கோல்டன் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.கலைவாணி தயாரிக்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஸ்ரீ – இயக்குனர் அட்லீக்கு மனைவியாகி விட்ட பிரியா ஆகியோரின் இணை நடிப்பில் இளம் பெண் இயக்குனர் ஷிவானி இயக்கி இருக்கும் படம் சோன் பப்டி (இனிக்குமா?)
இதுவரை கலவர கானாக்களையே பாடிவந்த கானா பாலா இந்தப் படத்தில் முதன் முதலாக டூயட் பாடலை பாடி இருக்கிறார் . அதுவும் இது வரை பெண்களை திட்டியே பாடி வந்த பாலாவை இந்தப் படத்தின் மூலம் “பெண்களை போற்றிப் பாடுங்க பாலா … நான் என்ன வழக்கமான ஆளா ” என்று பாடாத குறையாக சொல்லி பாட வைத்து இருக்கிறார் இயக்குனர் ஷிவானி
வழக்கு எண் 18/9 மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கறுப்படித்து நடிக்க வைக்கப்பட்ட ஸ்ரீ இந்த சோன் பப்டி படத்தில் அழகான நகரத்து பையனாக வருகிறார் .
படத்தின் பாடல்கள் அண்மையில் ரேடியோ சிட்டி வானொலியில் வெளியிடப்பட்டது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் நடிகை ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள் .
கிறிஸ்துமஸ் சமயம் அல்லவா? கேக் வெட்டி கொண்டாடி விட்டார்கள் . ஆனா நமக்கு ஒரு துண்டு கூட வரலீங்கோ . (பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே .. plz forgive them ; they dont know what they did by eating that cake )