விஜய், மகேஷ்பாபு சேர்ந்து நடிக்கும் படம் ?

நாளை ( செப்டம்பர்  27)  வெளியாக இருக்கும் ஸ்பைடர்  படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு ! 

நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஜே சூர்யா ” நான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன் .
 
இந்தப் படம் 125 கோடி ரூபாய்ப ட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது .
 
மகேஷ் பாபு தெலுங்கில் பெரிய ஹீரோ . தமிழ் ரசிகர்கள் கொஞ்ச  பேருக்கு அவரை தெரியும் . தெரியாத பலருக்கு அவர் ஒரு அறிமுக ஹீரோ .
 
ஆக, இந்தப் படத்தில் முருகதாஸ் , ஒரு பெரிய ஹீரோவையும் ஒரு அறிமுக ஹீரோவையும் ஒரே நேரத்தில் இயக்கி இருக்கிறார் என்று கூறலாம் ” என்றார் 
 
“தமிழில் முன்பே நடித்துள்ளேன் . ஆனால் இந்தப் படம் மூலம் எனக்கு,  
தமிழில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று நம்புகிறேன் ” என்றார் ராகுல் பிரீத் சிங் 
 
“முன்பே முருகதாசுடன் துப்பாக்கி படத்தில் பணியாற்றி இருக்கிறேன் .
 
இந்தப் படம் இன்னும் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் . 
 
மகேஷ் பாபு தன் பேச்சில்” முருகதாஸ் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது ரொம்ப நாள் ஆசை , இந்தப் படத்தில் நிறைவேறியது .
 
சந்தோஷ் சிவன் சாரை என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தபோது ” வேணாம்.. தெலுங்கு டைரக்டர்ஸ் டேஸ்ட் ,
 
எனக்கு செட் ஆகாது ‘ என்று மறுத்து  விட்டார் . இந்தப் படத்தில் அவரது ஒளிப்பதிவில் நடித்தது சந்தோசம் . 
 
ராகுல் பிரீத் சிங் ஆசைப்பட்ட படியே இந்தப படத்துக்குப் பிறகு தமிழில் நிறைய வாய்ப்பு வரும் . 
 
எஸ் ஜே சூர்யா சார் வில்லனாக கலக்கி இருக்கிறார் ” என்றார் . 
 
முருகதாஸ் “இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத உழைப்பை இந்தப் படத்துக்குப் போட்டுள்ளேன் .  என் இதயம் துடிக்கும் ஒலி என் காதுகளில் கேட்கிறது .
 
ரசிகர்கள் சொல்லும் முடிவுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் . இது மனிதாபிமானத்தை வலியுறுத்தும் படம் . 
 
விஜய் , மகேஷ்  பாபு  இருவருமே சாதாரண காட்சி மற்றும் வசனத்தைக் கூட தங்கள் ஸ்டைலால் பிரம்மாதப்படுத்தக் கூடியவர்கள் .  
 
செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே ஹீரோயிசம் செய்பவர்கள் . இருவரும் இணைந்து நடிக்கும் படம் அமைந்தால் நான் இயக்க தயார் ” என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *