போன வருடம் இதே சமயம் தீயா வேலை செய்யணும் குமாரு மூலம் வெற்றி ரவுண்டு வந்த சித்தார்த், இந்த வருடம் ஜிகிர்தண்டா மூலம் மீண்டும் அதே ரவுண்டு வருகிறார் .
நிஜமாகவே ரவுண்டுதான் !
ஜிகிர்தண்டா படக் குழுவுடன் மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்துவிட்டு அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போகும் வழியில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, ஜிகிர்தண்டாவின் ஜில்லான வெற்றி தித்திப்பை பற்றிப் பேசினார்.
“ஜிகிர்தண்டா முழுக்க முழுக்க டைரக்டரின் படம். அப்படி ஒரு சூப்பர் ஸ்கிரிப்டை பண்ணி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
நான் தயாரித்த காதலில் சொதப்புவது எப்படி மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகரான
பாபி சிம்ஹா இந்தப் படத்தில் ஒரு பிரம்மாதமான கேரக்டரில் சூப்பரா நடித்து அசத்தி இருப்பது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோசம் .
அதே மாதிரி நடிகர் விஜய் சேதுபதி அப்படி ஒரு பயந்தாங்குளி கேரக்டர்ல நடிச்சுக் கொடுத்தது அவரோட தில்லான விஷயம் . கொஞ்சம் கூட கவுரவம் பாக்காத அவருக்கு என் நன்றி “என்றவர்,
“இனி வருஷம் ஒரு படம் என்பதெல்லாம் இல்ல. இந்த வருஷமே வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடிச்ச காவியத் தலைவன் வருது கன்னடத்தில் கலக்கிய லூசியாவின் ரீமேக்கை தமிழில் எடுத்துட்டு இருக்கோம் ” என்றார் .
இந்திக்குப் போகும் ஜிகிர்தண்டாவில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தால் அதை விட சந்தோசம் என்ன இருக்க முடியும்?”என்று எதிர்க் கேள்வி கேட்டார்
இப்படியாக பல கேள்விகள் பல ரவுண்டு போன பிறகு அந்தக் கேள்விகள் வந்தன.
கல்யாணம் எப்போ ?
அது பத்தி இப்போ யோசிக்கல. படங்கள பத்தி பேசறது நல்லா இருக்கு
உங்க வருங்கால மனைவி நடிகையா ?
அது பத்தி இப்போ சொல்ல என்ன இருக்கு . அது எனக்கு ரொம்ப பர்சனலான விஷயம். அது அப்படியே இருக்கட்டுமே.
உங்க கல்யாணம் காதல் கல்யாணமா இருக்குமா?
கண்டிப்பா கல்யாணமா இருக்கும் .
—- ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா!
முடியலடா சாமி!
கடைசிவரை சமந்தா என்ற வார்த்தை அவர் வாயில் இருந்து வரவே இல்லை
விருப்பமில்லாத கேள்விகளை எதிர்கொண்டு சமாளிப்பது எப்படி என்று நீங்க ஒரு புத்தகமே போடலாம் சித்து .