சூரகன் @ விமர்சனம்

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து,  கூடுதல் திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடிக்க, சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன் , ரேஷ்மா பசுப்புலேட்டி, வின்சென்ட் அசோகன், மன்சூர் அலிகான், வினோதினி வைத்தியநாதன், நிழல்கள் ரவி, மிப்பு சாமி நடிப்பில் , ஜேசன்  வில்லியம்ஸ் உடன்  சேர்ந்து  திரைக்கதை எழுதி, சதீஷ் கீதா குமார்  ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம்.

தலைகீழாக நின்றால்தான்  எல்லா காட்சிகளும் சரியாகத் தெரியும் என்ற ஒரு பார்வைக் குறைப்பாட்டுக்கு ஆளான ஒரு போலீஸ் இளம் அதிகாரி ( கார்த்திகேயன்) , அந்த பிரச்னை காரணமாக ஒரு சம்பவத்தில் தவறுதலாக ஒரு பெண்ணை  சுட்டு விட, பணி நீக்கம் செய்யப்படுகிறார் . 

அக்கா (வினோதினி வைத்யநாதன்) மாமா ( பாண்டியராஜன் ) உடன் இருக்கும் அவர், ஒரு காரில் இருந்து சாலையில் எறியப்படும் பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார் . 
நண்பன் ஒருவன் பணியாற்றும் மதுபான பார் ஒன்றில் அந்தப் பெண் இருந்தது தெரியவர, அவளோடு உடன் இருந்த பெண்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். 

ஒரு கொடூரமான நபர்தான் ( வின்சென்ட் அசோகன்) காரில் இருந்து பெண்ணை உருட்டி விட்டது தெரிய வர, இன்னொரு பெண் அந்தக் கொடூர நபரால் கொல்லப்பட, ஒளிந்து இருக்கும் இன்னொரு நபரைக் கண்டு பிடிக்க, அது ஒரு அமைச்சர் , மற்றும் தொழிலதிபர்களின் பாலியல் வீடியோ கொலை முயற்சியில் போய் முடிகிறது . 

மேற்படி கொடூர நபர் , போலீஸ் அதிகாரியைக் கொல்ல வர, அடுத்து என்ன என்பதே சூரகன். 
உலகமே தலைகீழாகத் தெரியும் காட்சிகளுடன் அட்டகாசமாகத் துவங்குகிறது படம், உடம்பு தெரிய நாயகன் உடற்பயிற்சி செய்வது, மதுபாரில் ஆடிப் பாடுவது  என்று அடுத்து போகிறது . 
சண்டைக் காட்சிகள் கவனிக்க வைக்கிறது . 

ஓர் நிலையில் சராசரி சினிமாவாக மாறுகிறது. 

தெரிந்த நடிகர்கள் இருந்தும் அவர்கள் சாதாரண காட்சிகளில் நடித்து விட்டுப் போகிறார்கள் . 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நல்ல நடிப்பு என்று முக்கிய விஷயங்களில் கவனம் தேவைப்படும் படம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *