திருட்டி விசிடி , இணைய ரிலீஸ் நபர்களுக்கு சி3 (Si3) இயக்குனர் ஹரியின் வேண்டுகோள் !

hari 3

சிங்கம் 3 படத்தை ரிலீஸ் அன்றே இணையதளத்தில் திருட்டு ரிலீஸ் செய்யப் போவதாக ஓர் இணைய தளம் சொல்லி இருக்கிறது .

அவர்களை கண்டித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது வெகுவாக கவனிக்கப் பட்டது . இந்த நிலையில்

இயக்குனர் ஹரி அந்த திருட்டு ரிலீஸ் இணையதள நபர்களுக்கும் , அதோடு திருட்து விசிடி தயாரித்து விற்பனை செட்டும் ஆட்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார் . அதில் அவர் ,

‘நான் மக்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து தியேட்டர் அல்லாத வேறு எங்கும் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டாம்.

நம்முடைய இளைஞர்கள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம். எழுச்சியோடு, ஒரு மாபெரும் புரட்சி செய்து அதை நிரூபித்தீர்கள். உலகத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டாத ஆளே கிடையாது.

திருட்டு டி.வி.டி-யிலோ, சட்டவிரோதமான இணையதளங்களிலோ படம் பார்ப்பது உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். நீங்களே அதை சரியாக உணர்ந்து விட்டால் அதைச் செய்வது உங்களுக்கு பிடிக்காது.

அனைத்து இளைஞர்களுமே பார்ப்பதாக, நான் குற்றம் சொல்லவில்லை, ஏதோ ஒரு சாரார் மட்டுமே அப்படி பார்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல ஒரு கலை. தயாரிப்பாளர் கூட ஒரு கலைஞன்தான்.   சினிமாவின் வரலாற்றில் எத்தனை பேர் சம்பாதித்தார்கள் எத்தனை பேர் விட்டுச் சென்றார்கள் என்று பார்த்தால்,

விட்டுச் சென்றவர்கள்தான் அதிகம்.அதனால் தயாரிப்பாளருக்கு பணம் போய்ச் சேர வேண்டும் என்றால், கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்த்தால் மட்டுமே போய்ச் சேரும்.

hari 1

ஒரு படத்தை மொத்தமாகவோ காட்சிகளாகவோ விமர்சனம் செய்கின்ற உரிமை பார்வையாளர்களுக்கு உண்டு.ஆனால் அதை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செய்யுங்கள்.

தவறான வழியில் அல்ல. யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.  இணையதளம் சம்மந்தப்பட்டவர்களுக்கு, நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால்,

உங்களுக்கு யார் மீது கோபம்? எதற்க்காக ஒரு படத்தை இப்படி செய்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒன்றும் இல்லை.

நீங்கள் ஒரு நாள் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் யோசித்துப் பாருங்கள். நாம் செய்வது சரியா தவறா என்று. ஐயோ இந்த பாவத்தை எதற்கு செய்கிறோம் என்று கண்டிப்பாகத் தோன்றும்.

ஒரு தயாரிப்பாளர் மூலமாக, முன்னூறு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள். அந்த தயாரிப்பாளரை நசுக்கி விட்டால்,

அவர் அடுத்து படம் தயாரிக்கவே மாட்டார். சினிமா துறையே நசித்து விடும்.  ஒரு தொழில் துறையை நசுக்கி விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்?

சினிமா ஒரு தொழில்.;அரசியல் அல்ல. இந்த தொழிலில் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்துவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். யாருமே நூறு சதவிகிதம் ஜெயிப்பதும் இல்லை.

நூறு சதவிகிதம் சம்பாதிப்பதும் இல்லை.  அதனால் இப்படி ஒரு சூழலில், பெரிய ஆபத்தில் நாங்கள் இருக்கும் போது, எங்களை நீங்கள் ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்?

தயவு செய்து எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள். இனிமேல் இந்த வேலையை செய்ய மாட்டோம் என்று உங்கள் டிவிட்ட்ரில் பதிவு செய்யுங்கள். உலகமே உங்களை கைதட்டிப் பாராட்டும்.

hari 2

தயவு செய்து எங்களை அழிக்காதீர்கள்.18 முதல் 21 மணி நேரம் வேலை செய்கின்ற தொழில் துறை எங்காவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தொழிலாளர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று

தொழிலாளர் நலத்துறை உடனே நோட்டீஸ் அனுப்பும்.  ஆனால் கலைஞர்களாகிய நாங்கள் ஒரு விஷயத்தை உருவாக்குவதற்கு கஷ்டப்படுகிறோம் அதிலும் விரும்பியே இந்த வேலையைச் செய்கிறோமென்று

தெரிந்த காரணத்தால் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதில்லை.நாங்கள் முதலாளிகள் இல்லை. உங்களுக்கு நல்ல உணவைத் தரவேண்டுமென்று சமையல் செய்பவர்கள்.

நீங்கள் எங்கள் தலையில் கல்லைத் தூக்கி போட்டால், நாங்கள் எப்படி நல்ல சமையல் செய்து தர முடியும்?எங்களுடைய படம் தவறான வழியில் பார்க்கப்பட்டால்,

நாங்கள் எவ்வளவு வேதனை படுவோம் என்று எண்ணிப்பாருங்கள். எல்லோரும் மனிதர்கள்தான். எல்லோருக்குமே சிவப்பு இரத்தம்தான்.

உங்களுக்கு பச்சை இரத்தம் வருமென்று சொன்னால் இந்த தவறை செய்யுங்கள்.உங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள் என,

எல்லோருடைய தொழிலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், அடுத்தவர்கள் செய்யும் தொழிலும் நன்றாக இருக்க வேண்டும், அதை நீங்கள் கஷ்டப்படுத்தக்கூடாது.

நீங்கள் தயவு செய்து சிந்தித்து பார்த்து உங்கள் தவறை நிறுத்திக்கொள்ளுங்கள். வேறொரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உலகமே நம் தமிழ் சமூகத்தை திரும்பிப்பார்த்து வியக்கும் அளவிற்கு,

நாம் ஏற்கனவே ஒரு புரட்சியை உருவாக்கி இருக்கிறோம். இதே மாதிரியான உயர்வுட­னேயே நாம் இருக்க வேண்டும்.

யாரும் நம்மைப் பார்த்து, கேவலமாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது,  ‘என்று கூறி இருக்கிறார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *