சிம்பு , அனிருத்தில் ஆரம்பித்து பல்வேறு திசைகளில் மையம் கொண்டு தனுஷ், தொலைக்காட்சிகள், இளையராஜா , ஜேம்ஸ் வசந்தன் என்று பலரையும் பதம் பார்க்கும் பீப் சாங் விவகாரம் அடுத்து திரும்புவது சிவகார்த்திகயனை நோக்கி !
அவர் கேட்டுக் கொண்டார். முதலில் இதை மறுத்த நீதிபதி, பின்னர் உணவு இடைவேளையின் போது அந்த பாடலை கேட்டாராம்.
சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதியரசர் ராஜேந்திரன் கூறியதை அடுத்து சிம்பு எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் , சிவகார்த்திகேயன் எப்படி இதில் வருகிறார்?
மேற்படி பீப் சாங் குரூப்பில் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமான நபர் அனிருத்.
ஒரு உற்சாக சூழலில் அனிருத் இந்தப் பாடலை சிவகார்த்திகேயனுக்கு அனுப்பியதாகவும் பாடலைக் கேட்ட சிவா கார்த்திகேயன் அவர் குழுவில் உள்ள ஒரு சக நடிகருக்கு அனுப்பியதாகவும் , அந்த நடிகர் அவரது நண்பர்கள் சிலருக்கு இந்தப் பாடலைப் போட்டுக் காட்டியதாகவும் அப்படியே இந்தப் பாடல் ஹெச் ஐ வி வைரஸ் மாதிரி ரகசியமாகப் பரவி , ஒரு நிலையில் முற்றிய எயிட்ஸ் நோயாக இணைய தள வெளியில் வெடித்தது
— என்று ஒரு தகவல் அல்லது வதந்தி .
இதற்கிடையில் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பீப் பாடலுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ‘ என்று வேறு ஒரு கருத்தை சொல்லி விட்டார் .
”இப்படிதான் பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் இடையில் கூட சம்மந்தமே இல்லை என்று சிம்பு சொன்னார் . ஆனால் டி.ராஜேந்தர் பீப் பாடல் குறித்து போலீசுக்குக் கொடுத்த புகாரில் பாடலுக்கு இசை அமைத்தது அனிருத் என்ற உண்மையை தெளிவாகச் சொல்லி இருந்தார். இன்ஹ்ட விசயத்தில் சிம்பு இல்லன்னு சொன்னா இருக்குன்னு அர்த்தம் ” என்கிறார் , ஒரு சக சினிமா பிரமுகர்
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் . ஆனா பனிக் காலத்திலும் புகை வருமே .
தகவல் உண்மையோ அல்லது எந்த பனிப்போர் காரணமாக வரும் வதந்திப் புகையோ … தெரியலையே !