தமிழ்நாடு, கேரளா உணவுகள் மற்றும் ஐதராபாத் பிரியாணி
வேதனைப் படுத்திய சம்பவங்கள் ….
அப்பா அம்மா பிரிந்து போனது. அப்பாவுக்கு நேர்ந்த கார் விபத்து, அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது.
ஓய்வு நேர வேலை …..
பீரோவில் உள்ள துணிமணிகளை ஒழுங்கு படுத்துவது. புத்தகங்களை அடுக்கி வைப்பது. சினிமா பார்ப்பது. புதிதாக வந்த புத்தகங்களை படிப்பது
உடம்பை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதற்கு….
யோகா மற்றும் உடற்பயிற்சி
காதலர்கள்…..
நடிப்பு, என் குடும்பம் மற்றும் நண்பர்கள்
அடுத்தவர்களிடம் பிடிக்கும் விஷயங்கள் …..
திறமை, உண்மை, கட்டுப்பாடு
திரையுலக ஆசை….
அப்பா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் .
அப்பாவின் அறிவுரை….
எல்லா முடிவுகளையும் நானே எடுக்க வேண்டும்
லட்சியம்….
அப்பா பெருமையாக பேசும் அளவுக்கு வாழ்க்கையில் சாதிப்பது.
கேமராவுக்கு நிற்க வந்தது என்பது , கமல்ஹாசனின் மகள் என்பதானால் உங்களுக்கு ஒன்றும் சிரமமாக அமையவில்லை தானே?
அப்பாவும் அம்மாவும் (நடிகை சரிகா) நான் நடிப்பதற்கு சாதகமாக எதையும் மாற்றித் தரவில்லை. நான் எதையாவது செய்ய விரும்பினால் நானாகவே அதை செய்துகொள்ள வேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள். . அவர்கள் எனக்கு அருகில் இருந்தார்கள்தான். ஆனால் எல்லாவற்றையும் நானே செய்தேன். தோல்விகளும் என்னுடையவை, வெற்றிகளும் முற்றிலும் என்னுடையவை.
கமல் ஹாசனின் மகளாக வளர்ந்ததில் பெருமைதானே?
எனது நண்பிகளுக்கு அவர ஸ்ருதியின் தந்தைதான். இப்போதுகூட அவர்கள் “ஸ்ருதியின் டாடியின் படம் வெளியாகிவிட்டது” என்றுதான் கூறுகிறார்கள். அந்தளவுக்கு என் கல்லூரிக்காலம் காலம் எளிமையாக இருந்தது. பஸ்ஸிலும் ஆட்டோவிலும்தான் போனேன் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தேன். உண்மையில் நான் அவரது மகள்என்றே சொல்ல மாட்டேன் . வேறொருவரின் மகள் போலவே காட்டிக்கொள்வேன். யாராவது என்னிடம் “நீ கமல் ஹாசனின் மகள்தானே?” என்று கேட்டால் கற்பனையாக “இல்லை, நான் டாக்டர் ராமச்சந்திரனின் மகள்” என நான் கூறுவேன். நான் பூஜா ராமச்சந்திரன் என்று ஒரு எனக்கு ஒரு புதுப் பெயர் வைத்துக் கொண்டேன். அவர் எனது தந்தை என்பதை யாரும் அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை. அபோது கமலின் மகளாக இருக்க விரும்பவில்லை. அனால் இப்போது அப்பாவை எண்ணி பெருமை அடைகிறேன் ஆனால் என் வெற்றி எனது வழியில் தானாக வந்தது உங்கள் அம்மா மிக அழகு என அனைவரும் கூறுவார்கள் ஆனால் அம்மா அமைதியாக இருப்பார். மீன் கறி, இறால் கறி சமைத்து தனது நண்பிகளுக்கு பறிமாறுவார்.
உங்கள் தந்தை பெருமைக்குரிய மனிதர் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?
அவரின் திரைப்பட விழாக்களுக்கு நாம் போகும்போதுதான் அதை நான் உணர்ந்தேன். வெறிகொண்ட ரசிகர்கள் அவர்மீது பாய்வார்கள். அப்போது எனது தந்தை முற்றிலும் வித்தியாசமானவராக இருப்பார். இது அப்பாவின் இன்னொரு முகம் என்று உணர்ந்தேன். .
ஒரு குழந்தையாக நீங்கள் அதையெல்லாம் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
நான் அதை விரும்பினேன்.
நான் 6 வயதாக இருந்தபோது அப்பாவின் படத்தில் பாடினேன். பின்னர் சிங்கப்பூருக்கு சென்று முதல் தடவையாக மேடையில் பாடினேன்.
நான் மேடையில் தோன்றியபோது கமல்ஹாசனின் மகள் என்பதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஆனால், பின்னர் நான் பாடி முடித்தவுடன் மீண்டும் ஆர்ப்பரித்தனர். அது எனக்கானது.
‘வி லவ் யூ’ என ரசிகர்கள் கூறினார்கள்.
அந்த பாராட்டு எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது .
உங்கள் பெற்றோரின் பிரிவினால் அதிர்ச்சி அடைந்தீர்களா?
இல்லை. ஆனால் முன்பே சொன்னது போல மிகவும் வருந்தினேன் . ஆனால் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாத நிலையில் மகிழ்ச்சியாக பிரிவது நல்லதுதானே. அவர்கள் தமதுசொந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். தமக்கு விருப்பமானதை செய்கிறார்கள். மகிழ்ச்சியாக இருகிறார்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்வரை அக்ஷராவுக்கும் (தங்கை) எனக்கும் மகிழ்ச்சிதான்.
எப்படிப் போகிறது திரை வாழ்க்கை ?
மிக நன்றாகப்போகிறது நான் கடுமையாக உழைத்து சாதிப்பவர்களை விரும்புகிறேன்.. எல்லாம் நன்மைக்கே என எண்ணுபவள்.நான் . ஒரு உறவு எனது வேலைக்கு குறுக்கீடாக வந்தால் அதை விட்டுவிடுவதற்கு நான் இரண்டாவது தடவை யோசிக்க மாட்டேன். ஒரு வேளை வயதாகும்போது நான் மாறக்கூடும். ஆனால் இப்போது எனது தொழில் வாழ்க்கைக்கு குறுக்காக எது வந்தாலும் அதை தூக்கி எறியத் தயங்கமாட்டேன் .
ரசிகர்களுக்கு சில வார்த்தைகள்…
வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு வாழுங்கள். தவறு செய்தால் தான் எது சரி என்று புரியும். வாழ்க்கை ஒரு முறைதான். இருக்கிற நாட்கள் சந்தோஷமாக வாழுங்கள்
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462