தமிழக கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரம் பற்றிய, பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் சாட்டை .
அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது.
முதல் பாகத்தைத் தயாரித்த அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் ,இணைந்து தயாரிக்கிறார்கள்
மைனா, மொசக்குட்டி, சவுகார்பேட்டை போன்ற படங்களைத் தயாரித்த இவர்கள், இப்போது பிரம்மாண்டமாக தயாரித்து வரும் பொட்டு படத்தை அடுத்து சாட்டை – 2 படத்தைத் தயாரிக்கிறார்கள்
ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்த
கிஷோர் , தம்பி ராமைய்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
திரைப்படக் கல்லூரி மாணவரும் இயக்குனர் விக்ரமனின் உதவியாளருமான,
எம் .எஸ் . கெளதம் ராஜ், இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தின் துவக்க விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளது.