணை இவற்றில் சாந்தமும் ஒன்று . சூழ்நிலை காரணமாக மூன்று அவதாரங்களுக்குள் தள்ளப்படுகிறான் நாயகன் . தம்பியின் வாழ்வில் நடைபெறும் சில சம்பவங்களுக்காக பழியேற்று ஜெயிலுக்கு போகும் அண்ணன் அங்கே வாழ்வை உணர்ந்து சாந்த குணத்தின் பெருமையை உணர்ந்து வருவதுதான் படத்தின் கதை. . படத்தை பார்க்கும் அனைவரின் மனதிலும் சாந்த குணம் பரவும் ” என்கிறார் இயக்குனர் சாம்ராஜ் .
படத்தின் இசையமைப்பாளர் ரவி பிரியன் கனடா வாழ் தமிழராம் .
இவர் கானா பாலாவின் பால்ய நண்பராம்.
விளைவு ?
படத்தில் கானா பாலாவும் பாடி இருக்கிறார்