18 ந்தேதி சவாரிக்கு வரும் ‘சவாரி’

savari 8

நாளைய இயக்குனர் பருவம்  3 இல் இரண்டாவது பரிசு பெற்ற இயக்குனர் குகன் சென்னியப்பன். அதே பருவததில் நடிப்பில் இரண்டாவது பரிசு பெற்ற இருவரில் ஒருவர் கார்த்திக் யோகி . 

‘நல்லா நடிக்கிறாரே..’  என்று அவரைப் பற்றி இவர் யோசிக்க, ‘நல்லா டைரக்ட் பண்ணி இருக்காரே…’ என்று இவரைப் பற்றி அவர் யோசிக்க,
முதலில் பேசியவர் கார்த்திக் யோகி “நீங்க படம் பண்ணும்போது எனக்கு சான்ஸ் கொடுக்கணும் “
“கண்டிப்பா . நாளைக்கு என் ஆபீஸ் வந்துடுங்க “
குகன் சென்னியப்பன்
குகன் சென்னியப்பன்
‘என்னது ? நாளைக்கேவா ?’ — இது மைண்ட் வாய்ஸ் !’
யெஸ்! டேக் என்டர்டெயின்மென்ட்  என்ற தயாரிப்பு நிறுவனத்துக்காக சவாரி என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை முன்னரே பெற்று இருந்தார் குகன் சென்னியப்பன் . 
மறுநாள் ஆபீஸ் போனார் கார்த்திக் யோகி .
“ஒரு விண்டேஜ் காரைப் பின்னணியா வச்சு ஒரு சைக்கோ கொலைகாரன் பற்றிய படம் பண்றோம் .  இது ஒரு ‘சைக்கோ திரில்லர் காமெடி’ என்கிற புது ஜானர்ல வரும் படம் . நீங்க நடிக்கிறீங்களா ?” என்று குகன் கேட்க ,
கார்த்திக் யோகி
கார்த்திக் யோகி
அப்படிதான்  சவாரி படத்துக்குள் போனார் கார்த்திக் யோகி .
அப்புறம் கதாநாயகி விஷயம் … சனம் ஷெட்டி !
குகன் சென்னியப்பனும் சனம் ஷெட்டியும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க போட்டோ  ஷூட் வரை நடந்தது .
அப்போது சனம் ஷெட்டியிடம்
சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி
”நான் படம் இயக்கினால் நீங்கதான் ஹீரோயின்” என்று சொல்லி இருக்கிறார் குகன் சென்னியப்பன் . 
சொன்ன வாக்கு மாறாமல் சனம் ஷெட்டியை கதாநாயகியாக்கினார்.சனம் ஷெட்டியின் காதலனாக பெனிட்டோ பிராங்க்ளின் என்பவர் . (”இவர் ரொம்ப நல்லவர் .
பெனிட்டோ ஃபிராங்க்ளின்
பெனிட்டோ ஃபிராங்க்ளின்

ஆரம்பத்தில் என்னிடம் எப்படி பேசினாரோ, அதே போல படம் முடிந்த பின்னரும் இருக்கிறார் ” என்கிறார் குகன் சென்னியப்பன் ) 

சாதாரண பார்வைக்கே மிக வித்தியாசமாக தோன்றும் மதிவாணன் ராஜேந்திரன்
மதிவாணன்  ராஜேந்திரன்
மதிவாணன் ராஜேந்திரன்

சைக்கோ கேரக்டருக்கு முடிவனார் .

இன்னொரு முக்கியக் கேராக்டருக்கு அருண் என்பவர் அமைந்தார் .
அருண்
அருண்
பாலாவின் படங்களில் பணியாற்றும் சிறந்த ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான செழியனிடம் ஒளிப்பதிவுக்குக் கேட்டுப் போயிருக்கிறார் குகன் சென்னியப்பன்.
 ”முழு ஸ்கிரிப்டையும் கொடுங்கள் படித்துப் பார்த்து சொல்கிறேன்” என்று அவர் கூற , இவரும் கொடுக்க , படித்து விட்டு “சூப்பரா இருக்கு . நான் பண்ணித் தர்றேன் ” என்று சொன்ன செழியன்  அதோடு நிற்கவில்லை .
மறைந்த படத் தொகுப்பாளர் டி.கிஷோரையும் அறிமுகப்படுத்த அவரும் ஸ்கிரிப்ட் கேட்டு வாங்கிப் படித்து விட்டு “சூப்பர் ஸ்கிரிப்ட் . பண்ணித் தர்றேன் ” என்றார் . 
நாளைய இயக்குனர்  நிகழ்வில் தமது இசையால் பல குறும்படங்களை  தூக்கி நிறுத்திய(வரும் பின்னர் முன்டாசுப்பட்டி , ஜில் ஜங் ஜக் , ஆகம் படங்களின் இசையமைப்பாளராக வளர்ந்து இருக்கும் )….
விஷால் சந்திர சேகர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
படம் துவங்கியபோது ஷூட்டிங் போனார்கள் . ”முதல் நாளிலேயே திட்டமிட்ட சீன்களை ஆறு மணிக்கு முடிப்பதற்குப் பதில் அஞ்சுமணிக்கே முடித்துக் கொடுத்து தயாரிப்பாளரின் பாராட்டைப் பெற்றார் இயக்குனர்”
— என்கிறார்,  படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் லொள்ளு சபா ஈஸ்டர் . 
லொள்ளு சபா ஈஸ்டர்
லொள்ளு சபா ஈஸ்டர்

இரண்டே அசிஸ்டன்ட் டைரக்டர்கள் , ஒத்துழைப்பு கொடுத்த ஆர்ட் டைரக்டர் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் இவர்களை வைத்துக் கொண்டு,

 குறைவான ஆட்கள் கொண்ட யூனிட்டோடு டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ் ஆக  எடுத்து முடித்தார்கள் . 
படம் நன்றாக வந்திருந்தும்  ரிலீஸ் செய்ய முடியவில்லை . அப்போதுதான் கார்த்திக் யோகியின் நண்பரும் அட்வகேட்டுமான கார்த்திகை பாலன் சீனுக்குள் வருகிறார் .
“நானும் கார்த்திக் யோகியும் நெடுநாள் நண்பர்கள் . அவன் நடிப்பில் ரொம்ப ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தான் .
நாங்கள் சந்திக்கும்போது எல்லாம் அவன் நடிக்கும் குறும்படங்கள் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பான்.
ஒரு நிலையில் சவாரி படம் பற்றி பேச ஆரம்பித்தான் . பார்க்கும்போது எல்லாம் சவாரி படத்தை பாராட்டியே பேசிக் கொண்டு இருந்தான் . 
எனக்கு படத்தை பார்க்கும் எண்ணம் வந்தது . வியாபாரம்  தொடர்பான காட்சி  நடந்த போது என்னையும் அழைத்தான் . போய்ப் பார்த்தேன் . இடைவேளையிலேயே படம் பிடித்து விட்டது .
படம் முடிந்த பிறகு இந்தப் படத்தை வாங்க முடிவு செய்தேன் . சொன்னேன் . எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம் . 
என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கினேன். 
கார்த்திகேய  பாலன்
கார்த்திகேய பாலன்

அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ்  நிறுவனத்திடம் பேசினேன் . முரளி சார் எவ்வளவு பெரிய மனிதர் ! ஆனால் அவ்வளவு அன்போடு இனிமையாகப் பேசினர் .

 அவரை மாதிரி  நல்ல மனிதரை சினிமாவில் பார்க்கவே முடியாது . அவர் இந்தப் படத்தை வாங்கியவுடன் மொத்த யூனிட்டுமே உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது . எப்பேர்ப்பட்ட வாய்ப்பு!
அவர் வாங்கி வெளியிடுகிறார் என்றதும் எங்கள் படத்துக்கு மரியாதையும் எதிர்பார்ப்பும் உயர்ந்து விட்டது .  ” என்கிறார் .கார்த்திகை பாலன் 
பத்தீர்க்கையாளர் சந்திப்பில் முன்னோட்டத்தையும் விஷால் சந்திர சேகர் இசையில் உருவான பாடலையும் திரையிட்டார்கள் .
விஷால் சந்திரசேகர்
விஷால் சந்திரசேகர்
வித்தியாசமான ஃபிரேம்கள், டோன் , காட்சி அமைப்பு போன்றவை கவனம் கவர்ந்தன  . விஷால் சந்திரசேகரின் இசை வழக்கம் போலவே மிக சிறப்பாக இருந்தது. 
படம் வரும் பதினெட்டாம் தேதி திரைக்கு வருகிறது.. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →