சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’

 

Sethupathi Movie Stills

வன்சன் மூவீஸ் சார்பில் ஷன் சுதர்ஷன் தயாரிக்க, விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் , வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில், பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கும் படம் சேதுபதி . 

எஸ் ! சேதுபதி நடிக்கும் சேதுபதி . இது ஒரு போலீஸ் கதை . 
sethu 1
படம் பற்றிப் பேசும் விஜய் சேதுபதி”  என்னோட கேரியர்ல மிக முக்கியமான படங்களில் ஒண்ணு  பண்ணையாரும் பத்மினியும் . அந்தப் படத்தோட டைரக்டரான அருண்குமாருடன் இன்னொரு படம் என்று முடிவானபோது சந்தோஷமாக இருந்தது . 
Sethupathi Movie Stills
இது போலீஸ் அதிகாரி பற்றிய படம் என்றாலும்  வழக்கமான போலீஸ் படமாக இருக்காது . போலீஸ் படங்களில் பார்க்கும் வழக்கமான காட்சிகள் இருக்காது. இது போலீஸ் அதிகாரியின் குடும்பம் பற்றிப் பேசும் படம் .
sethu 5
ஒரு போலீஸ் அதிகாரியின் உள்ளுணர்வுகள் , அவனது குடும்பத்தை அவன் அணுகும் விதம் , சூழலுக்கு ஏற்ப பல்வேறு குணங்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவன் இருப்பது போன்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பரபரப்பான  படம் . 
sethu 6
போலீஸ் கேரக்டர் என்பதால் உடம்பைக் குறைப்பது சிக்ஸ் பேக் வைப்பது போன்ற புற விசயங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கேரக்டரை உணர்ந்து உணர்வு ரீதியாக நடிக்க வேண்டிய படம் . அது எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் நடித்தேன் . வில்லனாக வேல.ராமமூர்த்தி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
sethu 3
படத்துக்கு சேதுபதி என்று பெயர் வைக்க டைரக்டர் விரும்பிய போது,  ரொம்பவே யோசித்தேன் . என் பெயரில் படத்தின் பெயரை நான் விரும்பி வைத்துக் கொண்டதாக யாரும் யோசிக்கக் கூடாது இல்லையா ? ஆனால் கதைக்கு அது ரொம்ப பொருத்தமான பெயர் என்று டைரக்டர்  சொன்ன பிறகு ,
ஏ வி எம் சென்று முறைப்படி அனுமதி வாங்கி அந்தப் பெயரை வைத்தோம்”என்றார் . (ஏ வி எம் தயாரிக்க சேதுபதி ஐ பி எஸ் என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த படம் ஒன்று உண்டு ) 
sethu 7
படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவான கேரக்டரில் ரம்யா நம்பீசன் நடிக்கிறார். (அப்போ விஜய் சேதுபதியும்தான் !)   சில நடிகைகள் அந்தக் கேரக்டரில் நடிக்க மறுக்க , பிறகு ரம்யா நம்பீசன் வந்திருக்கிறார் .
“ஆனால் ரம்யா நம்பீசன் மிகப் பொருத்தமானவர் என்பதால்தான் படத்துக்குள் வந்தார் . சிறப்பாக நடித்தும் இருக்கிறார் ” என்ற இயக்குனர் அருண்குமாரிடம்
sethu 2
“பண்ணியாரும் பத்மினியும் படத்துக்குப் பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு தாமதம் ?” என்றால்…
 ” நான் கதை  எழுதவே ரொம்ப டைம் எடுத்துக்குவேன். தவிர வேறொரு புராஜக்டுக்காக ஒரு கதை ரெடி பண்ணி அப்புறம் இந்தப் படத்துக்கு வேறு கதையை உருவாக்கினேன் . அதுதான் தாமதம் ” என்றார் .  
sethu 4
விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் . அருண்குமாரின் முதல் படமும் ரொம்பப் பிடிக்கும் . இருவரோடும் நான் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த சேதுபதி சிறப்பாக வந்திருக்கிறது ” என்கிறார் தயாரிப்பாளர் ஷன் சுதர்ஷன். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →