சிலுக்குவார்பட்டி சிங்கம் @ விமர்சனம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ரெஜினா கசான்ட்ரா,

யோகி பாபு, ஆனந்த் ராஜ்,ஓவியா, கருணாகரன், மன்சூர் அலிகான் , லிவிங்ஸ்டன்,நடிப்பில் 

செல்லா அய்யாவு இயக்கி இருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம் . படம் சிலுக்குமா ? இல்லை வழுக்குமா ? பேசலாம். 

சிலுக்குவார் பட்டி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள –  தைரியமோ கடமை உணர்ச்சியோ இல்லாத –
 
அநியாயங்களை தட்டிக் கேட்கும் பழக்கமே இல்லாத கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தி ( விஷ்ணுவிஷால்) , சக கான்ஸ்டபிள் பாஸ்கர் ( கருணாகரன்) 
 
மக்கு சப் இன்ஸ்பெக்டர் முத்தையா ( லிவிங்க்ஸ்டன்)
 
ஜொள்ளு பார்ட்டியாக இருந்தாலும் கவுன்சிலராக இருக்கும் மாமனின் மகள் ராஜேஸ்வரியை ( ரெஜினா கசான்ட்ரா) காதலிக்கிறான் சத்திய மூர்த்தி  .
 
ஆனால் ஸ்டேஷனில் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சாப்பாடு வாங்கித் தரும் வேலையை மட்டும் செய்கிற சத்திய மூர்த்திக்கு பெண் கொடுக்க மாமனுக்கு  விரும்பவில்லை . 
 
அமைச்சராகும் கனவில் இருக்கும் லோக்கல் அரசியல்வாதி இளைஞன் ( சண்முகராஜா ) ராஜேஸ்வரி விசயத்தில் போட்டிக்கு வருகிறான் . 
 
  பல போலீஸ் படைகளையே நடுங்க வைத்த சைக்கிள் சங்கர் (ரவி ஷங்கர்) என்ற பிரபல ரவுடியை , அவன் யார் என்று தெரியாமலேயே, 
 
ஒரு பாரில் போதையில் , ஒரு ஆம்லெட்டை தட்டி விட்டு வீணாக்கிய கோபத்தில்,  அடித்து உதைத்துக் கைது செய்கிறான் சத்திய மூர்த்தி , 
 
 பல நாள் ஸ்டேஷனில் வைத்து அவமானப்படுத்துகிறார்கள் . 
 
ஆளுங்கட்சி அமைச்சர் சொன்னபடி வருங்காலத்தில் அமைச்சராக வாய்ப்பு உள்ள ஒருவரை ( மன்சூர் அலிகான்)
 
கொலை செய்யும் அசைன்மமென்டில் உள்ள சங்கர்,  தான் யார் என்பது  தெரியக் கூடாது என்பதற்காக எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறான் . 
 
ஒரு நிலையில் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் அவன் , வருங்கால அமைச்சரை கொல்வதற்கு முன்பு
 
சத்திய மூர்த்தியை கொல்ல சபதம் எடுக்கிறான் . சத்திய மூர்த்தி பயந்து தலைமறைவாகிறான் . 
 
இந்த நிலையில் ராஜேஸ்வரியை அமைச்சர் கனவில் உள்ள இளைஞனுக்கு திருமணம் செய்து தர அவளது அப்பா முடிவு செய்ய ,
 
கல்யாண நாளும்  நெருங்க , சைக்கிள் சங்கர் கொலை வெறியோடு சத்திய மூர்த்தியை தேட , 
 
போலீஸ் உயர் அதிகாரிகளும் அவனுக்கு ஆதரவாக சத்திய மூர்த்தியை தேட , 
 
கல்யாணத்தன்று மேலே சொன்ன முக்கிய கேரக்டர்கள் எல்லாம் மண்டபத்தில் கூட,  அப்புறம் என்ன நடந்தது என்பதை …..
 
கொஞ்சம் காமெடியாக சொல்லி இருக்கிறார்கள் 
 
முக்கியக் கதாபாத்திரத்தில் வரும் பிரபல நடிகர்கள் மட்டுமல்லாது , சின்னத்தம்பி பிரதர்ஸ் ,
 
வயிறு கலங்கிய பெண் மணி என்று துணைக் கதாபாத்திரங்கள் கூட  அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். 
 
ராட்சஷன் போன்ற படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,
 
கதாநாயகன் படங்கள் வரிசையில் இந்தப் படத்திலும் மிக ரிலாக்சாக ,ஆனால் உற்சாகமாக நடித்துள்ளார் . 
 
ரெஜினா கசான்ட்ரா கலர்ஃபுல் கவர்ச்சி . குளோசப்தான்…… !
 
வழக்கம் போல் ஹீரோவோடு இல்லாமல் வித்தியாசமாக  வில்லன் கூட இருந்து ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் யோகிபாபு .
 
ஒரு முறை அவர் வசனத்துக்கு வில்லன் அடிக்கும் கவுண்ட்டர் கூட சிரிப்பு மூட்டுகிறது 
 
பயந்தாங்குளி ஹீரோ , போலீஸ் படையையே நடுங்க வைக்கும் வில்லன் என்று ஆரம்பத்தில் 
 
காட்சிகள் வந்த கால் மணி நேரத்திலேயே முழு கதையும் புரிந்து விடுகிறது ஓர் அலுப்புதான் 
 
ஆனாலும்  வில்லனை ஹீரோ ஆம்லேட் போன ஆத்திரத்தில் கைது செய்வது துவங்கி ,
 
வில்லன் ஸ்டேசனில் இருந்து வெளி வருவது வரையிலான காட்சி அமைப்பில்  கெத்து காட்டுகிறார் இயக்குனர் செல்லா அய்யாவு . சபாஷ் . 
 
லக்ஷ்மன் ஒளிப்பதிவு அவ்வளவு அழகும் வண்ண மயமும். இந்தப் படத்தில் வேறு ஒன்றும் செய்ய முடியாது . 
 
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் ஒகே . படம் ரொம்ப தொங்கிவிடாமல் காப்பாற்றுகிறார் படத் தொகுப்பாளர் ரூபன் .
 
என்னதான் காமெடி படம் என்றாலும் சைக்கிளில் கதாநாயகியோடு போகும் ஹீரோவை வில்லனும் போலீசும்
 
ஜீப்பில் துரத்தி அதுவும் சேஸ் பண்ண முடியாமல் கஷ்டப் படுவது எல்லாம் … முடியலீங்க . ஜனங்க பாவம் ல ?
 
இத்தனை கெட் அப் போட்ட ஹீரோ ஒரு கெட்டப்பிலாவது உருப்படியாக எதையும் செய்து இருக்கலாம்
( லேடி கெட்டப்பில் டிராமா மேடையில்  ஓர் உருப்படியாக் வந்து இடுப்பை ஆட்டுவது எல்லாம் உருப்படியான லிஸ்டில் வராது   !)
 
கல கல பாதி … லக லக மீதி 
 
சிலுக்குவார் பட்டி சிங்கம் … பிடரி ஒகே . கர்ஜனை கம்மி 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *