மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் லிமிடெட் சார்பில் புன்னகைப் பூ கீதா வழங்க, எஸ்கொயர் புரடக்ஷன் லிமிடெட் தயாரிப்பில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகைப் பூ கீதா, யாஷிகா ஆனந்த் , பிட்டு தாமஸ் நடிப்பில், ஸ்ரீனிவாசா காஷ்யப், எல்லி நாவ் ஆகியோருடன் இணைந்து எழுதி,வினய் பரத்வாஜ் இயக்கி இருக்கும் படம்.
லண்டன் வாழ் காஸ்மெட்டிக் சர்ஜன் ராஜ் வர்தன் ( ரிச்சர்டு ரிஷி ) , தனது அழகான , படித்த , தனது முன்னேற்றத்துக்கு பல விதங்களிலும் உதவியாக இருக்கிற மனைவிக்கு துரோகம் செய்து, மாயா பிள்ளை என்ற மாடலுடன் ( யாஷிகா ஆனந்த்) பழக்கம் வைத்துக் கொள்கிறார் .
ஒரு முறை வீட்டிலேயே காதலியுடன் டாக்டர் சல்லாபிக்க, மனைவி வீட்டுக்கு வந்து விட, காதலியை அவர் மறைக்க முயல, அவள் மரணம் அடைய, அவள் உடலை அவர் புதைக்க முயல… அப்புறம் .. அப்புறம் .. அப்புறம் .? அதான் கதை
படத்தின் பலம் லண்டனை உள்ளே வெளியே , இரவு , பகல் என்று அட்டகாசம்னா லைட்டிங் மற்றும் டோனில் காட்டும் அபிமன்யூ சதானந்தனின் ஒளிப்பதிவு
மனைவி கேரக்டரில் அசத்தி இருக்கிறார் புன்னகைப் பூ கீதா. கடைசியில் அவர் ஆடும் நடனம் அபாரம் . ஒரு நடிகர் அல்லது நடிகை கதையின் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு எங்கேனும் தனது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும் . அப்படி கீதா தன்னை நிரூபிக்கும் நடனம் அது . ரிஷியும் யாஷிகாவுக்கு கேரக்டர்களுக்கு ஏற்ற கேரட்கள். மசாலா காபி, ஜோன் சுர்ரா, தர்ஷனா, ஸ்டாக்டோ, ரோஹித் மாட் கொடுத்திருக்கும் இசையும் சிறப்பு
அட்டகாசமான பிரேம்கள் வைத்து மேக்கிங்கில் கவர்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ்
எல்லாம் இருந்தும் தமிழ் சினிமா திரையரங்கு வணிக வெற்றிக்கு போதுமான கதை திரைக்கதை இல்லை.
அயல்நாடு வாழ் தமிழர்களை படம் கவர வாய்ப்பு உண்டு .