கமல்ஹாசன், பிரபுதேவா என்று டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோவாவது ஒன்றும் புது விஷயம் இல்லை . ஆனால் அது எப்போதாவது நடக்கும் விஷயம் .
அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட்டாக வருகிறார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்.
ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் கன்னட தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரிக்க, கன்னட நடிகையான ஸ்பூர்த்திகா கதாநாயகியாக நடிக்க மாதேஷ் ராகவ் என்பவர் இயக்கும் போக்கிரி மன்னன் படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார் ஸ்ரீதர.
படத்தில் ரமேஷ் ரெட்டியும் ஒரு ஒரு பாடலில் ஆடி இருக்கிறார்
பரபரப்பான முன்னோட்டம்…. பட்டையை கிளப்பும் ஸ்ரீதரின் நடனத்துடன் கூடிய பாடல்கள் என்று…. அழுத்தமாக நடந்த போக்கிரி மன்னன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ் தாணு , இயக்குனர் ராஜ் கபூர், நடிகர் சாந்தனு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஸ்ரீதர் “டான்ஸ் மாஸ்டரில் இருந்து டைரக்டரா ஆகத்தான் முயற்சி பண்ணினேன். அது நடக்கும் . அதுக்குள்ளே இந்தப் படத்தில் ஹீரோவாக ஆகிட்டேன் .
டைரக்டர் ராஜ் கபூர் என்னை பார்க்கும்போது எல்லாம் ‘நீங்க ஹீரோவாக நடிக்கலாமே? ஏன் முயற்சி பண்ணாம இருக்கீங்க?’னு கேட்பார் . அவர் கேள்விக்கு அவர் விரும்பிய பதிலா இந்தப் படம் இருக்கும்.
டான்ஸ் பாடல்களுக்கு நடனம் அமைக்கும்போது நடிகர்களை எவ்வ்வளவோ கஷ்டப் படுத்தி இருக்கேன்.. டான்ஸ் மாஸ்டர் வேலை டான்ஸ் ஆடுறது மட்டும்தான். ஆனா நடிகர்கள் எமோஷனலா நடிச்சுட்டு , ஃ பைட் பண்ணிட்டு எல்லாம் ஆட வருவாங்க. அவங்க செய்றது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது நானும் ஹீரோவா நடிக்கும்போதுதான் தெரியுது . ஹாட்ஸ் ஆஃப் டு ஆல் ஹீரோஸ் ” என்றார் .
படத்தின் கதாநயகி ஸ்பூர்த்திகா “இதுவரை பனிரெண்டு கன்னடப் படங்களில் நடிச்சு இருக்கேன் . ஆனா யாருமே என்னை இவ்வளவு அழகா படம் எடுத்ததில்லை . ஒளிப்பதிவாளர் சூரி சாருக்கு நன்றி ” என்றார் .
“இனிமே இவரு டான்ஸ் மாஸ்டரா மற்ற ஹீரோக்களுக்கு என்ன ஸ்டெப்ஸ் கொடுப்பாருன்னு தெரில. அந்த அளவுக்கு இந்தப் படத்துஅ எல்லா ஸ்டெப்சையும் போட்டு முடிச்சிருக்காரு.
ரஜினி நடிச்ச படம் போக்கிரி ராஜா . விஜய் நடிச்ச படம் போக்கிரி . அந்த ரெண்டு படம் வெற்றியையும் இந்தப் படம் சேர்த்துப் பெறணும்” என்று இயக்குனர் ராஜ்கபூர் வாழ்த்த,
கலைப்புலி தாணு அதையே சற்று இம்ப்ரூவ் செய்து “விஜய் நடிச்ச படம் போக்கிரி . ரஜினி நடிச்ச படம் மன்னன் . அந்த ரெண்டு மெகா ஹிட் படங்களின் வெற்றியையும் இந்தப் படம் பெறட்டும் ” என்றார் .
பாடல்களைப் பெற்றுக் கொண்டு பேசிய சாந்தனு ” நானும் மாஸ்டரும் இது வரை எந்தப் படத்துலயும் சேர்ந்து வேலை செஞ்சது இல்லை. ஆனா சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கோம் . அதுக்கு எனக்கு அவரு டான்ஸ் பண்ணி இருக்காரு
. ஒரு தடவை ‘நீ நல்ல டான்சர் . ஏதாவது படத்துல உனக்கு ரொம்ப சூப்பரா டான்ஸ் வைக்கணும். ஆட வச்சே உன் முட்டியை உடைக்கணும் . ஆனா உனக்கு நல்ல பேரு வரணும்’ னு சொன்னாரு.
சரி… டைரக்டரா வந்து நடிக்க சான்ஸ் தருவாருன்னு பார்த்தா இப்போ அவரும் ஹீரோ ஆகிட்டாரு .
முழுக்க முழுக்க நடனத்தை அடிப்படையா வச்சு எனக்கு ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு ” என்று கூற,
மைக்கை வாங்கிய ஸ்ரீதர் “என் டைரக்ஷனில் அப்படி ஒரு படத்தில் நீ நடிக்கப் போற ” என்று ஸ்ரீதர் கூற….
இப்படிதான் பாஸ்……. பல சமயம் மேடைகள் மூலம் மேடைகள் கிடைக்கும்