சரவணன் இருக்க பயமேன் @ விமர்சனம்

sara 55

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, 

ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  டி.இமான் இசையில் எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.  பயமேனா ? பயமேவா? பார்க்கலாம் .

தமிழகத்தில் தொண்டர்களே இல்லாத ஒரு தேசியக் கட்சி,  இங்கே ஆள் பிடிக்க முயல அந்தக் கட்சியையே இரண்டாக உடைத்து புதிய தேசியக் கட்சியை உருவாக்கி அதன் தலைவர் ஆகிறார் ஒருவர் ( சூரி)

sara 22

ஆனால் லோக்கல் கட்சித் தலைவர் ஒருவருக்கும் (மன்சூர் அலிகான்) அவருக்கும் சிண்டு முடிந்து பிரச்னை உண்டு பண்ணி .

அந்த புதிய தலைவரை பயந்து போய் துபாய் போக வைத்து விட்டு, அந்தக் கட்சியின் மாநில தலைவர் ஆகிறான் , அவருக்கு மருமகன் முறை உள்ள ஓர் இளைஞன் . (உதயநிதி ஸ்டாலின்)

அவனுக்கு அவன் அத்தை பெண்ணுக்கும் சிறு வயது முதலே ஆகாது . வளர்ந்து பெரிய மனுஷி ஆன பிறகும் ( ரெஜினா ) அதே கோபத்தில் இருக்கிறார் .

sara 77

ஆனால் அவனோ அவளை காதலிக்கிறான் .

இதற்கிடையே  அத்தைப் பெண்ணை லோக்கல் கட்சித் தலைவரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவாகிறது .

நாயகன் மனம் உடைய , நாயகனை ஒரு தலையாய் காதலித்து ஒரு விபத்தில் இறந்து போன பாத்திமா என்ற பெண்ணின் ஆவி ( சிருஷ்டி டாங்கே) உதவிக்கு வருகிறது .

sara 999

அததைப் பெண்ணின் மனதை மாற்றி நாயகனை காதலிக்க வைக்க ஆவி முயல, ஊரில் கோயிலுக்கு காப்பு கட்டுகிறார்கள் . எனவே ஆவியால் ஒரு நிலைக்கு மேல் முடியாமல் போகிறது .

அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சரவணன் இருக்க பயமேன்.

உதயநிதி ஸ்டாலின் வழக்கம் போல தனக்கு தோதான கேரக்டரை எடுத்துக் கொண்டு  நடித்திருக்கிறார் .

sara 9

ஷூட்டிங் நடந்த இடம் எல்லாம் ரொம்பப் புழுக்கம் போல , எல்லாக்  காட்சிகளிலும் ஆடையை சிறுபான்மையாக்கி ஆவலை பெரும்பான்மையாக்கி இருக்கிறார் ரெஜினா .

விட்டால் தன்னைத் தானே உரித்து ஊற வைத்துக் கொள்வார் போலிருக்கிறது. யப்பா!

sara 4

யோகி பாபுவின் காமெடி வசனங்கள் சிரிக்க வைக்கின்றன . வழக்கம் போல கலக்குகிறார் மதுமிதா . குறிப்பாக அந்த வைப்ரேட்டிங்  போன் ரியாக்ஷன் செம கலாட்டா !

மற்றபடி தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான காமெடி நடிகர்கள் படத்தில் இருந்தும் அவர்கள் எல்லாம் எல்லாம் திரையை நிரப்புகிறார்கள் அவ்வளவே . 

sara 1

இவ்வளவு பேரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் யோசித்து இருந்தாலே இன்னும் நல்ல காமெடி வந்திருக்குமே

இமான் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆச… ‘ பாடல் இனிமை இனிமை .

‘லாலா கடை சாந்தி’ பாடல் குத்தாட்டம் போடுகிறது . பாடலை வண்ணமயமாக எடுத்து இருக்கிறார்கள் .

sara 66

நாயகி உடலில் ஆவியாக இருக்கும் பாத்திமா , தன் வீட்டுக்குப் போய் அப்பா அம்மாவை சந்திக்கும் காட்சி மனசுக்குள் கனம் சேர்க்கிறது

முதல் பாதி  ஏனோ தானோ  போகிறது .

sara 33

இன்னும் கொஞ்சம் நல்ல கதை , அதற்கேற்ற திரைக்கதை , எல்லா காமெடி நடிகர்களுக்கும் நல்ல காமெடி வசனங்கள் என்று முயன்று இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *