ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சக்தி வாசு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி நடிப்பில் ,
பி.வாசு கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சிவலிங்கா
ஜனவரி 26 ஆம் தேதி படம் வெளிவர இருக்கும் நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இயக்குனர் பி.வாசு
“கன்னடத்தில் நான் இயக்கி 85 திரையரங்குகளில் நூறு நாள் ஓடிய ஷிவலிங்கா படத்தின் ரீமேக்தான் இந்த சிவலிங்கா .
அந்த ஆப்த மித்ராவை மீண்டும் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்தேன் . அதுதான் சந்திரமுகி .
அதே போல கன்னடத்து ஷிவ லிங்காவில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்து தமிழ் சிவலிங்காவை எழுதி இயக்கி இருக்கிறேன் .
ஓர் இளைஞன் அநியாயமாகக் கொல்லப்படுகிறான் . அதை விசாரிக்க ஒரு சி ஐ டி போலீஸ் ஆபீசர் வருகிறார். கொலையை நடந்த இடத்தில் இருந்த ஒரே சாட்சி ஒரு புறாதான் .
அந்த புறா மூலமாக எப்படி குற்றவாளியை போலீஸ் ஆபீசர் கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படம் . கொலை செய்யப்படும் இளைஞனாக என் மகன் சக்தி நடிக்க,
பட்டுக் குஞ்சம் என்ற காமெடி கேரக்டரில் வடிவேலு உட்பட பல கதாபாத்திரங்கள் கொண்ட படம் இது .
கன்னட படத்திலேயே புறா வரும் காட்சிகளுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது . ஒரு தியேட்டர் அதிபர் என்னிடம் ” சார் நைட் ஷோ டைம் ல புறா வரும் காட்சி சவுண்டு ,
சென்னை டூ டெல்லி வரை நடக்கும் புறா பந்தயத்தில் ஜெயிச்ச ஒரு புறாவை பயன்படுத்தி இருக்கேன் .
சந்திர முகி படத்துல ரஜினி சார் – வடிவேலு காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆனது போல இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வடிவேலு ஒர்க் அவுட் ஆகும் .
தமன் இசையில் பாடல்கள் பிரம்மாதமா வந்து இருக்கு .
இந்தப் படத்துக்காக கர்நாடகாவுல ஓர் அரண்மனைல படம் எடுத்துட்டு இருந்தப்போ காவிரி பிரச்னையால ஷூட்டிங் நின்னு போச்சு .
தயாரிப்பாளர் ரவீந்திரன் அந்த அரண்மனைய அப்படியே செட் போட்டு கொடுத்தார் . மிச்ச காட்சிகளை அந்த சென்னையில் அந்த செட்டிலே எடுத்தேன் .
லாரன்ஸ் என்னோடு இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை சொல்லி இருக்கிறார் . அவரது விருப்பம் ரஜினியின் மன்னன் படம் .
விஜய் சாந்தி கேரக்டருக்கு பொருத்தமாக ஒரு நடிகை கிடைத்தால் ரஜினி வேடத்தில் ராகவா லாரன்சும் கவுண்டமணி கேரக்டரில் வடிவேலுவும் கிடைக்க மன்னனை ரீமேக் செய்வேன் ” என்றார் பி.வாசு
(இதுவரை 65 படங்களை இயக்கி உள்ளார் பி. வாசு . நிகழ்வில் உள்ள இயக்குனர்களில் இனி செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பு ஓரளாவாவது உள்ள இயக்குனர் இவர் ஒருவர் மட்டுமே )
படம் பற்றி பேசிய ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் “நான் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளேன் . சசிகுமார் இயக்கிய வெற்றிவேல் நான் தயாரித்த முதல் படம் .
அடுத்த படம் பற்றி யோசிக்கையில்தான் நண்பர் ஒருவர் வாசு சார் இயக்கி சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருந்த கன்னட ஷிவ லிங்காவை பார்க்க வைத்தார் .
அடுத்த நாள் நான் வாசு சாரின் வீட்டுக்குப் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘தமிழில் சிவலிங்கா படத்தை நான் தயாரிக்க நீங்கள் இயக்க வேண்டும்’ என்று கேட்டேன் .
சம்மதித்தார் . ஆரம்பித்தோம். ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது . விரைவில் எடுத்து முடித்து ஜனவரி 26 அன்று திரைக்கு வருகிறோம் என்றார்
வாழ்த்துகள்