‘என்னை அறிந்தால்’, கதையை அறிந்தால்?

6C3B3448

 நாளைக்கு ,  எல்லோருக்கும் தெரியப் போகிற கதைதான் .

என்றாலும் நமது வாசகக் கண்மணிகளுக்காக கொஞ்சம் முன்னாடியே …!

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுகிறார்கள் சத்யதேவும் (அஜித்) தேன்மொழியும் (அனுஷ்கா). விமானம் கிளம்பும்வரை அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முன் பின் தெரியாது .

பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தபடி இருவரும் பயணிக்க , அந்த நீண்ட பயணத்தில் ‘ஹாய் ஹாயி’ல் ஆரம்பித்து பேசி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சத்யதேவை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் தேன்மொழி.

காபி ஷாப்பில் அடுத்த முறை ஒரு சந்திப்பை நிகழ்த்தும்தேன்மொழி , தனது காதலை சத்யதேவிடம் சொல்ல ஆரம்பிக்கையில் … ஒரு முகமூடிக் கும்பல் சத்ய தேவ் மீது தாக்குதல் நிகழ்த்துகிறது.  தன்னையும் காத்து தேன்மொழியையும் காப்பாற்றும் சத்யதேவ் தாக்குதல் நடத்தியது யார் என்பதை ஒருவாறு யூகிக்கிறார் .

6C3B3413

இங்கே பிளாஷ்பேக் !

தனது பனிரெண்டு வயதில் தந்தையை இழக்கும் சத்யதேவுக்கு மேற்கொண்டு நேர்மையாக வாழ்வதா இல்லை கிரிமினலாக மாறுவதா என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது .

போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ரகசியமாக இயங்கும் ஒரு சமூக விரோதக் கும்பலை பிடிப்பதற்காக , தானும் ஒரு ரவுடி போல மாறி அண்டர் கவர் ஆபபரேஷனில் ஈடுபடுகிறார் . அங்கே விக்டர் என்ற ஒரு கிரிமினலின் (அருண் விஜய்) நட்பு கிடைக்கிறது . ஆனாலும் தனது பணியை சத்யதேவ் மறக்கவில்லை .

ஒரு நிலையில் விக்டரோடும் தான் தேடி வந்த ம் சமூக விரோதக் கும்பலோடும் நேரடியாக மோதும் சத்யதேவ் எல்லோரையும் அழிக்கிறார் , விக்டரைத் தவிர..!

தொடர்ந்து தனது காவல் துறைப் பணியில் சிறப்பாக இயங்கும் சத்யதேவ் முக்கியமான அதிகாரியாக ஆகிறார் .

இந்த நிலையில் கணவனை விவாகரத்து செய்து விட்டு இரண்டு வயது மகளோடு வாழும் ஹேமானிகா ( திரிஷா)) என்ற பெண்ணோடு அவருக்கு காதல் வருகிறது . நான்கு வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்துக்கு முதல்நாள் ஹேமானிகா கொல்லப்படுகிறாள் . அந்த கொலைக்கு பழிவாங்க சத்யதேவ் நினைத்தாலும் , இப்போது தனது மகளாகவே ஆகிவிட்ட அந்த பெண் குழந்தைக்காக, நிதானமடைகிறார்.

2

அதே நேரம் ஹேமானிகாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் பற்றி எந்தத் துப்பும் கிடைக்காத எரிச்சலில் அவர் வேகமாக செயலில் இறங்க , அது அவரது உயிருக்கே ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது.

ஒரு நிலையில்  போலீஸ் வேலையே வேண்டாம் என்று முடிவு செய்யும் சத்யதேவ் , ஹேமானிகாவின் மகளின் வாழ்வுக்காகவே தனது வாழ்நாளை பயன்படுத்தும்  முடிவுக்கு வருகிறார்.

இருவரும் அமைதியாக் வாழ்ந்து கொண்டு இருக்கையில் , ஒரு கடத்தல் வழக்கில் சத்யதேவின் உதவி வேண்டும் என்று ஒரு நண்பர் வற்புறுத்திக் கேட்க, அதில் இறங்குகிறார் சத்யதேவ் .

மீண்டும் விக்டர் !

அப்படி விக்டரை சந்தித்தபோதுதான் இதுவரை தனது வாழ்வில் நடந்த எல்லா இழப்புகளுக்கும் காரணம் விக்டர்தான் என்பது சத்யதேவுக்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு சத்யதேவுக்கும் விக்டருக்கும் நடக்கும் ஆக்ஷன் விளையாட்டே… என்னை அறிந்தால் .

அஜித் படத்துக்கு கதையா முக்கியம் ? அஜித் தானே முக்கியம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →