டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர் ரவீந்திரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் , சக்தி வாசு, ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானு ப்ரியா ஆகியோர் நடிக்க , பி . வாசு இயக்கி இருக்கும் படம் சிவலிங்கா .
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு .
படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள் . நடனம் , ஆக்ஷன் , கிளாமர், நகைச்சுவை, பேய், சாமி எல்லாம் கலந்த படமாக இது இருக்கும் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
பாடல்களில் வழக்கம் போல துள்ளித் துள்ளி உற்சாகமாக ஆடுகிறார் ராகவா லாரன்ஸ் . ரித்திகா சிங் கவர்ச்சியாக ஆடுகிறார் .
படத்தை வாங்கி வெளியிடும் அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு நிகழ்ச்சியில் பேசும்போது
” குடும்பத்தோடு ரசிகர்களை திரையரங்குக்கு கொண்டு வருவதில் வல்லவர் வாசு சார் . இந்தப் படமும் அப்படியே .
இது வாசு சாரின் சந்திர முகி ,லாரன்ஸ் மாஸ்டரின் காஞ்சனா இரண்டும் சேர்ந்த படமாக இது இருக்கும் ” என்றார் .
தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது
” ஷிவலிங்கா கன்னடம் பார்த்து விட்டு வாசு சாரைப் பார்த்து இந்தப் படத்தை தமிழில் தயாரிக்க விரும்புவதாக கூறினேன் .
அவரும் சம்மதித்தார் .கன்னடப் படத்தில் இருந்து சிறப்பாக பல மாற்றங்கள் செய்து தமிழில் சிறப்பாக படத்தை எடுத்துள்ளார் ” என்றார் .
நடிகை சாரா பேசும்போது
” பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலினும் பெரிது என்பது திருக்குறள். அது போல எந்தப் பலனும் எதிர்பாராமல்,
இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த வாசு சார், தயாரிப்பாளர் மற்றும் படக் குழு செய்த உதவியை மறக்க மாட்டேன் “: என்றார் .
”நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் இந்தப் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன் . வாசு சாருக்கும் படக் குழுவுக்கும் மிக்க நன்றி ” என்றார் பானு பிரியா
சக்தி வாசு பேசும்போது ” ஷிவலிங்கா கன்னடப் படத்தில் எனக்கு என் அப்பாவிடம் சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது கன்னட ஹீரோ சிவராஜ் குமார் . அவருக்கு நன்றி .
தமிழில் என் கேரக்டரை மேலும் மேம்படுத்த லாரன்ஸ் மாஸ்டர் உதவினார் . அவருக்கும் நன்றி . படம நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ” என்றார்
ரித்திகா சிங் தன் பேச்சில் “ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு சிரமாமாக இருந்தது . ஏனென்றால் முற்றிலும் வேறு மாதிரியான கேரக்டர் இது .
ஆனால் வாசு சார் இயக்கிய விதமும் லாரன்சின் ஒத்துழைப்பும் சிறப்பாக நடிக்க உதவியது ” என்றார்
ராதாரவி பேசும்போது ” வாசு ஒரு சிறந்த இயக்குனர் . சின்னத் தம்பியில் என் நடிப்பைப் பார்த்து சிவாஜி சார் பாராட்டினார் . காரணம் வாசு . இந்தப் படமும் அவரது சிறப்பான படைப்பாக இருக்கும் .
லாரன்ஸ் ஆடுவதை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது . ரித்திகா சிங் எப்பவுமே எனர்ஜியாக இருக்கிறார் . படத்தில் சக்தி வாசுவின் நடிப்பைப் பார்த்து நானே கலங்கி விட்டேன் . அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார் ” என்றார் .
ராகவா லாரன்ஸ் தன பேச்சில் ” வாசு சாரின் இயக்கத்தில் நடிப்பதை என் பாக்கியமாக கருதுகிறேன் . அவரது மேக்கிங் அவ்வளவு அசத்தலாக இருக்கிறது .
இந்தப் படத்தின் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான் . அவ்வளவு சிறப்பான நடிப்பு . சக்தி வாசு மிக சிறப்பாக நடித்துள்ளார் . படம் முழு திருப்தியாக வந்திருக்கிறது ” என்றார் .
இயக்குனர் பி . வாசு பேசும்போது ” இந்தப் படம் வடிவேலுவுக்கு மீண்டும் ஒரு சந்திர முகியாக இருக்கும் .காமெடி மட்டுமல்லாது ஒரு கேரக்டரிலும் அவர் அசத்தி இருக்கிறார்.
சந்திரமுகி படத்தில் படிக்கட்டு ஒரு கேரக்டராக இருந்தது போல இந்தப் படத்தில் புறா ஒரு முக்கியக் கேரக்டராக இருக்கும் . சக்தி நன்றாக நடித்துள்ளார் . ரித்திகா சிங் நன்றாக நடித்துள்ளார் .
ராகவா லாரன்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம் . அட்டகாசமாக நடித்துள்ளார் .
ஒரு காட்சியை நான் எடுத்த விதத்தில் இம்ப்ரெஸ் ஆகி எனக்கு சிங்க முக மோதிரம் ஒன்று பரிசளித்தார் . அதே போல ரித்திகா சிங்கையும் உற்சாகப் படுத்தி பரிசளித்தார் .
நான் இயக்கிய உழைப்பாளி படத்தில் வரும்’ உழைப்பாளி இல்லாத நாடுதான்’ பாடலில் நான்காவது வரிசையில் ஆடிய லாரன்ஸ் இன்று இவ்வளவு பெரிய ஸ்டாராக வந்திருக்கக் காரணம்,
இப்படி அவர் சினிமாவை நேசிக்கும் விதம்தான் ” என்றார்
படத்துக்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு