45 காமெடி நடிகர்கள் நடிக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’

summaave 1
சும்மாவே ஆடுவோம்’ ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கிறார் . 
45 காமெடி நடிகர்கள் நடிக்கும்  அடேயப்பா காமெடிப் படமாக உருவாகியுள்ள இபபடத்தில் அருண் பாலாஜி நாயகனாகனாக நடிக்கிறார். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார்.
இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவரானி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி காதல் சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.  வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சதிஷ் பி.கோட்டாய் படத்தொகுப்பு செய்கிறார்.
summaave 2
 டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
முருகன் மந்திரம், அஸ்மின் ஆகியோர் பாடல்கள் எழுத, தினா, ஜாய் மதி, பாலகுமாரன், ரேவதி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகத்தை சார்லஸ் கவனிக்க, மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
கதை குறித்து கூறிய இயக்குநர் காதல் சுகுமார், ”கூத்து கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது.
அந்த கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
summaave 4
அதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையான படமாக சொல்லியிருக்கிறேன்.
கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்து கலைஞர்களுக்காக வீட்டு மனைகளை இலவசமாகக் கொடுக்கிறார்.
அதன்படி கூத்து கலைஞர்கள் வாழும் அந்த கிராமத்திற்கு கூத்துப்பேட்டை என்ற பெயர் வருகிறது.
கூத்து தொழிலை விட்டால் வேறு ஏதும் தெரியாத அந்த மக்கள், நவீன கால வளர்ச்சிக்கு போட்டி போட முடியாமல் தடுமாறும் நேரத்தில், ஜமீன் அவர்களுக்கு இலவசமாக கொடுத்த அந்த இடத்திற்கு ஆபத்து வருகிறது.
summaave 3
அந்த ஆபத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது காமெடியாக சொல்லியிருக்கிறோம். 
கூத்து என்பது நாகரீக வளர்ச்சியால் அழிந்து வந்தாலும், தற்போது மறைமுகமாக சினிமாவில் கூத்து கலையின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.
இப்படத்தின் கதை மூன்று காலகட்டத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →