நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து, பரபரப்பு இப்போதுதான் அடங்கியிருக்கிறது. அதற்குள் திரையுலகம் அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது.
‘சிகா ‘ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SOUTH INDIAN CINEMATOGRAPHERS ASSOCIATION ) தேர்தல் அடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது வரும் 10.01.2016-ல் நடைபெறவுள்ள இத்தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’ எனவும், பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலை அணி’ எனவும்,கே.வி.கன்னியப்பன் தலைமையில்’ஆண்டவர்அணி’ எனவும் போட்டியிடுகின்றனர்.
இந்த மும்முனைப்போட்டியில் முனைப்பாக இருக்கும் ஓர் அணியான ‘ஆண்டவர்அணி’ யின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. ‘ஆண்டவர்அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு கே.வி.கன்னியப்பன்,செயலாளர் பதவிக்கு ஒய்.என்.முரளி,பொருளாளர் பதவிக்கு சி.எஸ்.ரவிபாபு ,
இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆர்.ரகுநாத ரெட்டி …
மற்றும் எஸ்.எல்.சரவணன், மூன்று இணைச்செயலாளர்கள் பதவிக்கு பி.பாலாஜி, ஆர்.எஸ்.ஞானசேகர், எம்.ஆர்.சரவண குமார், பதினொரு செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு எம்.டெனிசன், ஆர்.இளையராஜா, கே.எஸ்..நாகராஜ், ஆர்.ராஜாமணி, ஆர்.ஆர்.ராஜ்குமார், எல்.சசிகுமார், டி.சீனிவாசன், பி.செந்தில்குமார், எம்.சிவகுமார், கே.சுதாகர். ஆர்..கே.விக்ரமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அணியினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
ஒளிப்பதிவாளர் சங்கத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து எவரிடமும் முறையிட்டும் பலனில்லாமல் போகவே இறைவனிடம் முறையிடும் கருத்தில்தான் ‘ஆண்டவர் அணி’ என்று பெயர் வைத்திருப்பதாக பெயர்க் காரணம் கூறினார்கள்.
எட்டு ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தாமல் இருந்துள்ள நிலையில் இப்போது முறையான தேர்தல் நடைபெறத் தங்கள் ‘ஆண்டவர் அணி’யே காரணம் என்கின்றனர் இவர்கள்.
முறையான கணக்குகள் காட்டாதது, வசூலான தொகையை சங்கத்துக்கு தராமல் அனாவசிய செலவு செய்து பணத்தை விரயம் செய்தது, சங்கத்தின் சில உறுப்பினர்கள் மீது , பழி வாங்கும் வகையிலான முறையற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொண்டது என்று இன்றைய முக்கியப் பொறுப்பாளர் ஜி.சிவாவின் நிர்வாகத்தின் மீது இவர்கள் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை வைக்கிறார்கள்.
நடுநிலை வகிக்கும் பி.சி.ஸ்ரீராம் அணி பற்றியும் இந்த ஆண்டவர் அணியினர் கேள்விகள் எழுப்புகிறார்கள்.
பி.சி.ஸ்ரீராம், பி.கண்ணன்,.ராஜீவ்மேனன் ஆகியோர் இத்தனை நாள் முந்தைய சங்கத்தின் முறை கேடுகளை தட்டிக்கேட்காமல் இருந்து விட்டு இப்போது மட்டும் தேர்தலில் நிற்பது ஏன்? என்று கேட்கும் இவர்கள், பி.சி.ஸ்ரீராம், பி.கண்ணன்,.ராஜீவ்மேனனை எல்லாம் களத்தில் இறக்கியுள்ளதும் கூட சிவா தரப்பினரே என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.தாங்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடக் காரணம் நியாயம் கேட்டும் வெளிப்படையான நிர்வாக மாற்றம் வேண்டியும்தான் என்று டி.சீனிவாசன் வேட்பாளர்களுக்கான தன் அறிமுக உரையில் குறிப்பிட்டார்.
”மாற்றத்துக்கான வாய்ப்பு கொடுங்கள் செயல் படுகிறோம்”. என்கிறார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கன்னியப்பன்.
”ஆதரவு தாருங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்”என்றார் செயலாளர் பதவிக்குப்போட்டியிடும் ஒய்.என்.முரளி.
”நாங்கள் பிரபலம் இல்லாதவர்கள் பிற பலமும் இல்லாதவர்கள் பண பலமும் இல்லாதவர்கள். ஆனால் மனபலம் உள்ளவர்கள் ; எங்கள் உழைப்பின் வருமானத்தைக் கொண்டுதான் இப்போது களம் இறங்கியிருக்கிறோம்.’ ‘என்றார் எஸ்.எல்.சரவணன்.
”மாற்றம் வேண்டும் என்றே போட்டியிடுகிறோம்.ஒளிப்பதிவாளர் சங்கத்தில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது.எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.”என்றார் எல். சசிகுமார்.
‘ நிர்வாகத்தில் ஊழல் செய்தவர்கள் ஓரணி, ,ஊழல் செய்தவர்களைக் கண்டு கொள்ளாதவர்கள், தட்டிக் கேட்காதவர்கள் இன்னொருஅணி, ஊழலை எதிர்த்து 2 ஆண்டுகளாகப் போராடுகிறவர்கள் மற்றொரு அணி, என இதில் 3 அணியினர் போட்டியிடுகின்றனர். நாங்கள் மூன்றாவது அணியாக இருப்பவர்கள் . அதாவது.ஊழலை எதிர்த்து போட்டியிடுகிறவர்கள் .”என்றார் சீனிவாசன்..”வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகள் மூலம் சுமார் ஆறரைக் கோடி முதல் பத்து கோடி ரூபாய் வரை பணத்தை வசூல் செய்துவிட்டு அதில் கலந்து கொண்ட நடிக நடிகையருக்கு கூட பேசியபடி ஒழுங்கான சம்பளம் தராமல் அவர்களை கப்பல் ஏற்றி ஆடு மாடுகள் போல அனுப்பி விட்டு , மொத்தக் காசையும் கொள்ளை அடித்த சிவா அணி , இப்போது சங்கத்தின் இருப்பில் எட்டாயிரம் மட்டுமே உள்ளது என்கிறார்கள்.. இது என்ன நியாயம் ?
“கலை நிகழ்ச்சியில் ஊழல் நடந்து கொண்டது என்றும் அதை செய்தவர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி என்றும் குற்றம் சாட்டிய பி.சி. ஸ்ரீராம் இப்போது அவரது அணியில் ராம்நாத் ஷெட்டியை சேர்த்துக் கொண்டது ஏன் ?” என்பதும் இவர்களின் முக்கியக் கேள்வி .
‘
‘ பிசி ஸ்ரீராம் அணியில் எல்லா பொறுப்புக்கும் நிற்கிறார்கள் ஆனால் ஜி சிவா அணியில் தலைவர் பதவிக்கு யாருமே நிற்கவில்லை. தலைவர் இல்லாமல் சிவா அணி நிற்கிறது . சிவா அணியினரோசு சேர்ந்து குற்றம் செய்த ஆரோக்கியதாஸ் , மற்றும் இளவரசுவை ஸ்ரீராம் அணி தங்கலோசி சேர்த்துக் கொண்டுள்ளது . ஆக இதில் எந்த அணி வென்றாலும் இரண்டு தரப்பும் சேர்ந்து ஊழல் செய்யும்.
ஆக பழைய ஊழல் அணிக்கு துணை போகவே பி சி ஸ்ரீராம் அணி உதவுகிறது. . பி சி ஸ்ரீராம் , பி.கண்ணன் , ராஜீவ் மேனன் ஆகிய பிரபலங்களின் பெயரில் உள்ள அணி வென்றாலும் ,இவர்கள் இருக்கும் பிசியில் இவர்களால் சங்கத்துக்காக செயல்பட முடியாது .
எனவே இவர்கள் பெயரை வைத்துக் கொண்டு மீண்டும் சிவா அணியே ஊழல்களையும் அராஜகதத்தையும் தொடரும்.தாங்கள் யாருக்கும் எதிரியில்லை ஊழலைத் தட்டிக் கேட்கவே எங்கள் ஆண்டவர் அணி உருவானது ” என்கிறார்கள் இவர்கள் .
”தேர்தல் முறையாக நடக்க வேண்டும் ,சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200பேரில், ஆந்திராவில்120பேர் உறுப்பினர்கள். இருக்கிறார்கள். கர்நாடகாவில் 60பேர் இருக்கிறார்கள் கேரளாவில் 40பேர் இருக்கிறார்கள்.அவர்களையும் தேர்தலில் முறையாக பங்கேற்க வைக்க வேண்டும்.சங்கத்தின் வரவு செலவுகள் முறையாக நடக்க வேண்டும்,சங்க உறுப்பினர்கள்1200பேரில் 400 பேருக்கு மேல் வேலையில்லை. சீரான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
— போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளதாகக் கூறும் ஆண்டவர் அணியினரின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன ?
நேர்மையான நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும்.
முறையான ஊதிய உயர்வுக்கு வழி செய்யப்படும்.
ஒழுங்கு நடவடிக்கையில் வெளிப்படையான முறை கொண்டு வரப்படும்.
காப்பீடு,விபத்து இழப்பீடு முறைப் படுத்தப்படும்.
தொழில் நுட்ப அறிவு மேம்படுத்தப்படும்.
‘சிகா’வுக்கென ஒரு ஆப் அப்ளிகேஷன் ஏற்படுத்தப்படும்.
ஒளிப்பதிவு பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.
கேமரா எக்ஸ்போ நடத்தப்படும்.
அசோசியேஷனுக்கு சொந்தமாக கட்டடம் கட்டப்படும்.
ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும்
.அரசு உதவியுடன் பல சேவைகள் தொடங்கப்படும் .
– என்பவையே அவை.
நன்றாகத்தான் இருக்கிறது . நேர்மையான தகுதியான நல்ல அணி எதுவோ அவர்களே வெல்லட்டும் !