நாகர்ஜுனா இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும் லாவண்யா திரிபாதியும் நடிக்க,
அனுஷ்கா டைட்டில் பாடலுக்கு ஆடி கவுரவத் தோற்றத்தில் நடிக்க,
பிரம்மானந்தம், நாசர், பிதாமகன் மகாதேவன், ராமராஜு, சலபதிராவ், ஹம்சவர்தினி உடன் ஆகியோர் நடிக்க,
கல்யாண் கிருஷ்ணா குரசாலா இயக்கத்தில், தெலுங்கில் வந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த சோகடே சின்னி நயனா என்ற படம்
தமிழில் ‘சோக்காளி மைனர்’ ஆக வருகிறது .
இந்தப் படத்தின் கதை பக்தியும் பரபரப்பும் கொண்டது . அந்த பரபரப்பு படத்தின் ஒரு காட்சியில் தெரிகிறது .
ஓர் ஊரில் உள்ள ஆயிரம் ஆண்டுப் பழமை கொண்ட , சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சிவன் சிலையையும் கோவில் சொத்துக்களையும் , அந்த சிவன் கழுத்தில் உள்ள ஒரு தெய்வீக நாகப் பாம்பு காத்து வருகிறது .
அந்தக் கோவிலின் அறங்காவலர்களாக உள்ள இரண்டு பேரில் நாகர்ஜுனா நல்லவர், சம்பத்ராஜூ விவகாரமான ஆள்.
நாகர்ஜுனாவை எப்படியாவது ஏமாற்றி சிவன் கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்க முயல்கிறார் சம்பத் ராஜு.
அதைத் தடுக்கும் நாகர்ஜுனா, ”சிவன் சொத்து குல நாசம்; அதில் கை வைக்கும் எண்ணத்தை விட்டு விடு ” என்று எச்சரிக்கிறார் .
அதைக் கேட்காத சம்பத் ராஜு, ஒரு நாள் இரவு யாரும் அறியாதவாறு சிவன் கோவிலுக்கும் நுழைந்து குவிந்து கிடக்கும் தங்க நகைகளையும் தங்கக் கட்டிகளையும் திருட முயல்கிறார் .
அதைப் பார்த்த நாகார்ஜுனா அல்ல.. நாகப் பாம்பு திடீர் என விஸ்வரூபம் எடுத்து , பிரம்மாண்டமான தோற்றத்துடன் சம்பத் ராஜைப் பார்த்து சீற, சம்பத் ராஜ் நடுநடுங்கிப் போகிறார் .
இந்தக் காட்சி ரசிகர்கள் வியக்கும் வண்ணம் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறது படக் குழு .
ராம் மோகனின் கதை திரைக்கதை அமைப்பில், அனுப் ரூபன் , ஜான் பீட்டர் இருவரின் இசைக்கு சுகுமார் கணேசன் பாடல்கள் எழுத, ஏ எஸ் மைக்கேல் யாகப்பன் வசனங்களை எழுத
பி எஸ் வினோத் ஆர் சித்தார்த் ஒளிப்பதிவில் , பிரவீன் புடி படத் தொகுப்பு செய்ய, ராம் லக்ஷ்மன் சண்டைப் பயிற்சியில் ,
ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர் , நிக்சன் ஆகியோரின் நடன அமைப்பில் , எஸ் ரவீந்தரின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கும் சோக்காளி மைனர் , விரைவில் தமிழ்த் திரைக்கு வருகிறது